சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Nov 2014

வெறும் விளையாட்டு அல்ல!

ஈரான் நாட்டில் பெண்கள் கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட அவுட்டோர் விளையாட்டுகளை விளையாட 2012ம் ஆண்டு முதல் அரசாங்கம் தடை விதித்துள்ளது. 'ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கத்தான் இந்தத் தடைஎன்கிறது ஈரான் அரசாங்கம். இதை எதிர்த்து பந்தும் கையுமாகக் களத்தில் குதித்திருக்கிறார் ஒரு பெண்.



லண்டனைச் சேர்ந்த கோன்ச்சே கவாமி, இப்போது ஈரானில் வசித்துவருகிறார். லண்டன் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்த கவாமி, ஆண் பெண் இருவருக்கும் விளையாட்டுத் துறையில் சம உரிமை தர வேண்டும் என்பதற்காகக் குரல் கொடுத்து வருகிறார். ஜூன் மாதம் 20ம் தேதி ஈரானில் உள்ள ஆசாதி விளையாட்டு அரங்கில் நடந்த வாலிபால் லீக் போட்டியின்போது, தனது நண்பர்களுடன் இணைந்து ஆண் பெண் இருவருக்கும் விளையாட்டு உரிமை சமமாக இருக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தார். போலீஸார் இவரையும் இவர் குழுவினரையும் தாக்கினர். பிறகு விடுவித்துவிட்டாலும் உலகின் பல பகுதிகளில் ஈரான் போலீஸின் நடவடிக்கைக்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

ஒரு வாரம் கழித்து கவாமி மீண்டும் கைதுசெய்யப்பட்டு சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார். தனிச் சிறையில் 100 நாட்களுக்கு மேலாக அடைக்கப்பட, அதை எதிர்த்து அக்டோபர் 1, 2014ல் சிறைக்குள்ளேயே போராட்டம் நடத்தினார். ஆனாலும் கவாமிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கவாமியை விடுதலை செய்யச் சொல்லி, லட்சக்கணக்கானோர் இணையக் கோரிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

சிறைத் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவாமி உண்ணாவிரதம் இருந்துவருகிறார். ஈரானில் உள்ள இங்கிலாந்துவாசிகள் அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி இணையதளத்தின் மூலம் ஐந்து லட்சம் ஆதரவாளர்களைத் திரட்டிவருகின்றனர். ஈரான் அரசாங்கமோ, 'அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரம் செய்ததாலே கைது செய்யப்பட்டார்' என்கிறது.


வாலிபாலில் உரிமைக் காற்றை ஊதிப் பெரிதாக்கிவிட்டார் கவாமி!


No comments:

Post a Comment