சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Nov 2014

காமராஜர் பற்றிய விமர்சனம்- கார்த்தி சிதம்பரத்துக்கு இளங்கோவன் கடும் எச்சரிக்கை!

இனி காமராஜரை விமர்சனம் செய்து பேசினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என  தமிழக காங்கிரஸ் தலைவர் .வி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரித்துள்ளார். 

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய கார்த்தி சிதம்பரம், “காமராஜர் ஆட்சி அமைப்போம் என்றும், கடந்தகால சாதனைகளை மட்டுமே பேசியும் மக்களை சந்திக்க முடியாது என்று பேசினார். இதற்கு காங்கிரஸ் கட்சியினரிடையே பலத்த எதிர்ப்பு எழுந்தது.

               



இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயல்வீர்ர்கள் கூட்டம் தேவர் ஹாலில் நடைபெற்றதுதிருச்சி மாநகர தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சி.பாபு முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், .வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னால் மத்திய அமைச்சர் திருநாவுகரசர், அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளர் ஜோதிமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

வரும் 28 ஆம் தேதி திருச்சியில் ஜி.கே.வாசனின் புதிய கட்சி துவக்கவிழா நடக்கவுள்ள நிலையில், இன்று நடந்த கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அரங்கம் நிரம்பிவழிந்தது. கூட்டத்தில் வாசனையும், அவரது ஆதரவாளர்களையும் கடுமையாக விமர்சித்தனர் காங்கிரஸ் கட்சியினர்.

கூட்டத்தில் பேசிய இளங்கோவன், "கடந்த ஆட்சியில் நாம் செய்த சாதனையை உரக்க சொல்லாதனாலேயே தோல்வியை சந்தித்தோம். அன்பு தம்பி வாசன் புதிய கட்சி தொடங்குவதன் மூலம் அவரிடம் இருக்கும் பணத்தை விரயமாக்கப்போகிறார். வாசன் கட்சியைவிட்டு போனதால் இழப்பு ஒன்றுமில்லை. தமிழக முதல்வர் ஸ்டெப்னி முதல்வராக செயல்படுகின்றார். இன்னும் எத்தனை நாட்கள் ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கப்பட்டதை நினைத்து துக்கம் அனுஷ்டிப்பார்கள்.

கேரள முதல்வர் உம்மன்சாண்டி முல்லை பெரியாறு அணை நிரம்பியதற்காக அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று கூட்டியுள்ளார். ஆனால் தமிழக முதல்வர் மக்கள் பிரச்னைகளுக்காக்கூட சட்டமன்றத்தை கூட்ட மறுக்கிறார்.

இந்த வருடம் நல்லமழை பெய்துள்ளது. ஆனால் விவசாயம் செய்ய உரம் கிடைக்கவில்லை. வழக்கம் போல மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதுகிறது. நேரில் சென்று உரம் வழங்க வலியுறுத்த வேண்டியதுதானே. மக்கள் நலனில் அக்கறையில்லாமல் செயல்பட்டால் முதல்வர் மக்களால் புறக்கணிக்கப்படுவார்என்றார். 

கூட்டம் முடிந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இளங்கோவன், “காவிரியின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டப்போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதை அம்மாநில மக்களே எதிர்த்துள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு குழு கர்நாடக முதல்வர் சித்தராமையாவைச் சந்தித்து, அணைக் கட்டப்பட்டால் தமிழகம் வஞ்சிக்கப்படும் நிலையை விவரிப்போம், மீறி கட்டினால் தமிழக காங்கிரஸ் கட்சி மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்" என்றார்.

கார்த்தி சிதம்பரம், காமராஜரை விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்குஇனி காமராஜரை விமர்சனம் செய்து பேசினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் .வி.கே.எஸ்.இளங்கோவன் காட்டமாக.

மீனவர்கள் விடுதலை குறித்த கேள்விக்கு, "தமிழக மீனவர்கள் விடுதலையில் மத்திய அரசு  தகிடுதத்த வேலையை செய்கிறது. கடந்த 1964 ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கையில் கொலை குற்றத்திற்கு கூட தூக்கு தண்டனை வழங்கப்படவில்லை. ஆனால் திடீரென அப்பாவி தமிழர்கள் 5பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அவர்களை மீட்டு தமிழகம் கொண்டு வந்ததுபோலவும் சொல்கிறார்கள். இது உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட செயல் ' என்றார்.


No comments:

Post a Comment