யாராவது ஒரு நபர் அதிகமாக ஷாப்பிங் செய்தால் அவரை ''ஷாப்போஹாலிக்'' என்கின்றனர். அதேபோல்தான் அதிக நேரம் பணிபுரிபவரை ''வொர்க்கஹாலிக்'' என்று கூறுகின்றனர். இவர்கள் யார்? எப்படி பட்டவர்கள்? இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? இவர்களை எப்படி அடையாளம் காணுவது என்று பார்ப்போம்.
யார் 'வொர்க்கஹாலிக்' ?
அதிக நேரம் பணிபுரிபவர் என்ற அடிப்படையில் இவர்களை கருதும் போது தன் வேலையை முடிக்க இயலாமல் அதிக நேரம் வேலைபார்ப்பவர்களை வொர்க்கஹாலிக் என்று கூற முடியாது. வேலை முடிந்த பிறகும் அதிக நேரம் வேறு வேலைகளையோ அல்லது மற்றவர் வேலைகளையோ தானாக முன்வந்து வாங்கி செய்பவர்கள் தான் வொர்க்கஹாலிக் மனிதர்கள்.
இவர்கள் எப்படி பட்டவர்கள்?
1.காலையில் முதல் ஆளாக வேலைக்கு வந்துவிட்டு கடைசி ஆளாக வேலையை விட்டு செல்லும் பழக்கம்கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த நேரத்திலும் அலுவலகத்தில் இவர்களை பார்க்க முடியும்.
2. இவர்களுக்கு வேலை இல்லாத நாட்களில் மன அழுத்தத்துடன் காணப்படுவார்கள். என்ன வேலை செய்யலாம் என்று யோசித்து கொண்டே இருப்பார்கள்.
3. இவர்களுக்கு வார விடுமுறை அல்லது மற்ற விடுமுறை தினங்கள் என்பது பெயருக்கு தான். எங்கு இருந்தாலும் அவர்களது வேலை நிர்வாகத்தில் பிரதிபலிக்கும் வேலைகளில் ஈடுபட்டு கொண்டு தான் இருப்பார்கள்
4.இவர்களை குறுகிய இலக்குகளை அடைய செய்து திருப்தி படுத்த முடியாது. எப்போதும் இலக்குகளை மட்டுமே யோசிப்பார்கள்.
5.இவர்களின் வேலைக்கான முன்னுரிமைகளில் பர்சனல் வேலைகள் இடம் பிடிக்காது.
6. நிர்வாகத்தில் பாஸ் சொல்லும் எந்த வேலைக்கும் இவர்களிடம் இருந்து முடியாது என்ற பதில் வராது.
7.உடல்நலக்குறைவாக இருந்தாலும் வேலைக்கு வருவதில் இருந்து தவறமாட்டார்கள். இவர்களது பொழுதுபொக்குகள் கூட வேலை சார்ந்ததாகவே இருக்கும்.
8.இவர்களிடமிருந்து வாங்க கூடிய வேலைகள் என்பது சராசரி விகிதத்தை விட அதிகமாக இருக்கும்.
9.குறுகிய காலத்தில் முடிக்கப்பட வேண்டிய வேலைகள் இவர்கள் பெயரில் இடம்பெறுவது வழக்கமான விஷயமாக இருக்கும்.
10.இவர்கள் எளிமையாக பழக கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் உங்களிடமிருந்து ஏதாவது ஒரு விஷயத்தை கற்று கொள்ளும் நபராக இருப்பது தான் அந்த தன்மைக்கு காரணம்.
ஏன் இப்படி செய்கிறார்கள்?
இவர்கள் பார்க்கும் வேலையை இவர்கள் வேலையாக பார்க்காததே முதல் காரணம்.இவர்களை பொறுத்த வரையில் வேலை என்பது இவர்களுக்கு விரும்பி செய்யும் பழக்கவழக்கமாக இருப்பது தான் காரணம். பிடித்த துறையில் வேலை கிடைத்திருப்பவர்கள் மட்டுமே வொர்க்கஹாலிக்காக இருக்க முடியும்.அப்படி வேலை கிடைத்தால் வொர்க்கஹாலிக் நபர்களின் வேலை சராசரியை காட்டிலும் அதிகமாக இருக்கும்.
இது சரியா?
சில சமயங்களில் ஒரு மனிதனின் சுய முன்னேற்றத்திற்கு வொர்க்கஹாலிக் தேவையான விஷயமாக இருக்கிறது. ஒருவர் தன் தகுதிகளை வளர்த்து கொள்ளவும், போட்டி உலகில் தன்னை போட்டிகளில் இருந்து விலக்கி தனி இடத்தை அமைத்து கொள்ளவும் உதவும் விதமாக இருக்கும். அதேசமயம் இது அதிகமாகும் போது குடும்ப சூழலில் சிக்கல் வர வாய்ப்புள்ளது. திருமணமாகாத இளைஞர்கள் வொர்க்கஹாலிக் பழக்கத்தை மேற்கொண்டால் அவர்களது அனாவசிய நேரங்களை வீணடிக்காமல் இருக்க பயன்படும் கருவியாக இது இருக்கும். அதேசமயம் குடும்ப சூழலில் இருப்பவர்கள் இதனை ஓரளவுக்கு பேலன்ஸ்டாக கவனித்து வந்தால் நல்லது.
No comments:
Post a Comment