சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Nov 2014

150 ஆண்டுகால ஈடன் கார்டன் வரலாறு!ந்தியாவில் ஒரு விளையாட்டை மதமாக கருதும் அளவிற்கு இருக்கிறார்கள் என்றால் அது கிரிக்கெட்டாக மட்டும் தான் இருக்கும்அப்படிப்பட்ட கிரிக்கெட் ஆட்ட மைதானங்கள் எப்போதுமே கிரிக்கெட் ரசிகர்களோடு ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்தி இருக்கும். அப்படிபட்ட மைதானங்களில் ஒன்று, இந்தியாவின் மிகச்சிறந்த மைதானமாக கருதப்படும் ஈடன் கார்டன் மைதானம்.

1864 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த மைதானம், இன்று 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆரம்ப நாட்களில் கால்பந்து ஆடுகளமாக பயன்படுத்தப்பட்ட ஈடன் கார்டன், 1,20,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய மைதானமாக இருந்ததுள்ளது. பின்னர் கட்டமைப்புகள் என்று உருமாறி 66,349 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய மைதானமாக உள்ளது. முதலில் 1908 ஆம் ஆண்டு உள்ளூர் அணியான கல்கத்தா அணியின் ஆடுகளமாக இருந்த ஈடன் கார்டன்பின்னர் இந்திய அணி பங்கேற்கும் சர்வதேச ஆடுகளமாக 1934ல் மாறியது. பின்னர் தொடர்ந்து பல்வேறு போட்டிகளை சந்தித்து வந்த ஈடன் கார்டனுக்கு, பல சிறப்புகள் உண்டு. அவற்றில் 10 முக்கிய நிகழ்வுகள் இதோ...

1.
இங்கு முதல் டெஸ்ட் போட்டி 1934ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடப்பட்டது. இந்த ஆடுகளத்தில் நடைபெற்ற முதல் சர்வதேச போட்டி இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு 1987 ஆம் ஆண்டு மைதானத்தின் முதல் ஒருநாள் போட்டி பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்டது.

2. 1996 ஆம் ஆண்டு உலக்கோப்பையின் போது, இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோற்கும் என தெரிந்ததும், இந்திய ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைந்து ஆட்டத்தை தடுத்தனர். இதனால் இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

3. 1999
ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்ததும் அதைத்தொடர்ந்து கலவரம் ஏற்படமைதானத்தில் உள்ள அனைத்து ரசிகர்களும் வெளியேற்றப்பட்டு, காலியான மைதானத்தில் போட்டி தொடர்ந்த நிகழ்வு பதிவானதும் இங்குதான். 

4.
மார்ச் 2001ல், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஃபாலோ ஆன் பெற்று தடுமாறிய இந்திய அணியை, 281 ரன் குவித்து வெற்றிப்பாதைக்கு திருப்பினார் விவிஎஸ் லட்சமணன். அந்த சாதனை நிகழ்ந்தது இந்த மைதானத்தில்தான்.

5.
அதே போட்டியில் ஹர்பஜன் இரண்டு இன்னிங்ஸிலும் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியதும் இந்த மைதானத்தில்தான்! கபில்தேவ் ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது இந்த மைதானத்தில் தான்.


6. நவம்பர் 24, 2005ல் நடைபெற்ற ஆட்டத்தில் 'கொல்கத்தாவின் இளவரசன்' என வர்ணிக்கப்பட்ட கங்குலி கழற்றிவிடப்பட்டதால், இந்திய ரசிகர்கள் தென்னாப்பிரிக்க அணிக்கு ஆதரவளித்து, அந்த போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற நிகழ்வும் இங்குதான் நடைபெற்றது.

7.
இதுவரை இந்த மைதானத்தில் 28 ஒரு தினப்போட்டிகளும், 39 டெஸ்ட் போட்டிகளும் நடைபெற்றுள்ளது. ஒரே ஒரு டி20 போட்டி நடைபெற்றுள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஹோம் கிரவுண்ட் ஈடன் கார்டன் மைதானம்தான்!

8.
ஒருநாள்போட்டியின் தனிநபர் அதிகபட்ச ரன்னான 264 ரன் குவிப்பு ரோஹித் ஷர்மாவால் 150வது ஆண்டு விழா போட்டியின் போது நவம்பர் 13 அன்று அடிக்கப்பட்டது.

9.
இந்திய மைதானத்தின் நான்கு மிகப்பெரிய டெஸ்ட் ரன்களும் இந்திய அணியால் குவிக்கப்பட்டவை:  2001ல் 657–7 , 2010ல் 643–6 , 1998ல் 633–5 , மற்றும் 2011ல்  631–7.

10.
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான சச்சின் டெண்டுல்கரின் 199வது போட்டியில் ஆடுகளம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சச்சின் முகமுடி அணிந்து ஆடுகளம் முழுவதும் சச்சினாக தெரியும்படி ரசிகர்கள் செய்ததும் இந்த மைதானத்தில் தான்.

உணர்வுகளோடு ஒன்றி போய் இருக்கும் இந்த மைதனாம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பொறுத்தவரையில் 'இந்தியாவின் லார்ட்ஸ்' என்று வர்ணிக்கப்படுகிறது. இன்று 150வது ஆண்டு விழாவை ரசிகர்களோடு இணைந்து கொண்டாடி வருகிறதுNo comments:

Post a Comment