மக்களின் எண்ணமறிந்து செயல்பட்டால் லாபம் நிச்சயம் என்பதையறிந்த ‘ க்லாட்ஜ் ’ என்ற நிறுவனம் நவீன காப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தைச் சேர்ந்த Dmytro
Goncharenko, Dmitriy Prosvirnov, தலைமையில் ஒரு குழு இந்த நவீன காப்பை தயாரித்துள்ளது.
‘‘நாங்கள் கைக்கு அடக்கமான கடிகார போன் ஒன்றினை அறிமுகப்படுத்த வேண்டும் என்றுதான் நினைத்தோம். கடந்த 3 வருடங்களாக சந்தையில் வந்திருக்கும் புதிய சாதனங்களை வாங்குவது அவற்றை பயன்படுத்தி பார்ப்பது என்று சோதனை முயற்சிகளில் தான் ஈடுபட்டிருந்தோம். ஸ்மார்ட் கைகடிகாரம் எனக்கு வசதியாக படவில்லை முக்கியமாக அதில் சொல்ல வேணடுமென்றால் பேட்டரி, குறைந்த திறன் கொண்ட பேட்டரி மட்டுமே அதில் பயன்படுத்த முடிவதால் அது சரிபட்டு வரவில்லை .
சாதாரண போன் எப்படி பயன்படுத்தப்படுகிறதோ அது போலவே இதுவும் இருக்க வேண்டும் என்பது எங்களது இலக்கு. பார்த்த உடனே கவரும் வண்ணமும், அதே சமயம் பயன் தரக்கூடியதாகவும் இருக்கவேண்டும் என்று நினைத்தோம். மேலும், எங்களது தயாரிப்பு பார்க்க அழகாகவும் அணிந்து கொள்ள ஏதுவாகவும் அதே சமயத்தில் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் இதற்காக டஜன் கணக்கில் புதுப்புது யுத்திகளை கையாண்டோம். அதன் டிசைகளிலும், தொழில் நுட்பத்திலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தோம் ஆண் பெண் இருபாலரும் அணிந்து கொள்ள வேண்டுமென்பதால் அதற்கேற்ப தயாரிக்க முடிவு செய்தோம் அப்போது தான் எங்களுக்கு இந்த ஐடியா வந்ததும் நாங்கள் உரக்க சொல்லியது "யுரேகா" என தங்கள் தயாரிப்பு பற்றி உற்சாகமாக சொல்கிறார்கள்.
புளூடூத், ஆண்ட்ராய்டு, புகைப்படங்கள் என அனைத்து வசதிகளும் உள்ளது. எந்நேரமும் இதை கையில் அணிந்திருக்கலாம் இதனால் தோலுக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படாது.
No comments:
Post a Comment