சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Nov 2014

விண்டோசில் வரும் டூல்டிப்ஸ்களை மறைப்பது எப்படி?

விண்டோஸ் டெஸ்க்டாப்பில் எதாவது ஒரு ஐகானின் மேல் மவுசின் சுட்டியைக் கொண்டு சென்றால் ஒவ்வொரு முறையும் அதைப்பற்றிய தகவல் டூல்டிப் (Tool Tips) மேல் எழும்பி வரும். ஒரு கட்டத்தில் எல்லாம் பழகிய பின்னர் சுட்டியைக்கொண்டு சென்றால் வருவது தேவையில்லாத ஒன்றாக இருக்கும்.இதைத்தவிர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.


இதை மறைக்க ரெஜிஸ்ட்ரியில் ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும். அதற்கு முன்பாக ரெஜிஸ்ட்ரியை ஒரு காப்பு நகல் எடுத்துக்கொள்வது மிக நலம்.

File -> Export
சென்று எதாவது ஒரு பெயரில் சேமிக்கவும்.






பின்னர் கீழ் உள்ள பகுதிக்கு செல்லவும்.

HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced

இதன் வலதுபுறம் உள்ள பேனலில் “ShowInfoTip” என்பதை கிளிக் செய்து

 

 

 


அதன் மதிப்பை 0 ஆக மாற்றவும். ரெஜிஸ்ட்ரியை மூடிவிட்டு கணிணியை ரீஸ்டார்ட் செய்து விட்டு பார்த்தால் டூல்டிப்ஸ் மறுபடியும் தோன்றாது.

நன்றி!



No comments:

Post a Comment