சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Nov 2014

பென்ஸ் எனும் பிரம்மாண்ட நாயகன் !

கார்ல் பென்ஸ் பெட்ரோலில் இயங்கும் காரை முதன்முதலில் உருவாக்கியவர் என்கிற பெருமை பெற்றவர் . அடிப்படையில் இவர் அப்பா ஊர்திகள் சார்ந்த பொறியியலில் ஆர்வம் மிக்கவர். அவர் ஒரு ரயில் விபத்தில் இவரின் இரண்டாம் வயதில் மரணமடைந்து விட, இவரின் அம்மா இவரை வளர்த்தெடுத்தார்.


இவர் மெக்கானிக்கல் துறையில் பட்டம் பெற்றபின் பல்வேறு கம்பெனிகளில் வேலை பார்த்தார் ;பின் தானே வொர்க்ஷாப் நடத்தினார் அதில் பங்குதாரர் ஏமாற்ற இவர் மனைவி பெர்த்தாவின் வரதட்சணை முழுக்க அக்கடனை அடைக்கவே போனது.பின் பல்வேறு ஆட்டோமொபைல் இன்ஜின்களை உருவாக்கும் நிறுவனத்தை உருவாக்கினார், இரண்டு ஸ்ட்ரோக் பெட்ரோலிய இன்ஜினை உருவாக்கினார். அதீத உழைப்புக்கு பின் நான்கு ஸ்ட்ரோக் பெட்ரோலில் இயங்கும் காரை பேடன்ட் செய்தார்; மரத்தாலான டயர்கள் பயன்படுத்தப்பட்டன. பெட்ரோல் தட்டுப்பாடு வேறு இருந்தது; பார்மசிகளில் இருந்து வாங்கித்தான் மக்கள் பயன்படுத்தினார்கள்.
ஒரே ஒரு கியர் இருந்ததால் மலைகளில் ஏறுவது கடினமாக இருந்தது, இவர் மனைவி இருநூறு கிலோமீட்டர் தூரத்துக்கு தைரியமாக காரை எடுத்துக்கொண்டு அதில் ப்ரேக் லைனிங் சேர்த்து, கூடவே ஒரு ஷு தைப்பவரிடம் சொல்லி ப்ரேக் ப்ளாக்களில் லேதரை சேர்த்து தைக்க சொல்லி இரண்டு பிள்ளைகளோடு போய் மீண்டும் வீடு வந்து சேர்ந்தார் ;அது இக்காரை பிரபலப்படுத்தியது. இதனாலேயே இன்னுமொரு கியரை சேர்த்து காரை மலைகளிலும் ஓட்டுகிற மாதிரி மாற்றினார் பென்ஸ். சில வருடங்களுக்கு பின் பொருளாதார மந்தநிலை காரணமாக டையாம்லர் பென்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்தன ;அப்போதிலிருந்து இன்றைக்கு பார்க்கும் மூன்று நட்சத்திர முத்திரை உருவானது, பெட்ரோலில் இயங்கும் முதல்காரை விற்பனைக்கு கொண்டு வந்த முதல் மனிதர் பிறந்த தினம் இன்று.

No comments:

Post a Comment