சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Nov 2014

இதுதாண்டா புள்ளி விபரம்!

பொழுதுபோகாத பொன்னையாவாக சில புள்ளி விபரங்களை கலெக்ட் பண்ணி கொடுத்திருக்கோம். இதெல்லாம் கூகுளில் தேடினால்கூட கிடைக்காது மக்கா!

பாட்டி வடை சுட்ட கதையில் வரும் அந்த வடை, உளுந்த வடைதான் என்று 56 சதவிகிதம் பேரும், ஆமை வடைதான் என்று 34 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எங்கேயோ பார்த்து வெறிக்கிற மாதிரிதான், 80 சதவிகிதம் பேர், தன்னோட முகத்தை ஃபேஸ்புக் ப்ரொபைலாக வெச்சிருக்காங்கலாம்!

ஜவுளிக்கடைகளில் புடவை எடுக்கச் செல்லும் பெண்கள் சராசரியாக 12 புடவைகளை புரட்டிப் பார்த்த பின்பே ஒரு புடவையைத் தேர்வு செய்கிறார்கள். இதே பெண்கள், அவர்களுக்கு ஆகாத உறவுகளுக்கு துணியெடுக்கும்போது கண்ணில் பட்டதை உடனே தேர்வு செய்வதாகவும் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில், ஆண்கள், இரண்டு சட்டையை எடுத்துப் பார்த்து இரண்டில் ஒன்றை தேர்வு செய்கிறார்கள்!

கடற்கரையில் சுண்டல் வாங்கிச் சாப்பிடுபவர்களில் எட்டு சதவிகிதம் பேர் மட்டுமே அந்த சுண்டல் காகிதத்தில் எழுதியிருப்பதை வாசிக்கிறாங்களாம்!

46
சதவிகிதம் மாணவர்கள், பெற்றோரிடம் ப்ரோக்ரஸ் கார்டில் கையெழுத்து வாங்குவதற்கு அவதி அவதியாக அலுவலகத்துக்குக் கிளம்பும் நேரத்தையே சரியாகப் பயன்படுத்துகிறார்கள்!


தமிழில் பயன்படுத்தப்படும் உறவுப் பெயர்களில் 'மச்சி' என்ற வார்த்தைதான் 39 சதவிகிதம் பயன்படுத்தப்படுகிறதாம்! அடுத்தபடியாக 34 சதவிகிதம் பேரால் 'மாப்ள' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறதாம்!

இந்தியா முழுவதிலும் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் சிலைகளில் வெறும் இரண்டு சதவிகிதம் சிலைகள் மட்டுமே முறையாக பராமரிக்கப்படுகின்றனவாம்!

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு சோறூட்டுவதற்காக தாய்மார்களில் 28 சதவிகிதம் பேர் நடு வீதிக்கு வந்து விடுகிறார்கள். 42 சதவிகிதம் தாய்மார்கள் தொலைக்காட்சியில் படம் காட்டி சோறூட்டுகிறார்கள். மிச்சமிருக்கும் 30 சதவிகிதம் குழந்தைகளுக்கு தினமும் விதவிதமான பொருட்களை வேடிக்கை காட்டியும், விளையாட்டு காட்டியுமே சோறூட்டுகிறார்கள. நிலவைக் காட்டி சோறூட்டும் தாய்மார்கள் மிகவும் அரிதாகவே இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது!

டேபிள் மேட்டை 18 விதமாக பயன்படுத்தலாம்னு விளம்பரப்படுத்துறாங்க. ஆனால் அதை சாய்த்து, நிமிர்த்தி, குப்புற கவிழ்த்தி, ஒரே போடாக போட்டு உடைத்துமாக 81 விதமாக பயன்படுத்தலாம்!

ஹெல்மெட்டோடு பயணிப்பவர்களில், ஹெல்மெட்டை தலையில் அணிந்திருப்பவர்கள் 36 சதவிகிதம். மீதி 64 சதவிகிதம்  ஹெல்மெட்டை பெட்ரோல் டேங்கிற்கு மாட்டி விடுகிறார்கள்!

சென்னை நகரில், சரக்கடித்துவிட்டு நடைபாதைகளில் விழுந்து கிடப்பவர்களின் எண்ணிக்கை சராசரியாக மாதத்துக்கு 208 பேர் என்று கணக்கிடப்பட்டுள்ளது!

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வெச்சிருக்கிற 90 சதவிகிதம் நபர்களிடம் பாஸ்போர்ட் இல்லை!



No comments:

Post a Comment