கணினி பாதுகாப்பில் எக்ஸ்பர்ட்: அசத்தும் 8 வயது சிறுவன்!
கணினிப் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கருத்துரை நிகழ்த்தி அசத்தினான் எட்டே வயது நிரம்பிய சிறுவன்.
வளரும் தலைமுறையினருக்கும் இளைய தலைமுறையினருக்கும் கணினி குறித்த அறிமுகம், பயன்பாடு,
பாதுகாப்பு ஆகியவை பற்றிய மாநாடு ஒன்று `கிரவுண்ட் ஜீரோ சம்மிட்`என்ற பெயரில் டெல்லியில் நடைபெற்றது.
இதில் வளரும் தலைமுறையினருக்கு உரிய கணினிப் பாதுகாப்பு முறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப் பட்டது.
இதில், ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த எட்டே வயது ஆன அமெரிக்க வாழ் சிறுவன் ரூபன் பால், தனது தந்தையுடன் பங்கேற்று கணினிப் பாதுகாப்பு முறைகள் குறித்து உரைநிகழ்த்தி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தான்.
இதில், ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த எட்டே வயது ஆன அமெரிக்க வாழ் சிறுவன் ரூபன் பால், தனது தந்தையுடன் பங்கேற்று கணினிப் பாதுகாப்பு முறைகள் குறித்து உரைநிகழ்த்தி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தான்.
சிறிய வயது கணினி மேதை ரூபன் பால் தன்னைப் பற்றி கூறுகையில், ஒன்றரை வயது முதலே கணினியைக் கற்று வந்ததாகவும் தற்போது குழந்தைகளுக்கான கேம்ஸ்கள் ,பாதுகாப்பு புரோகிராம்களை வடிவமைத்துக் கொள்ளும் நிலையை அடைந்துள்ளதாகவும் கூறினான்.
இந்தச் சிறுவனின் தந்தை மனோ பால், கடந்த 2000 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் குடியேறினார். அவரும் ஒரு கணினி நிபுணர் ஆவார். தற்போது இருவரும் இணைந்து கேம்ஸ் உருவாக்கம் செய்து வருகிறார்கள்
கடந்த ஆகஸ்ட் மாதம் கேம்ஸ் உருவாக்கம் செய்யும் கம்பெனி ஒன்றை உருவாக்கிய ரூபன், அதன் தலைமை செயல் அதிகாரி ( CEO ) ஆவாக தன்னை அறிவித்துக்கொண்டார். தனது தந்தையை கம்பெனியின் பார்ட்டனராக சேர்த்துக்கொண்டுள்ளார்.
இது ரூபன் கலந்துகொள்ளும் கணினி பாதுகாப்பு குறித்த நான்காவது மாநாடு ஆகும்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வி.கே.சிங், உள்துறையின் இணைச் செயலாளர் நிர்மலா ஜித் சிங் கல்சி, மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், கணினித் துறை வல்லுநர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்
No comments:
Post a Comment