‘கழுகு’ - அதிக காலம் உயிர் வாழக் கூடிய பறவைகளில் ஒன்று. ஒரு கழுகு 70 ஆண்டு காலம் உயிர் வாழலாம். ஆனால் நாற்பதாவது வயதில் ஒரு சவாலான, வலி மிகுந்த ஒரு முடிவை எடுக்க வேண்டும்!
அதன் நாற்பதாவது வயதில் அதன் நீளமான அலகு இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் முடியாதபடி வளைந்து விடும். அதன் இறகுகளும் தடித்து பறப்பதை கஷ்டமானதாக மாற்றிவிடும். இன்னும் முப்பது ஆண்டுகள் வாழ கழுகின் முன் இரண்டு தெரிவுகள்: ஒன்று இறந்து விடுவது. அல்லது மாற்றம் எனும் வலிமிக்க நிகழ்விற்குத் தன்னையே உட்படுத்துவது.
இந்த மாற்றத்தை அடைய வேண்டுமானால் உயர்ந்ததொரு மலைக்குப் பறந்து செல்ல வேண்டும். தன் கூட்டில் குடியிருக்கும் கழுகு அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அந்த அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை தன் கூட்டிலேயே தனித்திருக்கும். புதிய அலகு வளர்ந்தபின் அதைக் கொண்ட தன் உடலில் இருக்கும் அனைத்து இறகுகளையும் தானே பிய்த்தெடுக்கும். புதிய இறகுகள் முளைத்த பின்பு தன் கூட்டில் இருந்து புதிய பறவையாக மீண்டும் உத்வேகத்துடன் வானம் வசப்படுத்த இறக்கை விரிக்கும்.
இது நமக்கு சொல்வது என்ன? மாற்றம் இல்லாவிட்டால் இந்த வாழ்க்கை வெறுத்துப் போகும். கடந்த கால கவலையான, வெறுப்பான நினைவுச் சுமைகள் நம்மைச் சுற்றி போட்டு இருக்கும் சங்கிலிகளை நாம் உடைத்து எறிந்தால் மட்டுமே நிகழ்காலத்தில் மேன்மை அடையலாம். புதிய பயணத்தை துவக்க நம்மை மட்டுப்படுத்தும் பழைய சிந்தனைகளில் இருந்து விடுபட வேண்டும். நிலைநிறுத்தப்பட்ட பார்வைகளை நாம் மாற்றி.. புதிதாக பயணப்பட புது அர்த்தத்தோடு வாழ்வு வசப்படும்.
No comments:
Post a Comment