உடம்பை ஃபிட்டாக வைத்து அகில உலக ஆடவர்களை ஜொள்ளவைத்து கோடானகோடிகளை வாரிக்குவித்து உலகின் டாப்10 பணக்கார ஃபிட்னெஸ் வுமன்களாகத் திகழ்பவர்கள் இவர்கள். 'தி ரிச்சஸ்ட்.காம்’ இணையதளம் இவர்களைப் பட்டியலிட்டுள்ளது. என்ஜாய்!
10. ஜெலனா அபோ: செர்பியன் பொண்ணு. 2003லிருந்து மாடலிங்கில் கொடிகட்டிப் பறக்கும் இந்த அழகியின் ஜாகை, இப்போது அமெரிக்கா. ஹவாய் தீவில் சொந்தமாக வீடு வைத்திருக்கும் இவரின் ஆசை, ஒரு கருப்பின கூடைப்பந்து விளையாட்டு வீரரை மணமுடித்து குழந்தை பெற்றுக்கொள்வதுதானாம். ஆசை நிறைவேறட்டும்!
9. கியானா டாம்: சியர் லீடராய் கால்பந்தாட்ட மைதானத்தில் வாழ்க்கையை ஆரம்பித்த இவர், ஈ.எஸ்.பி.என் சேனலில் ஃபிட்னெஸ் வகுப்புகளால் பணம் குவிக்கிறார். பீச்சில் காற்றுவாங்கும் ஒய்யார போஸ்களில் கிறங்கடிக்கும் கியானாவுக்கு சார்லீஸ் ஆஞ்சல்ஸ் டைப் ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசையாம். அபுஹாய் அபுஹாய்!'
8. மின்டி ஸ்மித்: 342434 என்று செய்துவைத்த இந்த மெழுகுச்சிலை பிறந்தது நியூயார்க்கில். வளர்ந்தது லண்டனில். 'உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்வது எப்படி?’ என்று இவர் எழுதிய ஒரு டஜன் புத்தகங்கள் இப்போது கண்டங்கள் தாண்டியும் சக்கைப்போடு போடுகிறது. மொழிபெயர்ப்பு பண்ணலாமே!
7. மார்ஷியா பிரின்ஸ்: 362636 என்பதோடு அசரடிக்கும் 5 அடி 9 அங்குலம் உயரம்கொண்ட ஸ்பெயின் தேவதை. ஜிம் நிபுணியாகக் கலக்கியவர், இப்போது மிஸ் பிகினி யுனிவர்ஸாக உலகக் கவர்ச்சி காலண்டர்களை அலங்கரிக்கிறார். அயர்ன் மேன், நேச்சுரல் மசில், பிளானெட் பசில் என மூன்று ஃபிட்னெஸ் இதழ்களின் எம்.டியாக பிஸி பிஸி பேபியாக உலகை வலம்வருகிறார்!
6. கிம் டோலன் லெடொ: 40 தொட்டாலும் இன்னும் இளமை ஊஞ்சலாடும் ஏஞ்சல். கணவரோடும் குழந்தைகளோடும் பிஸியான இவரை, மாடலிங் பக்கம் திருப்பிவிட்டது காதல் கணவர்தானாம். 11 ஃபிட்னெஸ் பத்திரிகைகளை நடத்திவரும் இவர் மாஸ்டர் டிகிரி முடித்ததும், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவியாகக் காலடி வைத்திருக்கிறார். டாக்டர் பியூட்டி!
5. நடாலியா: ஃபிட்னெஸ் பயிற்சி வகுப்புகளில் பிஸியாக இருக்கும் இந்த அமெரிக்க மங்கை 17 பிரபல ஃபிட்னெஸ் பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் கடந்த இரண்டு வருடங்களில் இடம் பிடித்திருக்கிறார். நான்கு மாதக் கைக்குழந்தைக்குத் தாயான இவர், ஒருநாள்கூட எக்ஸர்சைஸ் பண்ணாமல் இருந்தது இல்லை!
4. ஆவா கோவன்: சிங்கப்பூரில் வசித்துவரும் ஆவா பிறப்பால் அமெரிக்கர். இப்போது இணையத்தின் வாயிலாக பிஸியான பாடிபில்டிங் கன்சல்டன்ட். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் வாயிலாக லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை ஃபாலோ செய்துவருகிறார்கள். எளிய குடும்பத்தில் பிறந்து புகழின் உச்சத்தில் இருக்கும் இவரின் வாழ்க்கையைப் படமாக எடுக்க முயற்சி நடக்கிறது ஹாலிவுட்டில். செம!
3. ஜேமி ஏஸன்: சியர்லீடராக ஆரம்பித்து ஃபிட்னெஸ் புத்தகங்களில் கட்டுரை எழுதியே பாப்புலரான இவர், இப்போது அமெரிக்க ஃபேஷன் ஐகானாகத் திகழ்கிறார். செல்ஃபிகளில் சிதறவைக்கும் இவர் சமீபத்தில் திருமணம் செய்த கையோடு, 'எப்படி எல்லாம் பாதுகாப்பாய் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்?’ என விளக்கிய வீடியோ வைரலானது. ஷேரிங் நல்லது!
2. ஜெனிஃபர் நிக்கோல் லீ: டாக் ஷோ தேவதை ஓபரா வின்ஃப்ரேவே எழுந்து கைதட்டிய பேரழகுக்குச் சொந்தக்காரப் பெண். காலையில் இவர் வழங்கும் ஃபிட்னெஸ் யோகா ஷோ ஒன்று ஜப்பானில் ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறது. வெறும் ஃபிட்னெஸ் மட்டும் அல்லாமல் பிசினஸிலும் கில்லியாக இருக்கும் இவருக்கு ஃபெராரி காரை ஆபத்தான வேகத்தில் ஓட்டுவது என்றால் கொள்ளை இஷ்டம்!
1. அலிஷியா மேரி: ஆப்பிரிக்கஅமெரிக்க காக்டெய்ல் தேவதை. முதல் இடத்தில் இருக்கும் இந்த அழகுப் புயல்தான் இன்றைய தேதியில் அதிகம் சம்பாதிக்கும் கருப்பின மாடல். அதோடு உலகின் அனைத்து முன்னணி ஃபிட்னெஸ் இதழ்களிலும் இடம் பிடித்த ஹாட் சாக்லெட். சினிமா வாய்ப்புகளையும் மாடலிங்கிற்காகத் தியாகம் செய்த இவருக்கு உலகம் சுற்றுவது என்றால் அவ்ளோ இஷ்டம். இந்தியாவுக்கு வாம்மா கருப்பு மின்னல்!
No comments:
Post a Comment