சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Nov 2014

காரை அலங்கரிக்க... அழகுபடுத்த...1

வீடு வாங்கியதுமே, வீட்டை எப்படி எல்லாம் அழகுபடுத்தலாம் என ஆசைப்படுவதைப் போலத்தான், கார் வாங்கியதும் அதை அழகுபடுத்திப் பார்க்க ஆசை பிறக்கும். 'என் பக்கத்து வீட்டுக்காரரின் ஸ்விஃப்ட் போல இருக்கக் கூடாதுஎன ஸ்விஃப்ட்டையே ஹோண்டா சிட்டியைப் போலவும், வெர்னாவை பிஎம்டபிள்யூ போலவும் அலங்கரிப்பவர்களும் உண்டு. அது, பிஎம்டபிள்யூ காராக இருந்தாலும் தனக்குப் பிடித்த வகையில் காரை கஸ்டமைஸ் செய்பவர்களும் உண்டு. காரின் வெளிப்பக்கத்தை மாற்றுவது முதல் பெர்ஃபாமென்ஸைக் கூட்டுவது வரை... ஒரு காரில் என்னவெல்லாம் செய்யலாம்?
 வெளியே/EXTERIOR
01 /பெயின்ட் அடிக்கலாம் வாங்க!
மற்ற கார்களில் இருந்து உங்கள் கார் வித்தியாசமாகத் தெரிய, காரின் வண்ணத்தை மாற்றுவதே சிறந்த ஐடியா. முன்பெல்லாம் தனியாக பெயின்ட் அடித்தால், அது விரைவில் வண்ணம் மங்கி, காரையே பழசாகக் காட்டிவிடும். இப்போது ஒரிஜினல் கார் தயாரிப்பாளர்களின் பெயின்ட் ஷாப்புகளைப்போல, தனியார் பெயின்ட் ஷாப்புகளும் வந்துவிட்டன. 1 லட்சம் ரூபாய் வரை செலவழித்தால் போதும்; காரின் வண்ணத்தை மாற்றிவிடலாம். ஆனால், காரின் வண்ணத்தை மாற்றும்போது, அதை ஆர்.சி.புக்கில் பதிவு செய்ய வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.
காரின் வண்ணத்தை மாற்றாமல், வினைல் ஸ்டிக்கர் மூலமும் காரின் நிறத்தை மாற்றலாம். ஆனால், இதில் என்ன பிரச்னை என்றால், சின்ன விபத்து, சிராய்ப்பு என்றால்கூட இந்த ஸ்டிக்கர் கிழிந்து பழைய வண்ணம் பல்லிளிக்கும். நீங்கள் மீண்டும் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். இந்த வினைல் ஸ்டிக்கருக்கு 70,000 முதல் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

02 / பாடி கிட் வேண்டுமா?
சின்னச் சின்ன எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸ் மூலம் காரின் தோற்றத்தை மாற்ற விரும்பினால், அதற்கு ஆப்ஷன்கள் ஏராளம். பாடி கிட் அதாவது பம்ப்பர், ஃபெண்டர், ஸ்கர்ட்ஸ் மற்றும் ஸ்பாய்லர் ஆகியவற்றைப் பொருத்துவதன் மூலம் காரின் வெளித்தோற்றத்தை ஸ்போர்ட்டியாக மாற்றலாம். இதற்கு குறைந்த அளவில்தான் செலவாகும். ஸ்பாய்லர்கள் 1,000 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை விற்பனையாகின்றன. பம்ப்பர் மாற்ற 3,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை செலவாகும். அதேபோல், ஃபென்டர் மற்றும் ஸ்கர்ட்ஸ் 1,000 ரூபாய் முதல் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதுபோன்ற பாடி கிட்ஸ் பொருத்தும்போது, இதனால் காரின் எடை கூடும் என்பதை மறந்துவிடாதீர்கள். குறைந்த அளவுதான் என்றாலும், மைலேஜ் மற்றும் பெர்ஃபாமென்ஸில் சின்ன மாற்றங்கள் இருக்கும். அதேபோல், சைடு ஸ்கர்ட்ஸ் பொருத்தும்போது, கிரவுண்ட் கிளியரன்ஸைக் குறைத்துவிடும். இதனால், மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

03 /டெஃப்லான் கோட்டிங் தேவையா?
காரின் மேல் படியும் தூசு - மண் போன்றவற்றால், காரின் நிறம் நாளடைவில் மங்கலாகும். அதைத் தடுக்க பெயின்ட் மீது ஒரு லேமினேட் கவர் போல இருப்பதுதான் டெஃப்லான் கோட்டிங். இது வேக்ஸோ, பாலிஷோ அல்ல. இது பெயின்ட்டுக்கு மேல் ஒரு கவர் போல இருக்கும். காரின் நிறம் மங்காமல் பாதுகாத்துக்கொள்ளும்.

PTFE (Polytetrafluroethylene) கலவையான இந்த டெஃப்லானை கார் பெயின்ட்டின் மீது பூசும்போது, கார் மீது அழுக்குப் படியாமல் பார்த்துக்கொள்ளும். இது வழுக்கும் தன்மையுடையது. அதனால், அழுக்கு ஒட்டாது. இதன் வேதியியல் கலவை, காரின் நிறத்தை மங்கலாக்கச் செய்யும் புற ஊதாக் கதிர்களை (Ultra Violet Rays) கார் மீது படாமல் தடுக்கும். மேலும், துருப்பிடிக்காமலும் பார்த்துக்கொள்ளும். டெஃப்லான் கோட்டிங் செய்ய 2,000 ரூபாயில் இருந்து 4,000 ரூபாய் வரை செலவாகும்.

04 /பவர்ஃபுல் ஹெட்லைட்ஸ்
வெளித்தோற்றத்தைப் பொறுத்தவரை இப்போதைய டிரெண்ட், ஹெட்லைட்டுகளை மாற்றுவதுதான். HID எனச் சொல்லப்படும் 'ஹை இன்டென்சிட்டி டிஸ்சார்ஜ்ஹெட்லைட்டும், ப்ரொஜெக்ட்டர் ஹெட்லைட்டும்தான் இப்போது அதிக அளவில் விற்பனையாகின்றன. ஹெட்லைட் மாற்ற, குறைந்தபட்சம் 10,000 ரூபாய் செலவாகும். அதேபோல், ஹெட்லைட்டில் 'டே டைம் ரன்னிங்லைட்ஸ் இப்போது செம பாப்புலர். இதைப் பொருத்த பிராண்டைப் பொறுத்து 2,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை செலவாகும். இது தவிர, நியான் லைட்ஸ் இப்போது செம ஸ்டைலாக கார் கதவுகளுக்கு அடியில் பொருத்தப்படுகின்றன. கார் கதவைத் திறக்கும்போது, கார் பிராண்டின் லோகோ தரையில் அழகாகத் தெரியும். இதற்கு 2,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை செலவாகும். இந்த ஒட்டுமொத்த விஷயங்களும் ஒரு பேக்கேஜாகவே கிடைக்கிறது. இதற்கு 30,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை செலவாகும்.

05 /அலாய் வீல்கள்
அலாய் வீல்கள் காருக்கு அழகான தோற்றத்தைத் தருவதுடன், கையாளுமையிலும் முன்னேற்றத்தை அளிக்கக்கூடியது. சீனத் தயாரிப்பு அலாய் வீல்களின் விலை 8,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை. இவை பார்ப்பதற்கு ஸ்டைலாக இருந்தாலும், அதிக நாள் நீடிப்பது இல்லை. பிபிஎஸ் அலாய் வீல்கள் போன்று ஐரோப்பியத் தயாரிப்புகள் கிடைக்கின்றன. நீண்ட நாட்கள் உழைக்கக்கூடிய தரமான அலாய் வீல்கள். ஆனால், இவற்றின் விலை அதிகம். ஐந்து வீல்களின் விலை 25,000 ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது.

அலாய் வீல் பொருத்தும்போது, அது உங்கள் டயரின் அளவுக்குச் சரியாக ஃபிட் ஆகக்கூடியதாக இருக்க வேண்டும். தவறான அளவில் அலாய் வீல்களைப் பொருத்தும்போது, அதிர்வுகள் அதிகமாகும். மேலும், சஸ்பென்ஷனிலும் பிரச்னைகள் வரும். அலாய் வீல் பொருத்த அவ்வளவு பட்ஜெட் இல்லை என்பவர்கள், வீல் கேப் வாங்கிப் பொருத்தலாம். இதில் பெரிதாக டிசைன்களை எதிர்பார்க்க முடியாது. தரமான வீல் கேப் ஐந்து வீல்களுக்கும் சேர்த்து 400 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை கிடைக்கிறது.

06 /டயர் பிரஷர் மானிட்டர்
பெட்ரோல் குறைவாக இருந்தால் எச்சரிக்கை செய்யும் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஆயில் குறைவு, இன்ஜின் கோளாறு என எல்லாவற்றையும் டிஜிட்டல் திரையில் வெளிச்சமிட்டுக் காட்டி எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பம், கிட்டத்தட்ட எல்லா கார்களிலும் வந்துவிட்டது. ஆனால், எவ்வளவு விலை உயர்ந்த கார் வாங்கினாலும் டயரில் சரியான அளவு காற்று இருக்கிறதா என செக் செய்து சொல்லும் தொழில்நுட்பம் காருடன் வருவது இல்லை.

நெடுஞ்சாலையில் நடக்கும் 50 சதவிகித விபத்துகளுக்குக் காரணம், டயர் வெடிப்பு. டயர்களில் சரியான காற்று இல்லை என்றால், டயர் வெடிக்கும் ஆபத்து இருப்பதோடு, மைலேஜும் குறையும். இப்போது மார்க்கெட்டில் ஆன்போர்டு டயர் பிரஷர் மானிட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றன. 'டயர்ப்ரோப்எனும் நிறுவனம் இந்தியாவில் அதிக அளவில் இந்த டயர் பிரஷர் மானிட்டர்களை விற்பனை செய்துவருகிறது. நான்கு சென்ஸார் மற்றும் டேஷ்போர்டு டிஸ்ப்ளே யூனிட்டுடன் விற்பனை செய்யப்படும் இந்த கிட் வாங்கிப் பொருத்திவிட்டால், நான்கு டயர்களிலும் காற்று எவ்வளவு இருக்கிறது என்பதை, கார் ஓட்டும்போது டிஜிட்டல் டிஸ்ப்ளேவில் தொடர்ந்து காட்டிக்கொண்டே இருக்கும். ஒரு டயரில் தொடர்ந்து காற்றழுத்தம் குறைந்துகொண்டே வந்தால், ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும். டயர் பிரஷர் மானிட்டரைப் பொருத்து 8,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை செலவாகும். காசைப் பார்க்காமல் நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்கள், இந்த மானிட்டரை வாங்கிப் பொருத்துவது நல்லது.
ஆனால், டயர் ரொட்டேஷன் செய்யும்போது ஒவ்வொருமுறையும் இந்த சென்ஸாரை அகற்றி மீண்டும் பொருத்த வேண்டியிருக்கும் என்பது இதன் குறை.

07 /ரிவர்ஸ் பார்க்கிங்
காரில் இண்டிகேட்டர் இருப்பதுபோல, பார்க்கிங் சென்ஸார்கள் இருப்பது நிச்சயம் அவசியம். இப்போதெல்லாம் எவ்வளவு பெரிய அபார்ட்மென்ட் வாங்கினாலும் பார்க்கிங் இடம் மிகவும் குறைவுதான். உங்களுக்கென குறிக்கப்பட்ட இடத்தில் காரை இடிபடாமல் நிறுத்துவது மிகச் சவாலான விஷயம். பார்க்கிங் சென்ஸார்கள் இருந்தால் பிரச்னை இல்லை. தரமான ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸார்கள் 2,000 ரூபாய் முதல் கிடைக்கின்றன. நான்கு சென்ஸார்களை பின்பக்க பம்ப்பரில் பொருத்திவிட்டால் போதும். பார்க்கிங் சென்ஸாருடனே கொடுக்கப்படும் உள்பக்க ரியர் வியூ கண்ணாடியில் இன்னும் எவ்வளவு மீட்டர் தூரம் இருக்கிறது என்ற தகவல் வருவதோடு, பீப் சத்தமும் ஒலிக்கும். பீப் சத்தம் அதிகரிக்க அதிகரிக்கப் பின் பக்கம் ஏதோ பொருள் அருகில் இருக்கிறது என்று அர்த்தம்.
ஒலி மட்டும் போதாது, ஒளியும் வேண்டும் என்பவர்கள், ரிவர்ஸ் கேமரா வாங்கிப் பொருத்தலாம். இப்போது பென்ஸ் காரில் இருக்கும் நைட் விஷன் கேமரா போன்றே வெளிமார்க்கெட்டில் கிடைக்கின்றன. 12,000 ரூபாயில் இருந்து தரமான ரிவர்ஸ் கேமரா வாங்கிப் பொருத்தலாம்.

08 /கார் லாக்
ஊருக்குக் கிளம்பும்போது, வீட்டில் இருக்கும் நகைகளை காரில் கொண்டுசெல்லும் பழக்கம் பலருக்கு உண்டு. கார் திருடுபோனால், அதோ கதிதான். மேலும், இப்போது எல்லா கார்களுமே சாலையில் பார்க்கிங் செய்யப்படுவதால், கார் செக்யூரிட்டி சிஸ்டம் மிக அவசியம். சென்ட்ரல் லாக், அலாரம் லாக்குக்கு அடுத்தபடியாக, இப்போது 'மைக்ரோ விபீபீ’(Micro VBB) எனும் புதிய செக்யூரிட்டி சிஸ்டம் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த செக்யூரிட்டி சிஸ்டம்,  காரின் கதவு அல்லது காரின் எந்த பாகத்தையாவது யாராவது திறக்க முற்பட்டால், உடனடியாக காரின் உரிமையாளரின் செல்போனுக்கு கால் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் தகவல் வரும். இதன் விலை 15,000 ரூபாயில் இருந்து ஆரம்பம்.

09 /ஃப்ளிப் கீ
ரிமோட் லாக் இருந்தாலும், ஸ்டைலான ஃப்ளிப் கீ-தான் இப்போதைய ஃபேஷன். பட்டனை அழுத்தினால் சாவி வெளியே வரும் இந்த ஃப்ளிப் கீ-, எந்த கார் சாவியுடன் வேண்டுமானாலும் இணைத்துக்கொள்ளலாம். தரமான ஃப்ளிப் கீ விலை 5,000 ரூபாயில் இருந்து ஆரம்பம்!



No comments:

Post a Comment