சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Nov 2014

போன உயிர் திரும்பிய அதிசயம்!

ம் நெருங்கிய உறவினர், நண்பர் யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால், 'ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை' என்ற அறிவு மேலோங்கி, இறப்பால் ஏற்பட்ட ஈடு செய்யமுடியாத இழப்பை தாங்கிக் கொள்ள முயற்சிப்போம். போன உயிர் திரும்பாது என்ற தெளிவு நம்மிடையே இருப்பதுதான் இதற்குக் காரணம்.

சில மணி நேரத்துளிகள் சலனமின்றிச் சவமாகக் கிடந்த உடலில் மீண்டும் உயிர் திரும்புவது என்பது யாரும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. அத்தகைய ஒரு அரிய வரம் வாய்க்கப்பெற்றிருக்கிறது ரூபிக்கு.!அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள 'போகா ரேடன்' பகுதியைச் சேர்ந்தவர் ரூபி கிராயுபெரா காசிமிரோ. 40 வயதான இந்தப் பெண்மணி பிரசவத்துக்காக, அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் மருத்துவம் பார்த்திருக்கின்றனர் மருத்துவர்கள். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக ரூபியின் வயிற்றில் உள்ள பனிக்குடம் உடைந்து அதிலிருந்த நீர் ரத்தத்துடன் கலந்தது.

இதனைத் தொடர்ந்து ரூபியின் உடல்நிலை மோசமடைந்தது. படிப்படியாக நாடித் துடிப்பு குறைந்து கொண்டே போனது. சிறிது நேரத்தில் நாடித் துடிப்பும் இல்லாமல் போக, ரூபி இறந்து விட்டதாக அவரது உறவினர்களிடம் தெரிவித்து விட்டனர் மருத்துவர்கள். இதற்கிடையே ரூபியின் வயிற்றில் இருந்து பெண் குழந்தையைப் பத்திரமாக வெளியே எடுத்து விட்டனர்.

அந்த நேரத்தில்தான் மருத்துவர்கள் ஒரு அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யமளிக்கும் சம்பவத்தைக் கண்டிருக்கிறார்கள். இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட ரூபியின் உடல் 45 நிமிடங்களுக்குப் பிறகு, அசைய ஆரம்பித்திருக்கிறது. 'இறந்துவிட்டார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உடலில் அசைவு இருக்கிறதே!' என்று வியந்து போன மருத்துவர்கள், உடனடியாக ரூபிக்குச் சிகிச்சை அளித்து மீண்டும் உயிர் பிழைக்க வைத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment