சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Nov 2014

பங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்


பங்குச்சந்தை என்றாலே நிறைய பேர் அது ஆபத்தான விஷயம் என்று
ஒதுங்கி விடுகிறார்கள். எனக்கும் சில வருடங்களாகவே பங்குச்சந்தையில்
பணத்தைப்போட்டு நல்ல லாபம் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
லாபம் வரவில்லை என்றாலும் அதைப்பற்றி கற்றுக்கொள்ள வேண்டும்
என்ற ஆசை அதிகமிருந்தது.

எனவே Pan Card ( நிரந்தர வருமானக் கணக்கட்டை ) விண்ணப்பித்து வாங்கியும்
Appllo Sindhuri
என்ற தரகு நிறுவனத்தில் டீமேட் கணக்கு ( Demat Account - பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் உள்ள கணக்கு ) ஆரம்பித்து வெகு நாட்களாய் பணம் போடாமல் இருந்தேன். இந்த வருட தொடக்கத்தில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் விலை அதல பாதாளத்தில் குறைந்தபோது நாம் இப்போதாவது முதலீடு செய்வோம் என்று முடிவெடுத்தேன். சிலரோ சத்யம் நிறுவனம் பட்டியலில் இருந்தே தூக்கப்படும் என்று பயமுறுத்தினர்.

இருந்தாலும் எதோ ஒரு சிறு நம்பிக்கையில் ஜனவரி 23 அன்று வாங்கி விட்டேன்.
முதலீடு செய்யும் போது ஒரே பங்கிலேயே செய்யக்கூடாது.வேறு
சில பங்குகளிலும் முதலீடு செய்தால் நட்டத்தை குறைக்கலாம் என்று படித்தது நினைவுக்கு வர என்னிடம் இருந்த 2000 ரூபாயை இவ்வாறு பிரித்து முதலீடு செய்தேன்.

Sathyam --->50 x 28.50 = 1425
RNRL ------>8 x 52.50 = 420
GVK -------->7 x 20.80 = 125

முதலீடு செய்தபின் அவ்வப்போது சந்தை நிலவரத்தைக் கவனித்து வந்தேன். ஏறியும் இறங்கியும் வந்த சந்தை பயமுறுத்தினாலும் கவலைப்படவில்லை. சரியாக ஐந்து மாதம் கழித்து ஓரளவுக்கு எனக்கு லாபம் வந்தபோது June 23 ஆம் தேதி விற்று விட்டேன். ஏனெனில் நிறைய லாபம் கிடைக்கும் என்றும் தள்ளிப்போடக் கூடாது. இப்போது எனக்கு கிடைத்த தொகை 5000 ரூபாய்.சத்யம் 80 ரூபாய்க்கு போனதால் எனக்கு இந்த லாபம் கிடைத்தது.அதற்கடுத்து இப்போது சந்தை இறங்கிவிட்டது.

இதிலிருந்து நான் புரிந்து கொண்டவை என்னவென்றால்,

1.
விலை குறையும் போது வாங்க வேண்டும்.
அதிகமாகும் போது விற்று விட வேண்டும்.
2.
அதிக லாபத்தை எதிர்பார்க்கக்கூடாது.
3.
அவ்வப்போது சந்தை நிலவரத்தை கவனிக்க வேண்டும்.
4.
பங்குச்சந்தை பற்றிய அடிப்படை தெரிந்து இருக்க வேண்டும்.
5.
தினசரி வர்த்தகத்தில் உடனே இறங்கக்கூடாது.


அதேபோல SuperTex Industries என்ற பங்கை நீங்கள் வெறும் 1000 ரூபாய்க்கு போன அக்டோபர் மாதத்தில் வாங்கியிருந்தால் இப்போது நீங்கள் ஒரு லட்சத்திற்கு அதிபதி ஆயிருக்கலாம்.இதைப்பற்றி பார்க்க . அப்போது இதன் ஒரு பங்கின் விலை 43 காசுகள் . இப்போதோ 53 ரூபாய். எனவே இது 100 மடங்காக உயர்ந்துவிட்டது. இது போல சரியான உத்திகளோடு செய்யல்பட்டால் வெற்றி காண முடியும்.

தயங்கும் பெண்கள் கூட இப்போது முதலீடு செய்து வருகின்றனர். பங்குச்சந்தையில் ஈடுபடவும் அதைப்பற்றிய சந்தேகங்களை போக்கவும் தமிழில் நல்ல இணையதளங்களும் வலைப்பூக்களும் உள்ளன. நீங்களும் நல்ல முதலீட்டாளராக வாழ்த்துகள். பங்குச்சந்தை பற்றிய இணையத்தளங்களின் தொகுப்பு கீழே .

தமிழ் இணையதளங்கள் :

http://pangusanthai.com
http://panguvaniham.wordpress.com/
http://sharedirect.blogspot.com/
http://top10shares.wordpress.com/
http://stock.tamilsasi.com/
http://tamilnithi.blogspot.com/
http://stockintamil.wordpress.com
http://thoughtsintamil.blogspot.com/
http://stocksintamil.com
http://investorarea.blogspot.com/
http://mayashare.blogspot.com/
http://krvijayganesh.wordpress.com/
http://sharehunter.wordpress.com/
http://kmdfaizal.blogspot.com/
http://moneybharati.blogspot.com/
http://sandhainilavaram.blogspot.com/
http://moneybharati.blogspot.com/
http://varthagaulagam.blogspot.com/
http://www.dinamalar.com/business/
http://dailyindiansharemarket.blogspot.com/
http://stocksiva.blogspot.com/
http://mangaloresiva.blogspot.com/
http://porulsey.blogspot.com/
http://panguvanigam.blogspot.com/
http://www.nanayam2007.blogspot.com/
http://panguvanigamtips.blogspot.com/


ஆங்கில இணையதளங்கள் :

http://www.bseindia.com/
http://www.nseindia.com/
http://money.rediff.com/
http://profit.ndtv.com/Home.aspx
http://www.utvi.com/
http://www.moneycontrol.com
http://in.finance.yahoo.com/
http://www.sudarshanonline.com/
http://www.appuonline.com/
http://paisapower.blogspot.com/
http://www.amfiindia.com/
http://www.crnindia.com/
http://finance.tipz.in/
http://moneybazzar.blogspot.com/
http://www.mutualfundsindia.com/
http://www.niftyintra.com/
http://www.nseguide.com/
http://www.bazaartrend.com/
http://www.technicaltrends.com/
http://www.yourbse.com/
http://copperbulls.blogspot.com/

உங்களுக்கு தெரிந்த இணையதளங்களை பற்றி பின்னூட்டம் இடவும் நண்பர்களே!அவை இந்த பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படும்.


1 comment: