ரஜினிகாந்த் புதிதாக ஒரு படத்தை ரிலீஸ் செய்யப்போகிறார் என்றாலே...பயங்கர பரபரப்பு கிளம்பிவிடும். படம் ரிலீஸாகி கல்லா நிறைந்ததும், அத்தனையும் காணாமல் போய்விடும்.
தற்போது, ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 அன்று 'லிங்கா' படம் ரிலீஸ் என்று தேதி குறிக்கப்பட்ட நிலையில், பாடல் வெளியிட்டு விழாவில் அரசியல் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் ரஜினி.
இதைப் பற்றி மீடியாக்களில் செய்திகள் படபடக்கின்றன. அரசியல் தலைவர்களும் ஆளாளுக்குக் கருத்து கந்தசாமிகளாகியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், உங்களுடைய நினைவலைகளைக் கிளறுவதற்காக 2007 ஆம் ஆண்டில் ரஜினி நடித்த 'சிவாஜி' படம் வெளியான சூழலில், எழுதப்பட்ட கோவணாண்டி கட்டுரை இங்கே இடம் பிடிக்கிறது...
தற்போது, ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 அன்று 'லிங்கா' படம் ரிலீஸ் என்று தேதி குறிக்கப்பட்ட நிலையில், பாடல் வெளியிட்டு விழாவில் அரசியல் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் ரஜினி.
இதைப் பற்றி மீடியாக்களில் செய்திகள் படபடக்கின்றன. அரசியல் தலைவர்களும் ஆளாளுக்குக் கருத்து கந்தசாமிகளாகியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், உங்களுடைய நினைவலைகளைக் கிளறுவதற்காக 2007 ஆம் ஆண்டில் ரஜினி நடித்த 'சிவாஜி' படம் வெளியான சூழலில், எழுதப்பட்ட கோவணாண்டி கட்டுரை இங்கே இடம் பிடிக்கிறது...
சிவாஜி'யாக அவதாரமெடுத்திருக்கும் முன்னாள் சிவாஜி ராவ்... இந்நாள் 'ரஜினி அங்கிள்' அவர்களுக்கு கோவணாண்டியின் கோடானுகோடி வணக்கமுங்க.
ஒவ்வொரு படத்துலயும் ஒலிக்கற உங்க கொள்கைப் பாட்டுக்கு முன்னால எவனும் நிக்கமுடியாது. அதுலயும் இந்த 'சிவாஜி' படத்துல ‘காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா?'னு சும்மா பின்னி பெடலெடுத்திருக்கீங்க. ‘அதுக்கே டிக்கெட் காசு 50 ரூபாயும் சரியாப்போச்சுடா'னு நிச்சயமா தமிழ்நாடே பேசும்!
அப்புறம், ‘காவிரி ஆறு'னு நீங்க சொன்னதுமே... அந்த 'ஒரு கோடி ரூபாய்' வாக்குறுதி என்னோட நினைப்புக்கு வந்து தேவையில்லாம இம்சை பண்ணுதுங்க. என்னதான் யோசிச்சாலும் அதுமட்டும் மறந்து போகமாட்டேங் குதுங்க. ஆனா, உங்களுக்கு மறந்துபோயிருக்கும்... கொஞ்ச காலத்துக்கு முன்ன 'கங்கையையும் காவிரியையும் இணைக்க முதல் கல்லை நான் தூக்க தயார்'னு சொன்னீங்களே ரஜினி, அதைச் சொல்றேன்.
உங்களை ஒதுக்கின 'உங்க' கூட்டம், 'காவிரியை மீட்காம ஓயமாட்டோம்'னு நெய்வேலியில பக்காவா 'படம்' காட்டினாங்க. பொங்கி எழுந்த நீங்களோ, 'நதிகளை இணைக்காமல் ஓயமாட்டேன்' என்று பதிலுக்கு சென்னையில 'பலம்' காட்டினீங்க. 'நதிகளை இணைக்க என்னுடைய பங்காக ஒரு கோடி ரூபாயை தருகிறேன்'னு உலகப் பார்வையையெல்லாம் உங்க மேல விழும்படி பரபரப்புக் கிளப்பினீங்க. அதுக்குப் பிறகு, அந்த விஷயத்தை நட்டாத்துல விட்டுட்டு... 'காவிரி மறந்து போகுமா... கருவாடு பறந்து போகுமா'னு குத்தாட்டம் போட ஆரம்பிச்சிட்டீங்க.
'என் ஒரு துளி வியர்வைக்கு... ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழ் அல்லவா..'னு ஏற்கெனவே ஒரு பாட்டைப் பாடி வெச்சிருக்கீங்க.
தங்கக்காசு மட்டுமில்ல... உங்களுக்காகத் தங்கத்துல சிம்மாசனமே கொடுக்கத் 'தங்கத் தமிழன்' தயாரா இருந்த காலம் கூட உண்டுங்க.
எங்கத் தமிழ்நாட்டுச் சனங்க ரொம்ப நல்லவங்க... அப்பாவிங்க... சாதி, மத, மொழி பேதமெல்லாம் பார்க்க மாட்டாங்க... வந்தாரை வாழவைக்கும் தமிழகம்ங்கற பெருமைக்கு பங்கம் வர்றாப்பல எப்பவும் நடந்துக்க மாட்டாங்க... இல்லனா, ஆவேசப் பேச்சுக்கும், அரிதாரப் பூச்சுக்கும் நாட்டையே எழுதி கொடுக்கும் 'ராஜ தரும பரம்பரை'னு பேரு வாங்க முடியுங் களா..? யார், யாரோ வந்து ராஜ்ய பரிபாலனம்ங்கற பேருல நாட்டை கொள்ளை அடிச்சுட்டுப் போறதை வேடிக்கைப் பார்க்க முடியுங்களா..?
இப்பக் கூடப்பாருங்க... 'தெலுங்குத் தமிழன்', 'பச்சைத் தமிழன்'னு சொல்லிக்கிட்டு திரும்பவும் திரையில இருந்து தெறிச்சி விழுந்து தமிழ்நாட்டைக் குத்தகைக்கு எடுத்துக்கிட்டு, கொழிக்கத் துடிக்கறவங்களுக்கு கொடி பிடிச்சிக்கிட்டுதானே நிக்கறான் அப்பாவித் தமிழன்.
சினிமா ஒரேயடியா கை கழுவிப் போற மாதிரியிருந்தா... முழுசா தேச சேவைக்கு வர்றவங்க தான் கூடுதலாயிட்டாங்க. இந்த வேஷக்காரங்களுக்கு மத்தியில உங்களப் பாத்தா மட்டும் கொஞ்சம் பாசக்காரரா தெரியுறீங்க. அதுக்குக் காரணமும் இருக்குங்க. தமிழ்நாடே உங்கமேல பைத்தியமா கிடக்குறதை விட வேற ஒரு காரணம் தேவையே இல்லை. இருந்தாலும் பழைய விஷயமொண்ணையும் எடுத்துவிடறேன்.
'கர்நாடக விவசாயிகளின் மனம் கவர்ந்த தலைவர் பேராசிரியர் நஞ்சுண்டசாமி,
உடல்நிலை சரி இல்லாமல் பெங்களூரு கித்வாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டி ருந்தார். அப்போது, ஒரு அந்திப் பொழுதில் தன்னுடைய கர்நாடக சினிமா நண்பர் அசோக்கை அழைத்துக்கொண்டு நஞ்சுண்ட சாமியைப் பார்க்க வந்தார் ரஜினி. ஒரு பழைய ஜீன்ஸ் பேன்ட், ரப்பர் செருப்போடு ரஜினி வந்து, போன காட்சியைப் பார்த்து, 'அடடா.. ரஜினி எவ்வளவு எளிமையா இருக்காரு. உடம்பு நல்லானதும்.. நதி நீர் இணைப்பு விஷயத்துல ரஜினியையும் இணைச்சுக்கணும்'னு வாய் நிறைய அப்ப சொன்னார் நஞ்சுண்டசாமி.'
மேற்கண்ட விஷயத்தை என்கிட்ட சொன்னது... கர்நாடக மாநில தோழர் ஒருத்தர்தான். உங்களோட காவிரி உண்ணாவிரதம்... 'ஒரு கோடி ரூபாய்' வாக்குறுதி இதையெல்லாம் கேள்விப்பட்டு ரொம்பவே நம்பிக்கையோடதான் அப்ப பேசியிருக்கார் நஞ்சுண்டசாமி. அதுக்குப் பிறகு உடல் நிலை சரியில்லாம அவர் இறந்து போயிட்டார். இடையில பல காரணங்களால நீங்களும் அதை மறந்துபோயிட்டீங்க... நம்ம ஊரும் கூட மறந்து போச்சி!
இப்ப, நகரத்துல மட்டுமில்ல... கிராமத்து மூலை முடுக்கு குட்டிச் சுவர் எல்லாத்தையும் குளிப்பாட்டி, போஸ்டர் புத்தாடை அணிவிச்சி, பொங்கி வரும் பூரிப்போட, புதுப்பொலிவோட கண்ணைச் சிமிட்டிச் சிமிட்டி... 'சிவாஜி'யை வரவேற்கத் தயாராகிட்டாங்க. தூக்கத்தையும், துக்கத்தையும் ஒரு சேர தூக்கி எறிஞ்சிட்டு, ஒரு மாச காலமா வன்னி மரம் பிளந்து... வாசல்கால் பந்தலிட்டு, தென்னை மரம் பிளந்து... தெருவெல்லாம் பந்தலிட்டு, குலைவாழை கொணர்ந்து... உங்க கட்-அவுட்டுக்கு கும்பமேளா நடத்திகிட்டு இருக்காங்க..
பெத்த ஜீவன்களை வீட்டுக்குள்ளப் பூட்டி பட்டினி போட்டுட்டு... ரோட்டுல, 'புதுஅண்ணி ஸ்ரேயா’-வுக்கு மன்றம் அமைச்சி, அறுசுவை விருந்து படைக்கறாங்க. நீங்க கழுதையோடு ஆடினாலும், குதிரையோடு ஆடினாலும் எங்க இளசுங்க ‘அதை’ கடவுளாக்காம விட மாட்டாங்க. உங்க மேல அப்படி ஒரு மோகமுங்க.
ஏற்கெனவே, 'சிதம்பர பொருளாதாரம்', எங்க கிராமத்து இளசுகளோட ஒட்டுக்கோவணத் தையும் விட்டு வைக்காம உருவிக்கிட்டு போயிகிட்டிருக்கு. அப்பவும் கூட கலங்காம, அண்ணி ‘ஸ்ரேயா’வுக்கு பட்டுபுடவைக் கட்டி அழகு பார்க்கறாங்க!
பிரதமர் மன்மோகன் சிங், வர்த்தக மந்திரி கமல்நாத் ரெண்டுபேரும் வயல்ல போட்டுப் புதைச்சிட்ட விவசாயிகளோட வாழ்க்கையை, வெண்திரை மூலமா 'சிவாஜி'யில தேடிப் புடிச்சிடலாம்னு துடிக்கிறாங்க எங்க விவசாய இளசுங்க. ஆனா நீங்களோ... படம் ரிலீஸ் ஆனதும், ‘ராமன் மாண்டாலும் ராவணன் மாண்டாலும்’ எனக்கொரு கவலை இல்லேனு இமயமலைக்கோ... ஆல்ப்ஸ் மலைக்கோ ஓடிப் போயிடுவீங்க. திரையில நீங்க பாடுறதைப் பார்த்துக்கிட்டு, தானே பாடுறதா கனவுல மிதக்கற எங்க இளசுங்க, கையில காலணாவும் மிஞ்சாமா தூக்கி வீசிட்டு, 'நல்ல வாழ்க்கையைக் காட்டப் போறார் தலைவர்'னு காத்துக்கிட்டே நிக்கப்போறாங்க. இந்த முறையாவது பண்டார வேஷம் கட்டிக்கிட்டு... இமயமலைக்கு ஓடுறதை நிறுத்தப்பாருங்க.
கோடிகோடியா உங்களுக்குக் கொட்டிக் கொடுத்த தமிழகத்துக்கு நன்றிக் கடன் செய்றதுக்கு ஒரு வழியைப் பார்க்கப் போறீங்களா... பொதுமக்கள் வசதிக்காக ஒரு கல்யாண மண்டபம் இடிபடறதையே கலர் கலரா பல கோணங்களில் படம் பிடிச்சு வெச்சுக்கிட்டு ‘தியாக பில்டப்’ பண்ணி தமிழகத்தையே குத்தகைக்கு கேட்கிறவங்க பட்டியல்ல சேரப்போறீங்களா?
ஆந்திரத்து சாமியார், சாய் பாபாவோட பக்தருங்க கொஞ்ச பேரு சென்னையில இருக்காங்க. அதுக்காகவே 200 கோடி செலவு செய்து கிருஷ்ணா நதிநீர் கால்வாயை சீரமைச்சி குடிநீர் கொடுக்கற வேலையில இறங்கியிருக்கார் சாய்பாபா.
ஆனா, தமிழகமே எதிர்பார்க்கற இந்த 'சூப்பர் ஸ்டார் பாபா' தண்ணீருக்காக ஏதாவது செய்யறதுதானே நியாயம்.
'அரசியல்வாதிங்க யாரும் முன் வரல... நான் என்ன பண்றது?'னு ஈஸியா கேட்டுத் தப்பிச்சிடலாம்னு நினைக்காதீங்க.
இப்பக் கூட தமிழக முதல்வர் கருணாநிதி, நதி நீர் இணைப்பு விஷயத்தை கையில எடுத்திருக்கார்... அவரோட கைகோத்தாவது... காரியத்தை முடிக்கப் பாருங்க. 'அதெல்லாம் முடியவே முடியாத காரியம்'னு சொல்ல நினைச்சா... இனி, 'காவிரி... கருவாடு'னு உசுப்பேத்தறதையாவது நிறுத்திக்கங்க!
இப்படிக்கு
|
|
|
No comments:
Post a Comment