சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Nov 2014

காரை அலங்கரிக்க... அழகுபடுத்த...2

 உள்ளே/INTERIOR 
01 /சீட் கவர்
காரின் உள்ளே ஸ்டைலைவிட நம் வசதிக்கேற்ப ஆக்சஸரீஸ்களைச் சேர்ப்பதுதான் புத்திசாலித்தனம்காரின் ஒரிஜினல் சீட்கள் அழுக்காகாமல் தவிர்க்கதரமான சீட் கவர்களை வாங்கிப் பொருத்தலாம்விலை குறைவான காட்டன் மற்றும் வெல்வெட் போன்று தோற்றமளிக்கும் சீட் கவர்கள் மார்க்கெட்டில் ஏராளமாக உள்ளனஇதில்காட்டன் சீட் கவர்கள் 1,000 - 2,000 ரூபாய் வரையும்வெல்வெட் கவர்கள் 2,000 முதல் 3,000 ரூபாய் வரையும் கிடைக்கின்றன.

காருக்குக் கம்பீரத்தைக் கொடுப்பதுலெதர் சீட்கள்தான்இந்த லெதர் சீட் கவர்களில் பல வகைகள் உண்டு. 'நாப்பா’ லெதர்தான் விலை உயர்ந்தது.  இதன் மேற்புறம் இயற்கையான தோல் போன்று காணப்படும்இருக்கையில் உட்காரும்போது மிகவும் சொகுசான அனுபவத்தைக் கொடுக்கும்சின்ன ஹேட்ச்பேக் காரில் இந்த சீட் கவரைப் பொருத்த 40,000 ரூபாய் வரை செலவாகும்எஸ்யூவி கார்கள் என்றால், 75,000 ரூபாய் வரை ஆகும்தோலுக்கு உறிஞ்சும் தன்மை உண்டு என்பதால்சுற்றுப்புறத்தின் வெப்ப அளவைப் பொறுத்துலெதர் சூடாவதும் சில்லென்று இருப்பதும் மாறுபடும்அதனால்வெயில் காலத்தில் கார் கொஞ்சம் வெயிலில் நின்றாலும் லெதர் இருக்கைகள் அதிக வெப்பத்தைக் கக்கும்மேலும்லெதர் இருக்கைகளைத் சலவை செய்து மீண்டும் பயன்படுத்த முடியாது.

கார் லெதர் சீட் கவர்களைத் தைத்துத் தரபிரபலமான கடைகள் இருக்கின்றனஇங்கேஉங்கள் காரின் சீட்டுக்குக் கச்சிதமாகப் பொருந்தும் சீட் கவர்களைத் தைத்துக்கொள்ளலாம்இருக்கைகள் மட்டும் அல்லாமல் டோர் பேட்ஆர்ம் ரெஸ்ட் மற்றும் ஸ்டீயரிங் வீலுக்கும் இந்த லெதர் கவரைப் பொருத்த முடியும்ஆனால்இதற்கு நீங்கள் கூடுதல் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

02 /டேஷ்போர்டு பெயின்ட்டிங்
காருக்கு வெளியே வண்ணத்தை மாற்றுவதுபோலகாருக்கு உள்ளேயும் பெயின்ட் அடிக்கலாம்அதாவதுகாரின் டேஷ்போர்டு வண்ணத்தை மாற்றினாலேகாருக்குத் தனி லுக் கிடைத்துவிடும்இப்போது வரும் கார்களில் பெரும்பாலும் பழுப்பு வண்ணம் அல்லது கறுப்பு வண்ணத்தில்தான் டேஷ்போர்டு இருக்கும்ஆனால்ஜாகுவாரில் இருப்பது போன்று சிவப்பு வண்ணம்லம்போகினி காரில் இருப்பது போன்று நீலம் மற்றும் மஞ்சள் வண்ணம் என நீங்கள் விரும்பும் வண்ணத்துக்குப் பெயின்ட் அடிக்கலாம்இதற்கு 10,000 ரூபாயில் இருந்து 40,000 ரூபாய் வரை செலவாகும்.

03 /ஆன்டி ஸ்கிராட்ச் கிட்
சென்னை போன்ற பெரிய நகரங்களில் எந்த ஸ்கிராட்ச்சும் இல்லாமல் கார் வைத்திருப்பதுகனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றுமுன் மற்றும் பின்பக்க பம்ப்பரின் பக்கவாட்டுப் பகுதிகள்வீல் ஆர்ச்சுகள்கதவுகள் போன்ற இடங்களில்தான் ஸ்க்ராட்ச்கள் அதிகம் ஏற்படும்அதிக ஆழம் இல்லாத ஸ்கிராட்ச்களை எளிதாகச் சரிசெய்து விடலாம்ஆனால்பெயின்ட்டையும்  கிழித்துக்கொண்டு மெட்டல் பாகம் தெரியும் அளவு ஸ்கிராட்ச் ஆகி இருந்தால்அதைச் சரிசெய்ய அதிக செலவுவைக்கும்மேலும்இந்த ஸ்கிராட்ச்சை அப்படியே விட்டுவிட்டால்துருப்பிடித்துவிடும்பெரிய ஸ்கிராட்ச்களைச் சரிசெய்ய ஆன்டி ஸ்கிராட்ச் கிட் வாங்கலாம்மேலே சொன்னதுபோல ஸ்கிராட்ச் ஆகக்கூடிய இடங்களில் இதை ஒட்டிவிட்டால் போதும்இது ஒட்டியிருப்பது கண்ணுக்குத் தெரியாதுஸ்க்ராட்ச்சுகள் மட்டும் இல்லாமல்சிறு கற்கள்தூசி ஆகியவற்றில் இருந்தும் இது பாதுகாக்கும். 'ஆட்டோகிராஃபிக்ஸ்’ என்ற பிராண்டுதான் அதிகம் கிடைக்கிறதுஇதன் விலை 1,000 ரூபாயில் இருந்து ஆரம்பம்.

04 /காரைத் துடைங்கப்பா!
வெளியே பளிச்சென இருந்தால் மட்டும் போதாதுகாருக்கு உள்ளே  அழுக்குதூசி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்காலில் அணியும் செருப்புஷூக்களில் ஒட்டிக்கொண்டு வரும் மண்சேறுதான் காரை அதிகம் அசுத்தப்படுத்தும்காருக்குள் தூசு அதிகம் இருந்தால் அது ஜலதோஷம்காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகளை ஏற்படுத்தும்வாரம் ஒருமுறை வாக்யூம் கிளீனர் கொண்டு காரைச் சுத்தப்படுத்த வேண்டும்காலணிகளில் இருந்து வரும் மண்காரின் தரை மூலைகளில் படிந்துகொண்டே இருக்கும்ஒவ்வொரு முறையும் சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுசென்று வாட்டர் வாஷ் செய்வதைவிடஅவ்வப்போது நாமே வாக்யூம் க்ளீனர் கொண்டு சுத்தம் செய்யலாம்தரமான வாக்யூம் க்ளீனர்கள் 900 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை கிடைக்கின்றன.

05 /ஃப்ளோர் மேட்
காருக்கு உள்ளே அழுக்கு தெரியாமல் காப்பதுதான் ஃப்ளோர்மேட்விலைக்கு ஏற்ற வகையில் க்ளாத்ரப்பர் மற்றும் ஆல் வெதர் ஃப்ளோர் மேட் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
கிளாத்அதாவது துணியால் ஆன ஃப்ளோர் மேட் என்பதுமேல் பக்கம் துணியிலும் பின் பக்கம் ரப்பரிலும் இருக்கும்இதன் விலை 450 ரூபாய்அடுத்தபடியாக முழுக்க முழுக்க ரப்பர் மேட்இதன் விலை 550 ரூபாய்பார்க்க பளபளப்பாகவும்நீடித்து உழைக்கக் கூடியதாகவும் இருக்கும் மேட்டுகள் 'ஆல் வெதர் மேட்.’ இதன் விலை 750 ரூபாயில் இருந்து ஆரம்பம்இது நீரை உறிஞ்சும் தன்மைகொண்டது என்பதோடுமிகவும் அகலமாகவும் இருக்கும்ஆனால்இங்கே சவாலே உங்கள் காருக்கு அது சரியாகப் பொருந்துகிறதா என்பதுதான்சரியாகப் பொருந்தாத ஃப்ளோர் மேட் உபயோகப்படுத்துவதால்எந்தப் பயனும் இல்லை.

தரம் குறைவான வினைல் ஃப்ளோர் மேட்- எந்தக் காலத்திலும் பயன்படுத்தாதீர்கள்இத்தகைய ஃப்ளோர் மேட் வழுக்கும் என்பதோடுகாரை ஓட்டும்போது திடீரென பிரேக் பெடல் அல்லது ஆக்ஸிலரேட்டர் பெடலில் சிக்கிக்கொண்டால் பெரிய ஆபத்தில் முடியும்.

06 /கியர் இண்டிகேட்டர்
நாம் எந்த கியரில் செல்கிறோம் என்ற குழப்பம் எல்லோருக்குமே வரும்அந்தக் குழப்பத்தைத் தீர்க்கத்தான் இந்த கியர் இண்டிகேட்டர்ஜெர்மனைச் சேர்ந்த கேஸ்லாக் எனும் நிறுவனம் கியர் இண்டிகேட்டர்களை விற்பனை செய்து வருகிறதுநாம் எந்த கியரில் சென்றுகொண்டு இருக்கிறோம் என்பதைகியர் லீவரிலேயே உள்ள எல்சிடி டிஸ்ப்ளே மூலம் இது காட்டும்எல்லா கார்களுக்கும் பொருந்தும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கும் இதன் விலை 10,000 ரூபாயில் இருந்து ஆரம்பம்.

07 ஹெட் யூனிட்
சிறந்த மியூஸிக் சிஸ்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முதலில் ஒரு நல்ல ஹெட் யூனிட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்ஹெட் யூனிட் என்பது டிஸ்பிளேசிடியை உள்ளே செலுத்தும் பகுதியாகும்இதில்தான் சிடிஎப்.எம் ரேடியோகன்ட்ரோல் வசதிகள் இருக்கும்குறைந்த விலைக்கு ஹெட் யூனிட் வேண்டும் என்றால்அதில் ரேடியோ மற்றும் பென் டிரைவ் இணைக்கும் வசதி மட்டும்தான் இருக்கும்ஒரு ஹெட் யூனிட்டின் குறைந்தபட்ச விலை 2,000 ரூபாய்சிடி சேஞ்சர்எஃப்.எம் ரேடியோ உள்ளிட்ட வசதிகள் கொண்ட மாடலின் விலை 4,000 ரூபாயில் இருந்து 40,000 ரூபாய்க்கும் மேல் கிடைக்கிறது.

08 /வீடியோ சிஸ்டம்
வீடியோ சிஸ்டத்தை வாங்கும் முன் அதில் டிவிடி ப்ளேயர்வீடியோ கேம்ஸ்கம்ப்யூட்டர்ஜிபிஎஸ் என நமக்கு என்னென்ன வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்துவிட வேண்டும்.
அதன் பிறகுஅதை காரில் எந்த இடத்தில் பொருத்த வேண்டும் என முடிவு செய்யுங்கள்பொதுவாகமுன் பகுதியின் மேற்கூரையிலும் முன்பக்க இருக்கைகளின் தலைப் பகுதியின் பின் பக்கத்திலும் பொருத்துவார்கள்கூடுமானவரை முன் பக்கத்திலோ அல்லது டேஷ் போர்டிலோ வீடியோ சிஸ்டத்தைப் பொருத்துவதைத் தவிர்த்து விடுங்கள்ஏனெனில்ஓட்டுநரின் கவனம் சிதறும்.

09 /ஸ்பீக்கர்
மியூஸிக் சிஸ்டத்தின் முக்கிய அம்சமேலவுட் ஸ்பீக்கர்கள்தான்பொதுவாகபக்கத்துக்கு ஒன்று என்ற அளவில் இரண்டு லவுட் ஸ்பீக்கர்களே போதுமானதாக இருக்கும்ஆனால்சத்தம் அதிகமாக வேண்டும் என்பதற்காக ஸ்பீக்கர்களின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே போகலாம்மெல்லிய சத்தம்கூட துல்லியமாகக் கேட்பதற்காக லவுட் ஸ்பீக்கர்களோடு சப்-ஊஃபர்களும் பொருத்தப்படுகின்றனஇவைதான் மியூஸிக் சிஸ்டத்தின் மதிப்பைக் கூட்டும்.

ஸ்பீக்கர் வாங்கும்போதுநீங்கள் அடிக்கடி கேட்கும் பாடல்களின் சிடியையும் கையோடு எடுத்துச் செல்லுங்கள்அந்தப் பாடல்களைப் புது ஸ்பீக்கர்களில் கேட்கும்போது ஸ்பீக்கர் சரியாக இருக்கிறதா என்பதைச் சோதித்துப் பார்க்க உதவும்ஸ்பீக்கர்களை எந்த இடத்தில் பொருத்தப்போகிறோம் என்பது மிகவும் முக்கியம்ஏற்கெனவே காரில் இருக்கும் ஸ்பீக்கரின் அளவுக்கேற்ப புது ஸ்பீக்கர்களை வாங்குங்கள்அளவு அதிகமான ஸ்பீக்கரைக் கதவில் பொருத்தும்போதுபவர் விண்டோ கண்ணாடிகளை இயக்குவதில் பிரச்னை ஏற்படும்உங்கள் காருக்குள் இருக்கும் இடத்தைப் பொறுத்துஎத்தனை சப்ஊஃபர்கள் தேவை என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
குறைவான விலையுடன் சின்ன அளவிலான கோக்ஸியல் (Coaxial) ஸ்பீக்கர்களை காரில் பொருத்துவது சுலபம்அதேசமயம்இதில் சத்தம் அதிகமாகக் கேட்காதுஸ்பீக்கர்களை டேஷ் போர்டுகதவுகள்பூட் ஆகியவற்றில் பொருத்த வேண்டும்.


10 /ஆம்ப்ளிஃபயர்ஸ்
ஆம்ப்ளிஃபயரின் பணியேகுறைந்த அளவில் வரும் சத்தத்தை அதிக அளவாக்கி ஸ்பீக்கர்களுக்குத் தருவதுதான். 20 வாட்டில் ஆரம்பித்து 1000 வாட் வரை ஆம்ப்ளிஃபயர்கள் இருக்கின்றனஇதன் விலையும் திறனுக்கேற்ப சில ஆயிரங்களில் இருந்து பல ஆயிரங்களுக்கு அதிகரிக்கும்ஆம்ப்ளிஃபயரின் அளவுஎடை ஆகியவற்றை வைத்தே அதன் தரத்தைக் கண்டுபிடித்துவிட முடியும்தரமான ஆம்ப்ளிஃபயர்கள் எடை அதிகமாகவும் அளவில் கொஞ்சம் பெரிதாகவும் இருக்கும்.

முக்கியமாகஇவற்றைப் பொருத்தும்போது தரமான ஒயர்களைப் பயன்படுத்த வேண்டும்மியூஸிக் சிஸ்டம்ஸ்பீக்கர்கள் பொருத்தும்போதுகாரின் அழகு குலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்சென்னையில் டெக்னோகிராட்மெட்டல் எஃபெக்ட் போன்ற பிரபலமான கடைகள் மியூஸிக் சிஸ்டம் பொருத்துவதில் சிறந்து விளங்குகின்றன!

11 /ஹார்ன்கள்
பெரும்பாலும்இன்று விற்பனையாகும் சில கார்களில்பேஸ் வேரியன்ட் மாடலில் ரொம்பவே வீக்கான ஹார்ன்தான் கொடுத்திருப்பார்கள்ஹார்னை வைத்தே நம்மால் பின்னே வருவது பஸ்ஸா அல்லது ஆட்டோவா எனக் கண்டுபிடிக்க முடியும்ஆனால்இது போல சிங்கிள் ஹார்ன் கொண்ட கார்கள் ஹார்ன் அடித்தால்அது ஒரு கார் ஹார்னுக்கான அம்சங்களுடன் இல்லாமல்ரொம்பவே சிம்பிளாக இருக்கும்இதற்கு மாற்றாக ஆஃப்டர் மார்க்கெட் ஹார்ன்கள் நிறைய கிடைக்கின்றனஹெல்லாபாஷ்ரூட்ஸ்மிண்டா என நிறையத் தயாரிப்புகள் உள்ளனஸ்கோடாஃபோக்ஸ்வாகன் கார்களின் டிரேட் மார்க் ஹார்னான 'ட்ரம்பெட்’ வகை ஹார்ன்கள் மிகப் பெரிய ஹிட்ஹேட்ச்பேக் கார்களுக்கான ஹார்ன் 700-900 ரூபாய் வரையும்செடான் கார்களுக்கான ஹார்ன் 700-1,500 ரூபாய் வரையிலும்அதிக ஒலி எழுப்பக்கூடிய எஸ்யூவி கார் ஹார்ன்கள் 2,000- 2,500 ரூபாய் வரையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.  

12 /நம்பர் பிளேட்
ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்தான் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு வந்துவிட்டாலும்இன்னும் பல மாநிலங்களில் இது நடைமுறைக்கு வரவில்லைஆனால்ஸ்டைலுக்காக இப்போது பலரும் ஹை-செக்யூரிட்டி நம்பர் பிளேட்களைப் போலவே காட்சியளிக்கும் நம்பர் பிளேட்டை விரும்பிப் பொருத்துகின்றனர்இதன் விலை 1,100 ரூபாய் முதல் ஆரம்பம்.

13 /கார் செல்போன் மவுன்ட்
ஆண்ட்ராய்ட் செல்போன்கள் தாராளமாகவும் விலை குறைவாகவும் இப்போது கிடைப்பதால்அதில் உள்ள கூகுள் மேப்ஸ் அப்ளிகேஷனை நேவிகேஷனுக்காகப் பலரும் பயன்படுத்துகிறார்கள்தனியாக ஒரு நேவிகேஷன் சிஸ்டத்தை வாங்குவதைவிட இது விலை குறைவானது என்பதோடுநம்பகத்தன்மை வாய்ந்ததுஆனால்மேப்ஸைத் தெள்ளத் தெளிவாகப் பார்க்க செல்போன் மவுன்ட் மிக அவசியம்இவை மார்க்கெட்டில் பல டிசைன்களில் நிறைய கிடைக்கின்றனவிலை குறைவாக இருக்கிறது என்று தரம் குறைந்த பிளாஸ்டிக்குகள் கொண்ட மவுன்ட் வாங்காதீர்கள்இதில் போனைப் பொருத்திவிட்டு ஓட்டும்போதுசின்ன மேடு பள்ளமாக இருந்தாலும் அதிர்வில்  உடைந்துவிடும்விலை உயர்வானதரத்தில் சிறந்த நல்ல செல்போன் மவுன்ட்டின் விலை 1,000 ரூபாயில் துவங்கி, 6,000 ரூபாய் வரை கிடைக்கிறது.
14 /செல்போன் சார்ஜர்/இன்வெர்ட்டர்
நேவிகேஷன்ப்ளூ-டூத் எனப் பல வசதிகளை இப்போது காரில் செல்லும்போது பயன்படுத்துவதால்மிக வேகமாக சார்ஜ் குறையும்இதைச் சரிக்கட்ட நமக்கு இருக்கும் ஒரே வழிகாரில் இருக்கும் 12V பவர் சாக்கெட் வழியாக யூஎஸ்பி சார்ஜர் மூலம்போனை சார்ஜ் செய்வதேமிகச் சிறிய சிங்கிள் பாயின்ட் சார்ஜரில் இருந்து எந்த வகையான போனையும்டேப்ளெட்டையும் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய மல்ட்டி பின் சார்ஜர்கள் வரை விற்பனையில் இருக்கிறதுலேப்டாப் போன்றவற்றை சார்ஜ் செய்ய வேண்டும் என்றால்அதற்கென இன்வெர்ட்டர்களும் விற்பனையில் இருக்கின்றனஇதில் முக்கியமான விஷயம்மிகவும் விலை குறைந்ததரத்தில் மோசமான தயாரிப்புகள் நிறையக் கிடைப்பதுதான்இவற்றின் சார்ஜிங் பாயின்ட்கள் மிக எளிதாக உடைந்துவிடும்எனவேஓரளவுக்குச் செலவு செய்து தரமான சார்ஜரையே வாங்கிப் பயன்படுத்துங்கள்கேப்டேஸ்பிளாக் கேட்ட்ராபிகூல் போன்ற பிராண்டுகள் உள்ளனஇவை 600 ரூபாயில் துவங்கி 10,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

15/கார் பெர்ஃப்யூம்
.சி காரில் சில்லென்ற குளிரின் இடையே நறுமணம் பரப்பும் பெர்ஃப்யூம்கள் விதவிதமாக இருக்கின்றன.சி கன்ஸோலில் பொருத்தக்கூடியதுடேஷ் போர்டில் வைப்பதுஸ்பிரே போலத் தெளிக்கக்கூடியதுகயிறு கட்டித் தொங்கவிடுவது எனப் பல வடிவங்களில் வருகின்றன.
ஆம்பி ப்யூர் எனும் நிறுவனம் கார் .சி கன்ஸோலில் பொருத்தும் பெர்ஃப்யூம்களைத் தயாரிக்கிறதுஇதன் விலை ரூ.165. இதன் ரீஃபில் விலை ரூ.99. சுமார் ஒன்றரை மாதம் வரை இது மணம் பரப்பும்.
டேஷ் போர்டில் வைத்துப் பயன்படுத்தக் கூடிய பெர்ஃப்யூம்.சி- இயக்கியவுடன் குளிர்ச்சிக்கு ஏற்பகார் முழுவதும் வாசனையைப் பரப்பும்இதில்ஜப்பான்சீனத் தயாரிப்புகள் பிரபலம்சீனத் தயாரிப்புகளாக இருந்தால், 100 ரூபாய்க்கே கிடைக்கும்இதில்தரமான ஜப்பானிய பெர்ஃப்யூம்களின் விலை ரூ.400 முதல் ஆரம்பமாகிறதுஸ்ப்ரே வகை பெர்ஃப்யூம்கள்ரூம் ஃப்ரெஷ்னர் வகையைச் சார்ந்தவைஇவை 50 ரூபாய் முதல் கிடைக்கின்றனபெர்ஃப்யூம்களில் தற்போது புதுமையான வகைஹேங்கிங் பெர்ஃப்யூம்தான்பஞ்சைப் போல இருக்கும் இந்த வகை பெர்ஃபியூம்களின் மணம்ஒரு மாதம் வரை நீடிக்கும்இதன் விலை 150 ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது.

16 /மினி ஃப்ரிட்ஜ்
கார்களுக்கான மினி ஃபிரிட்ஜ் இப்போது விற்பனைக்குக் கிடைக்கின்றனஇதற்குத் தேவையான மின்சக்திகாரிலிருக்கும் பவர் சாக்கெட்டில் இருந்து எடுக்கலாம்குறைவான மின் சக்தியே இதற்குப் போதுமானது. 21 லிட்டர் அளவுகொண்ட ஃபிரிஜ் விலை ரூ.7,500.

17/அயான் ஜெனரேட்டர்
ஹாங்காங் நிறுவனமான ஷார்ப் நிறுவனம்போர்ட்டபிள் அயான் ஜெனரேட்டரை விற்பனை செய்கிறதுஇதை காருக்குள் வைத்துவிட்டால் வைரஸ்பாக்டீரியாபூஞ்சைகாளான் போன்ற நுண்ணுயிர்களைக் கொன்றுவிடும்அலர்ஜியால் சிரமப்படுபவர்களின் கார்களில் நிச்சயம் இருக்க வேண்டிய சாதனம் இதுஇதன் விலை 4,200 ரூபாய்.

18 /ஆன்டெனா
ரேடியோ கேட்பதற்கு மட்டும்தான் ஆன்டெனாவின் உதவி தேவை என்பது போய்இப்போது அலங்காரப் பொருளாகவும் மாறிவிட்டதுகாரில் இருக்கும் கம்பெனி ஃபிட்டிங் ஆன்டெனா பிடிக்காதவர்கள்காரின் தோற்றத்துக்கு ஏற்றவாறுகூடுதல் அழகு சேர்க்கும் ஆன்டெனாவை வெளிமார்க்கெட்டில் வாங்கிப் பொருத்தலாம்.

வெளிமார்க்கெட்டில் விதவிதமான ஆன்டெனாக்கள் கிடைக்கின்றன. 'மோட்டாரைஸ்டு ஆன்டெனா’ என்றால்காரை ஸ்டார்ட் செய்ததும் தானாகவே மோட்டார் மூலம் அது நீண்டுகொள்ளும். 'கிளாஸ் ஸ்டிக்கிங் ஆன்டெனா’ என்பது காரின் பின்பக்கக் கண்ணாடியில் ஸ்டிக்கர் போன்று ஒட்டப்படுபவைஆனால்பார்வைக்கு இது ஆன்டெனா மாதிரி தெரியாதுஅதேபோல்மீனின் வால் பகுதி போன்று சின்னதாக காரின் கூரையில் இருக்கும் 'ஃபின் ஆன்டெனா’ வின் விலை 1,000 ரூபாய் துவங்கி 4,000 ரூபாய் வரை விற்பனையாகிறது.
19 /வுட் ஃபினிஷ்
கார் வாங்கும்போது பிளாஸ்டிக்கால் ஆன டேஷ் போர்டு நம் ரசனைக்குச் சரிப்பட்டுவராமல் இருந்தால்கவலைபடத் தேவை இல்லைசொகுசு கார்களில் இருக்கும் 'வுட் ஃபினிஷ்’ அதாவதுமர வேலைப்பாடுகளைநமக்குக் கட்டுபடியாகிற விலையில் காரின் டேஷ் போர்டுக்குக் கொண்டுவர முடியும்.
ஸ்டிக்கர் போல இருக்கும் 'ஸ்டிக் டைப் வுட் ஃபினிஷ்’ இப்போது பரவலாகக் கிடைக்கிறதுவிலை, 1,000 ரூபாயில் துவங்கி காரின் டேஷ் போர்டு அளவுக்குத் தகுந்தது போல மாறும்இதுவே மொத்த பேனலையும் மாற்றுவதாக இருந்தால், 3,500 ரூபாயிலிருந்து 4,000 ரூபாய் வரை செலவாகும்.

20 /ஸ்டைல் ஸ்டீயரிங்
ஸ்டீயரிங் வீல் மாடிஃபிகேஷன் இப்போது அதிக அளவில் செய்யப்பட்டுவருகிறதுஃபார்முலா-1 கார்களில் இருப்பது போன்ற ஸ்டைலான ஸ்டீயரிங் வீல்கள் இப்போது விற்பனைக்குக் கிடைக்கின்றனஆனால்ஸ்டீயரிங் வீலை மாற்றுவது என்பது சாதாரண விஷயம் இல்லைகாரின் ஒரிஜினல் ஸ்டீயரிங்கைக் கழற்றிவிட்டு அதற்கான இடத்தில் சரியாகப் பொருந்தக்கூடிய ஸ்டீயரிங் வீலை மட்டுமே பொருத்த வேண்டும்தவறான சைஸ் ஸ்டீயரிங் வீலைப் பொருத்தினால்காரின் ஓட்டுதல் தரமும் கையாளுமையும் முழுவதுமாகப் பாதிக்கும்சின்ன சைஸ் ஸ்டீயரிங் வீல்கள் ஸ்போர்ட்டியாக இருக்கும் என்பதோடுபிடித்து ஓட்டுவதற்கும் மிக வசதியாக இருக்கும்ஆனால்நீங்கள் நீண்ட தூரம் காரைத் தொடர்ந்து ஓட்டினால்இந்த சின்ன சைஸ் ஸ்டீயரிங் வீல் கைகளுக்கு வலியை ஏற்படுத்தும்பார்க்கிங் செய்வதும் சிரமமாக இருக்கும்மோமோஸ்பார்க்கோ.எம்.பி உள்ளிட்ட தரமான ஸ்டீயரிங் வீல் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்இவற்றின் விலை 12,000 ரூபாயில் இருந்து துவங்குகிறது.  


No comments:

Post a Comment