சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Nov 2014

பால், சர்க்கரை, பரோட்டா, பாக்கெட் மாவு வேண்டாம்


தண்டையார்பேட்டை, அகஸ்தீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் காளிராஜன், 42. பட்டப்படிப்பு முடித்து விட்டு, மென்பொருள் துறையில், 16 ஆண்டுகள் வேலைபார்த்தார்.
உணவு குறித்து ஆராய்ந்த அவர், சாப்பாடு சத்து இல்லாமலும், மெல்ல கொல்லும் விஷமாகவும் இருந்ததை உணர்ந்தார். அதையடுத்து, உணவு முறையில் மாற்றம் கொண்டு வர யோசித்து, முதற்கட்டமாக, தான் பார்த்து வந்த மென்பொருள் பொறியாளர் வேலையை உதறினார். தொடர்ந்து, இயற்கை மருத்துவ முறையை படித்து தேர்ச்சி பெற்றார். அக்குபஞ்சர் மற்றும் வேளாண் தொடர்பான விஷயங்களை கற்றறிந்தார்.தமிழர்கள் பின்பற்றிய, 'உணவே மருந்து' என்பதை, சென்னைவாசிகள் அறிய, தண்டையார்பேட்டையில், 'நிலம் இயற்கை அங்காடி'யை அமைத்துள்ளார்.

இதுகுறித்து காளிராஜன் கூறியதாவது:மனிதன் மூன்று விஷயங்களை தவறாமல் கடைப்பிடித்தாலே நோய்கள் அவனை அண்டாது. முதலில் பசிக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும். பசியின் அளவு அறிந்து சாப்பிட வேண்டும். நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அதற்காகத் தான், சாப்பிடும் போது பேசாதே என, நம் முன்னோர்கள், வேறு விதமாக கூறினர்.

ஆக்சிடோசின் அபாயம்:
இன்றைய நிலையில், பால் முதல் அனைத்து உணவுகளிலும், விஷம் கலந்துள்ளது. நம் முன்னோர்களுக்கு வராத சர்க்கரை நோய், மூட்டு வலி, இன்று குழந்தைகளுக்கு கூட வருகிறது.சர்க்கரை நோய்க்கு, அலோபதி மருத்துவர்கள், லட்சக்கணக்கில் பணம் கறக்கின்றனர். அலோபதி மருத்துவம் வியாபாரமாகி விட்டது. அவசர காலத்திற்கு மட்டுமே அலோபதியை பயன்படுத்துவது நல்லது. தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையை கடைப்பிடித்தாலே போதும்; சர்க்கரை நோய் மட்டுமல்ல எந்த நோயும் அண்டாது. பசுக்கள் அதிகம் பால் கறக்க ஆக்சிடோசின் ஊசி போடப்படுகிறது. அப்பாலை பருகும் மனிதர்களுக்கு, நாளடைவில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதேபோல் சர்க்கரை, நுாடுல்ஸ், பரோட்டா, பாக்கெட் மாவு இவை எல்லாமே பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.நம் முன்னோர்கள் சாப்பிட்ட கேழ்வரகு, தினை, கம்பு, வரகு, குதிரைவாலி, மூங்கில் அரிசி, இவையெல்லாம் பசியை மட்டுமல்ல, பிணியும் வராமல் பார்த்துக்கொள்ளும்.


இதையெல்லாம் சென்னைவாசிகளுக்கு தெரியப்படுத்தவே, தண்டையார்பேட்டையில், 'நிலம் இயற்கை அங்காடி' அமைத்துள்ளேன். லாபம் மட்டுமே நோக்கமாக கருதி அங்காடியை அமைக்கவில்லை. நம் மக்கள் அனைவரும் பாரம்பரிய தமிழர்களாக மாற வேண்டும். இதுவரை, 16 பேரின் உணவு முறையை ஆரோக்கியமாக மாற்றி உள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.


No comments:

Post a Comment