சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Nov 2014

இதுதாண்டா சினிமா போலீஸ்!

தமிழ் சினிமான்னா கிளை மாக்ஸ்ல போலீஸ் வருவாங்கங்கிறது மட்டும்தான் நமக்குத் தெரியும். அது தவிர  தமிழ் சினிமா போலீஸ் களின் இன்னும் சில பிரத்யேக அப்டேட்கள் கொஞ்சம் பார்க்கலாமா..?

  • அரெஸ்ட் ஆகப்போகிற ஆள் படிக்காதவனோ, பண்ணையாரோ  'மிஸ்டர். நல்லசிவம் யூ ஆர் அண்டர் அரெஸ்ட்னு சொல்லி அரெஸ்ட் பண்ணக்கூடிய நாகரிகம் தெரிஞ்சவங்க நம்ம சினிமா போலீஸ். ஆலமரத்துல படுத்துக்கிடக்கிற பெருசுகிட்ட அட்ரஸ் கேட்கும்போதுகூட, 'ஏய் மிஸ்டர்... இங்க வா. ஊர்த்தலைவர் வீடு எங்க இருக்குனு டீஸன்டா பேசக்கூடியவங்க. அதுவே என்னதான் ஹீரோ ஃபர்ஸ்ட் ரீலிலிருந்து அந்த ஸ்டேஷன்ல வேலை பார்த்துட்டு இருந்தாலும் அங்கே கான்ஸ்ட பிளாகவே இருந்து அடுத்த வாரம் ரிட்டையர்டு ஆகப்போற அந்தப் பெரியவரைப் பார்த்து, 'யோவ்... கான்ஸ்டபிள் இவனை அழைச்சிட்டுப் போய்யா..’னுதான் ஆர்டர் போடுவார். என்ன பண்றது ஹீரோவாச்சே!  
  •  அரெஸ்ட் பண்ண வர்ற போலீஸைப் படத்துல வர்ற சின்னப்பையன்கூட 'இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர்னுதான் கூப்பிடுவான். குறிப்பா, குற்றவாளியை அரெஸ்ட் பண்ணி ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போகும்போது குறைஞ்சது ஒரு கி.மீக்காவது அந்த ஜீப் பின்னாடியே 'இன்ஸ்பெக்டர்... எங்க அப்பாவை விட்டுங்க... இன்ஸ்பெக்டர்... இன்ஸ்பெக்டர்...’னு கத்திக்கிட்டே ஓடிப்போய் ஃப்ரீஷ் ஆகிற ஷாட் தவிர்க்க முடியாதது. இன்டெர்வெல் கட்டுக்கு உகந்ததும்கூட.
  •  போலீஸ் ஸ்டேஷன் டேபிளில் உலக உருண்டையோ பேப்பர் வெயிட்டோ முக்கியமான செட் பிராப்பர்டீஸ். 'மிஸ்டர் சிவா... இந்த ஃபைல்ல இருக்கிற குற்றவாளி கண்ணாயிரத்துக்கு இன்டர் நேஷனல் லெவல்ல தொடர்பு இருக்குனு பேப்பர் வெயிட்டை அசால்ட்டா சுத்திக்கிட்டே டயலாக் பேசுற ஆப்பீஸர்ஸ் தமிழ் சினிமாவுல நெறையப் பார்த்திருக்கோமே.
  • நிஜ போலீஸ் ஸ்டேஷன் வாசல்கள்ல எந்த போலீஸும் கையில துப்பாக்கி யோட நின்னு பார்த்தது இல்லை. ஆனா, சினிமா போலீஸ் ஸ்டேஷன் வாசல்கள்ல உச்சி வெயில்லயும் ஒருத்தர் முனையில கத்தி இருக்கிற அந்தப் பழைய கால துப்பாக்கியோட நின்னுக்கிட்டிருப்பார். போலீஸ் ஸ்டேஷனை எஸ்டாபிளிஷ் பண்ற ஜிம்மிஜிப் ஷாட்டுக்கு அது ரொம்ப முக்கியம்ல.
  •  சினிமா இன்ஸ்பெக்டர்களைப் பார்த்தீங்கனா, டீக்கடைக்கு டீ குடிக்கப் போனாக்கூட இடுப்புல போட்டிருக்கிற பெல்ட்டுடன் ஒரு ரிவால்வரையும் சேர்த்துக் கட்டிக்கிட்டுப்போவாங்க. அரெஸ்ட் ஆகி ஜீப்பில போற ஹீரோ, இன்ஸ்பெக்டர் அசந்த நேரமா பார்த்து அவரோட ரிவால்வரை எடுத்து மிரட்டி தப்பிச்சு, திரைக்கதையில ஒரு திருப்பத்தை ஏற்படுத்தணும்ல.
  • நிஜ போலீஸ் ஸ்டேஷன்கள்லாம் இப்போ டைல்ஸ் போட்டு, கான்கிரீட் பில்டிங்ல கலர் கலர் பெயின்டிங்ல கலக்கலா இருக்கு. ஆனா, சினிமாவுல மட்டும் ஒவ்வொரு செங்கல்லும் தனித்தனியா தெரியிற மாதிரியான சிவப்பு கலர் பெயின்டிங் சுவர்களுக்கு நடுவுல போலீஸ் ஸ்டேஷன் இருக்கும். பார்த்தாலே ஈஸியா புரிஞ்சிடும் பாருங்க.
  •  ஹீரோவுக்கு, பெரும்பாலும் சொந்த ஊரிலோ அல்லது வில்லன்கள் நிறைய இருக்கும் ஊரிலோதான் போஸ்டிங் வழங்கப்படும். அதுவும்கூட எடுத்தவுடனே உயர் பதவிகள்தான் வழங்கப்படும். கான்ஸ்டபிள் போன்ற பதவிகள் கெஞ்சிக்கேட்டாலும் தரப்பட மாட்டாது. விதிவிலக்கு 'மருதமலை’. அந்தப் படத்தில்கூட இரண்டாம் பாதியில் ஆக்ஷன் கிங், உயர் அதிகாரியாக பதவி உயர்வுபெற்று தப்பு செய்யும் அரசியல்வாதிகளை அரெஸ்ட் செய்து அல்லையிலேயே மிதிப்பார்.
  • ஹீரோவிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் உயர் அதிகாரி, 'அவனைப் பத்தின மொத்த டீட்டெய்லும் இந்த ஃபைல்ல இருக்குனு சொல்லி ஒரு ஃபைலைக் கொடுப்பார். அதை ஷுட்டிங் முடிகிறவரைக்கும் பத்திரமா பாதுகாக்க வேண்டியது அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் பொறுப்பு.

  • நாட்டாமையால் மானபங்கம் செய்யப்பட்ட ஹீரோயின், கம்ப்ளெயின்ட் கொடுப்பதற்காக அவசரமா ஸ்டேஷனுக்கு ஓடி வர்றாங்களே, ஸ்டேஷன்ல இருக்கிறது நல்ல போலீஸா, கெட்ட போலீஸானு எப்படித் தெரியும். சட்டை பட்டன்கள் திறந்து, முண்டா பனியன் தெரிய அலட்சியமா சிகரெட் அடிச்சுக்கிட்டிருந்தா, அவர் கெட்ட போலீஸ், அதுவே, காலர் பட்டன் வரைக்கும் போட்டு உட்கார்ந்து ஃபைல்ஸ் பார்த்துக்கிட்டிருந்தா நல்ல போலீஸ். சிம்பிள்.
  • கெட்ட போலீஸ்னா, ஒரு துப்பாக்கிக்கு ஆறு குண்டுகள்தான் இருக்கணும். அந்த ஆறு குண்டுகளைப் புத்திசாலித்தனமா பயன்படுத்தி ஹீரோவைப் பிடிச்சாதான் உண்டு. குறிப்பா, ஹீரோ, அந்த போலீஸுக்கு எதிரா வசமா மாட்டியிருக்கும்போதுதான் குண்டு தீர்ந்துடுச்சுங்கிற விஷயத்தை ரிவீல் பண்ணணும். அதுவே, ஹீரோதான் போலீஸ்னா, அன் லிமிடெட் குண்டுகள் வழங்கப்படும். கணக்கெல்லாம் கிடையாது.
  • சேஸிங் காட்சிகளில், போலீஸார் ஹீரோவைத் துரத்திக்கொண்டு பைக்கில் போய்க்கொண்டிருக்கும்போது, அவர்களை நோக்கி ஹீரோ ஒரு பல் குத்தும் குச்சியை வீசியெறிந்தால்கூட போதும், உடனே ஹைபிட்ச்சில் கத்திக்கொண்டே பைக்கோடு பறந்துசென்று அருகில் இருக்கும் நீர்நிலைகளில் விழத்தெரிந்த போலீஸ்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  


ஏம்ப்பா, அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ்... இதெல்லாம் நோட் பண்ணாதீங்கப்பா!


No comments:

Post a Comment