சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Nov 2014

நாராயணசாமியின் உறவினர் வெடிகுண்டு வீசி கொலை

புதுச்சேரிபுதுச்சேரியில் பட்டப்பகலில் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் நெருங்கிய உறவினர் ஒருவர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி, பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் மனோகர் (32). பொதுப்பணித்துறையில் பணியாற்றி வந்த இவர், இன்று மதியம் தனது வீட்டிற்கு லோடு ஏற்றி செல்லும் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பூரணாங்குப்பம் அருகே வந்தபோது, திடீரென 5க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று அவரது வாகனத்தை மறித்து வெடிகுண்டு வீசியுள்ளது.



இதில் தப்பிய மனோகர், வாகனத்தில் இருந்து இறங்கி ஓடியுள்ளார். விரட்டிச் சென்ற கும்பல், மனோகரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பியது.

ஆத்திரம் அடைந்த மனோகரின் உறவினர்கள் 5 வீடுகளை தீ வைத்து எரித்தனர். தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது, மனோகர் உடலை எடுக்க முயன்ற காவல்துறையினர் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர்.

இதனிடையே, தீயை அணைப்பதற்காக வந்த தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் தடுத்தனர். இதனால், அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட மனோகரின் அண்ணன் காமராஜ். காங்கிரஸ் பிரமுகரான இவரும், கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். நேற்று அவரது நினைவுநாள் ஆகும். நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்து முடிந்த நிலையில் இன்று அவரது தம்பி மனோகர் படுகொலை செய்யபட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட மனோகர், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment