சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Nov 2014

உலகத்தை காப்பாத்தப் போறாங்க!

'இந்த உலகமே இப்போ ஆபத்தில் இருக்கு, அவர் ஒருத்தரால தான் காப்பாத்த முடியும்', 'இது மட்டும் நடந்தா இந்த உலகமே அழிஞ்சிடும்' இப்படிப்பட்ட வசனங்கள் இல்லாமல் ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படங்கள் வராது. ஒரு வேளை இந்த ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் லீவு எடுத்துக்கொண்டு உலகத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம் ஊர் ஹீரோக்கள் கிட்ட வந்தா, யார் யார் எப்படிக் காப்பாத்துவாங்க?

ரஜினி: ரஜினிக்கு சூப்பர் ஹீரோ பொறுப்பு வந்ததும் தியானம் பண்ணும்போது உலகத்தை அழிக்க ஒரு பெரிய விண்கல் வர்றது ஞான திருஷ்டியில் தெரியுது. அந்த நேரம் பார்த்து ரஜினியோட சூப்பர் பவர்ஸ் குறையுது. உடனே ரஜினி இமயமலைக்குப் பறந்து போறார். குகைக்குள்ள உட்கார்ந்து தியானம் பண்றார். இதுக்கு நடுவுல அந்த கல் இன்னும் வேகமா பூமியை நெருங்குது. உலகமே அதிர்ச்சியில உறைஞ்சுபோய் ரஜினியை மட்டும் நம்பியிருக்கு. ரஜினிக்கு சக்தி வேற கம்மியா இருக்கிறதால பயம் வந்து பூமியைக் காப்பாத்துவோமா இல்ல நாம மட்டும் தப்பிச்சு வேற கிரகத்துக்கு பறந்திடலாமானு யோசிச்சு காசு சுண்டிப்போடுறார். தலை விழுந்ததும் பூமியைக் காப்பாத்தித் தொலைவோம்னு விண்வெளிக்குப் பறக்கிறார். விண்வெளியில் ரஜினிக்குக் கொஞ்ச தூரம் போனதும் தூரத்தில் விண்கல் வர்றதைப் பாக்கிறார். விண்கல் ரஜினியை நெருங்கும்போது அதை முறைத்துப் பார்க்கிறார். அது தானாகவே பின்னால போகுது. எங்கே இருந்து வந்துச்சோ அங்கயே  ஓடிப்போயிடுது. நமக்குள்ள இவ்வளவு பவரானு ஆச்சர்யப்படுறார் ரஜினி. பூமிக்கு வந்தும் அவருக்குப் பாராட்டு விழா நடத்துறாங்க. அப்போ ஒரு குட்டிக் கதை சொல்லிட்டு, சூப்பர் ஹீரோ பதவியை ராஜினாமா பண்ணிடு றார். அப்போ ஒருத்தர் 'அடுத்து எப்போ சூப்பர் ஹீரோ ஆவீங்க?''னு கேட்கிறார். அதுக்கு ரஜினி வானத்தை நோக்கி சுட்டுவெரலைக் காட்டிட்டு டாட்டா காட்டுறார்.

கமல்: மங்கள்யானை செவ்வாய்க்கு அனுப்பிய சந்தோஷத்தில் இஸ்ரோ இருக்க, அங்கேபணிபுரியும் விஞ்ஞானிதான் கமல். அவருக்கு மட்டும் முகத்தில் சோகம். இதற்குக் காரணம் செவ்வாய் கிரகவாசிகள் பூமிக்கு அனுப்பிய ஒரு செய்தி. அதில், 'பூமியில் இருப்பவர்கள் அடிக்கடி செயற்கைக்கோள் அனுப்பி எங்கள் கிரகத்தை அச்சுறுத்துகிறீர்கள். அதனால் உங்கள் கிரகத்தை அடியோடு அழிக்க நாங்கள் வருகிறோம்என இருக்கிறது. இந்தச் செய்தியை யாரிடமும் சொல்லாமல், பூமிக்கு வந்த ஆபத்தை தனி ஆளாக சமாளிக்கக் கிளம்புகிறார் கமல். யாருக்கும் தெரியாமல் ஒரு ராக்கெட்டை எடுத்துக்கொண்டு செவ்வாய்க்குப் பறக் கிறார். அங்கே இருக்கும் ஏலியன்ஸ் அவரைக் கொடூரமாகப் பார்க்கின்றனர். ஓர் அழகான பெண் ஏலியனைக் கைகாட்டி 'இவங்களை நான் காதலிக்கிறேன். கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்னு சொல்றார் கமல். அந்த ஏலியன் பெண்ணுக்கும் கமலை பிடித்துப்போக, டும்டும்டும் தான். ஏலியன்கள் பூமிக்குப் புறப்படும்போது நானும் பூமியைச் சேர்ந்தவன்தான். உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ணதால பூமி உங்களுக்கும் சொந்த கிரகம் ஆகிடுச்சு, ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கவேண்டிய நாமளே ஏன் அடிச்சுக்கணும் என விதவிதமாக எக்ஸ் பிரஷன் காண்பித்து கமல் அழ, ஏலியன்கள் மனசு மாறிவிடுகிறார்கள். அவர் களும் கமல் மூலம் பூமியுடன் நல்லுறவை வளர்க்க நிஜமாகவே சூப்பர் ஹீரோ ஆகிறார் கமல். அப்புறம் உலக நாயகனேனு பாட்டுதான்.


விஜய்: உலகத்தில் இருக்கும் எல்லா கடல் பகுதிகள்ல சுனாமி வரப்போறதா விஞ்ஞானிகள் சொல்றாங்க. அதைத் தெரிந்துகொள்ளும் சூப்பர் ஹீரோ விஜய் 'நான் இருக்கிற வரைக்கும் உலகத்துக்கு எதுவும் ஆக விட மாட்டேன்டானு கிளம்புறார். எதனால சுனாமி வரப்போகுதுன்னு ஆராய்ச்சி பண்ணும்போது தெரியிது, கடலுக்கு தண்ணி ஊத்துறதுக்காக கடவுள் யூஸ் பண்ணும் பைப்புக்குள் இருந்து வரும் வைபிரேஷன்தான் என்று. கடவுளிடமே சென்று, 'எதுக்காக பூமிக்கு இப்பிடி ஒரு துரோகத்தைப் பண்ணீங்கஎன கேட்க, 'ஸாரிப்பா, உலகத்தைப் படைக்கும் அவசரத்தில் அதையெல்லாம் எடுக்க மறந்திட்டேன்என சொல்கிறார். விஜயின் கையில் ஒரு பெட்ரோ மாக்ஸ் லைட்டைக் கொடுத்து 'இந்த விளக்கை அந்த பைப்புக்குள் கொண்டுபோய் வைத்து விட்டால் எல்லாம் சரியாகிடும், ஆனால் விளக்கு அணைந்து விட்டால், சுனாமி வந்தே தீரும்என்கிறார். அந்த விளக்கோடு பைப்புக்குள் சென்று அமர்கிறார் விஜய். எங்கே நாம் கிளம்பி விட்டால், விளக்கு அணைந்துவிடுமோ என பயப்படும் விஜய் பெட்ரோ மாக்ஸ் லைட்டோடு அங்கே உட்கார்ந்து உலகத்தைக் காப்பாற்றிக்கொண்டே இருக்கிறார்.


சூர்யா: வேற்றுக் கிரகத்தை சுற்றிப்பார்க்க பூமியில் இருந்து ஒரு குழு கிளம்புகிறது. அங்கே இருக்கும் ஏலியன்ஸ் அவர்களைக் கிண்டல் செய்ய, அது பெரிய பிரச்னையாகி அந்தக் குழுவில் இருந்த சூர்யா ஏலியனைத் துரத்தி துரத்தி அடித்துத் துவைக்கிறார். பிறகு குழு பூமிக்குத் திரும்புகிறது. சூர்யாவிடம் அடிவாங்கிய ஏலியன் கடுப்பாகி அந்த பூமியை நசுக்கித் தள்ளணும்னு முடிவு செய்கிறது. அதற்கு முன் சூர்யாவைக் கொல்ல அந்த ஏலியன் மட்டும் தனியாக பூமிக்கு வருகிறது.  அவர் ஊர்க்காரர்கள் ஏலியனை அடித்து நொறுக்குகிறார்கள். 'தனி ஆளு, தட்டிடலாம்னு பாத்தியா... சொந்தக் கிரகத்துக்காரன்வேஎன சீறுகிறார். இதற்கிடையில் பூமியை அழிக்கக் கிளம்பி வருகிறது ஏலியன் கூட்டம். 'கூட்டம் சேர்த்தவனெல்லாம் பெரியாள் இல்லடா. எங்க ஊருடா, எங்க சாமிடாஎன அரை மணி நேர டயலாக்கை அசராமல் பேசி முடிக்க, மொத்த ஏலியன்ஸ் கூட்டமும் பேசாமல் கிளம்பி, அவர்கள் கிரகத்துக்கே சென்றுவிடுகிறார்கள்.

No comments:

Post a Comment