சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Nov 2014

வெளியூரில் உள்ள மனையின் பாதுகாப்பும் பராமரிப்பும்...

நம் வசதிக்கு ஏற்ப, வாய்ப்பிருக்கும் ஓர் ஊரில் மனை வாங்கிப்போடுவதில் தப்பில்லை. ரியல் எஸ்டேட் துறை எந்த அளவுக்கு கவர்ச்சிகரமாக இருக்கிறதோ அதே அளவுக்கு மோசடிகளும் நிரம்பி இருக்கிறது. நமக்கு சம்பந்தமே இல்லாத வெளியூரில் வாங்கும் சொத்துக்களைப் பராமரிக்க ஆளில்லாமல் மோசடிக்காரர்கள் கையில் மாட்டிக்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

நண்பர், நிலத்தில் முதலீடு செய்கிறேன் என்று செய்யாறு பக்கம் இடம் வாங்கினார். ஆறு மாதமாக அந்தப் பக்கமே செல்லவில்லை.

அந்த இடத்தைப் பார்க்கச் சென்றபோது, அந்த இடத்தை ஆக்கிரமித்து குடிசை போட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு, அடாவடி அதிகரித்துவிட்ட நிலையில் வெளியூரில் இடம் வாங்கிப் போட்டுள்ளவர்கள் கவனிப்பை அதிகப்படுத்திக்கொள்ளாமல் இருந்தால் இதுபோன்ற பாதிப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.


வெளியூரில் இடம் வாங்கியவர்கள் எந்த வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

இடம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் நமது பெயருக்கு மாற்றிக்கொள்வது முக்கியம் நேரில் சென்று பார்ப்பது

நாம் வாங்கிய இடத்தின் பக்கத்திலும் இடம் வாங்கி இருக்கிறார்கள். அதனால் நமது இடத்தை மட்டும் எப்படி ஏமாற்ற முடியும் என்று அசட்டையாக  இருக்கக் கூடாது. கவனிக்க ஆட்கள் வருவதில்லை என்பதுதான் ஏமாற்றுக்காரர்களுக்கான சமிக்கை. எனவே வீண் அலைச்சல் என்றோ அடிக்கடி பார்ப்பது செலவு பிடிக்கிறது என்றோ யோசிக்க வேண்டாம். குறைந்தபட்சம் மூன்று மாதத்துக்கு ஒருமுறை நேரில் சென்று பார்த்து வருவதை பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி பார்க்க போகிறபோது செடி நடுவது, மரம் வைத்தால் பராமரித்து வருவது என வேலைகள் செய்ய வேண்டும்.

உள்ளுர் தொடர்பும் நண்பர்கள் உதவியும்

இடம் வாங்கியுள்ள ஊரில் நமது உறவினர்கள் அல்லது நண்பர்கள் இருக்கலாம். அவர்களை அவ்வப்போதுநமது இடத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வரச் சொல்லலாம். நமது இடத்தின் அளவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா அல்லது வேறு யாரேனும் உரிமை கோருகிறார்களா என  அந்த இடத்தில் நடக்கும் சமீபத்திய மாற்றங்களை அறிந்துகொள்ள முடியும். ஆனால், உங்கள் மீது அக்கறை கொண்ட நபர்கள் மட்டுமே உங்களுக்கு உண்மையான விவரங்களைத் தருவார்கள்.

நான்கெல்லை பாதுகாப்பு

இடத்தின் நான்கு எல்லைகளையும் அளந்து அதன்படி சுற்றுவேலி அல்லது சுவர் அமைத்துக் கொள்ளலாம். அல்லது மரக்கன்றுகள் நட்டுவிட வேண்டும்.

வணிக முக்கியத்துவம் கொண்ட இடமாக இருந்தால் அத்துமீறுபவர்கள், ஆக்கிரமிப்பவர்கள்  மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.

தவணையில் மனை வாங்குவது

வெளியூர் மனைகள் பெரும்பாலும் தவணையில்தான் வாங்கப்படுகிறது. எனவே, தவணையில் மனை வாங்குபவர்கள் தெளிவாக இருக்க வேண்டும். முதலில் இடத்தைக் காட்டும்போதே குறிப்பிட்ட தொகையை கொடுத்து பத்திரப்பதிவு செய்து விடவும்.


முழு பணத்தை கொடுத்த பிறகு பத்திரப்பதிவு செய்துகொள்ள தாமதம் ஆகிறது என்றால், சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட்காரர்கள் வேறொரரு இடத்தைக் காட்டி நீங்கள் கொடுத்த பணத்துக்கு இதுதான் கிடைக்கும் என ஏமாற்ற வாய்ப்புள்ளது.


No comments:

Post a Comment