சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Nov 2014

நடிகர் சங்கத்திலிருந்து நீ்க்கப்படுவார்: விஷாலுக்கு சரத்குமார் எச்சரிக்கை!

நடிகர் சங்கத்தை பற்றி  நடிகர் விஷால் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பினால், நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார் என்று சங்கத்தின் தலைவர் சரத்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக இன்று திருச்சி வந்த அக்கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் சரத்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஸ்ரீரங்கம் தொகுதியில் .தி.மு. எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.

அதற்குள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதன்மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகி, மீண்டும்  தேர்தலில் போட்டியிடுவார். தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வருவார்.


அடுத்து தற்போது தமிழகத்தின் முதல்வராக உள்ள .பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு மிகச்சிறந்த முறையில் செயல்படுகிறது.


கர்நாடக அரசு காவிரியில் அணைக்கட்டும் முடிவை கைவிடவேண்டும் என எனது தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சியின்  குழு, கர்நாடக முதல்வரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.

காங்கிரசில் இருந்து பிரிந்து புதிய கட்சி தொடங்க உள்ள ஜி.கே.வாசன் தன்னுடைய கட்சியை ஆதரிக்கும்படி கோரிக்கை வைக்கிறார். அப்படியானால் எங்கள் கட்சிதான் அவர் துவங்க உள்ள கட்சிக்கு சீனியர் கட்சி. எனவே ஜி.கே.வாசன்தான் எங்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும்.

வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் உள்ள தொகுதியில் போட்டியிடுவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் 2016 சட்டமன்ற தேர்தல் பணிகளை நோக்கி தொகுதி செயலாளர்கள் எந்த வகையில் பணியாற்ற வேண்டும், கட்சி நிர்வாகிகளை முழுமைப்படுத்துவது, பூத் கமிட்டி அமைக்கும் பணியில் ஈடுபடுவது, வாக்காளர் பட்டியலை பரிசீலிப்பது, புதிய வாக்காளர்களை சேர்ப்பது, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை எவ்வாறு அமைப்பது, பொதுவான அரசியல் சூழ்நிலைகள் என பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி முகாமில் விளக்கப்படுகிறது.
 

ஒருபோர்களத்திற்கு செல்வதற்கு முன் வெறுமனே சென்று போர் புரிய முடியாது. கத்தியை கூர்தீட்ட வேண்டும். அதேபோல் இந்த பயிற்சி முகாமும் நடைபெறுகிறது" என்றார்.
கடைசியாக விஷால் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய சரத்குமார், "விஷால் தொடர்ந்து ஏன் நடிகர் சங்கத்தை பற்றி விமர்சித்து பேசி வருகிறார்கள் என தெரியவில்லை. இதுவரை விஷாலுக்கு எந்த பதிலும் கூறவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் விஷாலுக்கு நான் முறையாக பதில் சொல்ல விரும்புகிறேன்.

நடிகர் சங்கத்திற்கு 5 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் இருந்ததுநடிகர்கள் சிலர் தங்கள் சொந்த பணத்தை போட்டு பல நிகழ்ச்சிகள் நடத்தி அந்த கடன் அடைக்கப்பட்டிருக்கிறது. இப்போது நடிகர் சங்கத்துக்கு 3 அரை கோடி ரூபாய் வைப்பு நிதியும் வைக்கப்பட்டுள்ளது. சத்யம் சினிமாசுடன் ஒப்பந்தம் செய்து கட்டடம் கட்டி 29 ஆண்டுகளுக்கு லீசுக்கு விடப்பட்டுள்ளது.


இதற்கான முடிவை செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவுகள் எடுக்கப்பட்டது. நாங்கள் என்ன  வேலை செய்கிறோம் என தெரியாமல், இதற்கு முன்னால் சங்க செயல்பாடுகள் எப்படி இருந்தது, இப்போ எப்படி இயங்குகிறது என எதுவும் தெரியாமலேயே வெளியில் இருந்தபடி தேவையில்லாமல் தொடர்ந்து விஷால் ஏன் அவதூறு செய்திகளை பரப்புகிறார் என தெரியவில்லை. இது நல்லது இல்லை. இதுபோன்று தொடர்ந்து விஷால் அவதூறு செய்திகளை பரப்பினால், அவர் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார். நான் விஷாலை கடுமையாக எச்சரிக்கிறேன்" என்றார் காட்டமாக.


No comments:

Post a Comment