சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Nov 2014

ஆந்திராவில் 'பசுமை புரட்சி': அதிர்ச்சியில் தமிழக காவல்துறை!

ந்திராவில் 'பசுமை புரட்சி'யை உண்டாக்கி வருகிறார்கள் நம்மவர்கள். 'பசுமைப்புரட்சி' என்றதும் இது பாராட்டுக்குரிய பசுமை விகடன் கட்டுரை என நினைத்துவிடப்போகிறீர்கள். தலைகுனிவை ஏற்படுத்தும் தமிழர்களின் கதை இது! 

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக கஞ்சா போதைப்பொருளின் நடமாட்டம் சகஜமாகி இருக்கிறது. முன்பு காவல்துறையின் சோதனைகளில் எப்போதாவது கஞ்சா சிக்கும். அதுவும் பெரும் மதிப்பிலானதாக இருக்காது. ஆனால் இன்றைக்கு சர்வசாதாரணமாக காவல்துறையின் சோதனையில் கண்ணில் சிக்கும் பொருளாகியிருக்கிறது கஞ்சா
சமூகத்தின் கலாசாரத்துக்கு சவால் விடும் கஞ்சா, ஆந்திராவில் பெரும் பரப்பளவிலான நிலங்களில் பயிரிடப்பட்டு, தமிழகம் மட்டுமில்லாமல் வாய்ப்புள்ள பல நாடுகளுக்கும் கடத்தப்படுகிறது என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது. ஆந்திராவில் வெற்றிகரமாக கஞ்சாசாகுபடிசெய்யும் வியாபாரிகள் நம்மூர்க்கார்கள் என்பது இன்னும் அதிர்ச்சி தரும் தகவல். 

கடந்த  2 வாரங்களுக்கு முன் மதுரை மேலூர் அருகே சிட்டாம்பட்டி டோல்கேட்டில் எஸ்.பி.சாந்தி தலைமையிலான போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அந்த வழியில் பெரும் மதிப்பிலான கஞ்சா கடத்தப்படுவதாக அவர்களுக்கு முன்கூட்டி கிடைத்த தகவலையடுத்து அந்தசோதனையில் ஈடுபட்டிருந்தனர்நேரம் கடந்துகொண்டிருக்க சோதனையிட்ட எந்த வாகனத்திலும் கஞ்சா சிக்கவி்ல்லை
ஏமாற்றமான நிலையில் தென்னங்கன்றுகளை ஏற்றி வந்த மினிவேன் ஒன்றை அவர்கள் சோதனையிட்டனர்அதில் ஒன்றுமில்லை என அனுப்ப எத்தனித்தபோது காவலர் ஒருவருக்கு அந்த வேனின் மீது சந்தேகம் எழுந்ததுஎந்த மினி வேனிலும் சரக்கு வைக்கும் இடம் இவ்வளவு உயரமாக இருக்காதே என்று மீண்டும் அந்த வாகனத்தை இஞ்ச் பை இஞ்சாக சோதனையிட்டபோது, வேனின் அடிப்பாகத்தில் தனி அறை ஒன்று இருப்பதை கண்டனர். அதை உடைத்து பார்த்தபோது உள்ளே 16 மூட்டைகளில் 320 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது 
 

அந்த வாகனத்தில் வந்த ராஜபிரபு, சதீஷ் இருவரையும் தீவிரமாக விசாரித்ததில், ஆந்திராவிலிருந்து அதை கொண்டு வருவதாகவும், சென்னையை சேர்ந்த  ஆனந்தவேலு என்பவர் ராமநாதபுரம் செல்வம் என்பவரிடம் அதனை சேர்க்கும்படி சொன்னதாக கூறியுள்ளனர். தற்போது இருவரும் சிறையில்... இதில் முக்கிய புள்ளிகளை போலீஸ் தேடி வருகிறது. 

இதுபோல் கடந்த மாதம் திருவாதவூர் ஐயம்பிள்ளை என்பவரை  டூவீலரில் 22 கிலோ கஞ்சாவுடன் பிடித்தனர். விசாரித்ததில் ஆந்திர மாநிலம் பாடகிரியிலிருந்து வாங்கி வந்ததாக கூறினார். அடுத்து வெள்ளரிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில், மதுரை தனிச்சியத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரிடமிருந்த ஆறு கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். அவருடைய கையும் ஆந்திர திசையையே காட்டியது.
சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற ரயிலில்  கிலோக்கணக்கில் கஞ்சா  கடத்தி வந்த பெண்மணியையும் இதே மாதத்தில் கைது செய்தனர். அவரும் ஆந்திரா பல்லவியைத்தான் பாடினார்தன்னை ரயிலில் ஏற்றிவிட்டு கணவர், பஸ்ஸில் வந்து கொண்டிருப்பதாக கேஷுவலாக சொன்னாராம். கேஷுவலாக கடத்துகிறார்கள்...கேஷுவலாக கைதாகிறார்கள்.
வெளிமாநிலங்களுக்கு மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் ஆந்திராவில் பயிரிடப்படும் கஞ்சா கடத்தப்படுவது  கடந்த 3 ஆம் தேதி தெரியவந்து அதிர்ச்சி தந்தது காவல்துறையினருக்கு. கடந்த தேதி இலங்கைக்கு கஞ்சா கடத்தியதாக  ஐந்து தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியிலிந்து, நாட்டுப்படகில் கடலுக்கு சென்ற அவர்கள், நடுக்கடலில் சந்தேகத்திற்கிடமான வகையில் காத்திருந்த நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ,  2 கிலோ கஞ்சாவும்; 150 பார்சல்  'ஹான்ஸ்' புகையிலை பாக்கெட்டுகளுமாக பிடித்து கைது செய்தனர்
இலங்கை கல்பெட்டியா போலீசாரின் விசாரணைக்குப்பின் இப்போது புத்தளம் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றனர் அவர்கள். தமிழகத்தை சேர்ந்த கஞ்சா கடத்தல் புள்ளிகள் இதுபோன்று இலங்கை வழியாக பல நாடுகளுக்கு கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழக காவல்துறை கடற்படை, கடலோர காவல்படையின் கண்களில் இருந்துசாமர்த்தியமாக தப்பிக்கும் இவர்கள்அங்கு மாட்டிக்கொள்கின்றனர். சிக்காதவர்கள் இன்றும் தொடர்கிறார்கள் தங்கள் கடத்தலை.
 

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மதுரை பகுதிகளில் ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 520 கிலோ மதிப்பிலான கஞ்சா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. பிடிபட்டதே இவ்வளவு என்றால், பிடிபடாமல் தமிழகத்திற்குள் அன்றாட புழங்கும் கஞ்சாவின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என கணக்கிடுவது மலைப்பை தரும் மதிப்பீடாகும். இதுபற்றிய வேதனைக்குரல் சமூகஆர்வலர்களிடமிருந்து வருகிறது. 

இதுபற்றி நம்மிடம் பேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர்  ‘தேனி மாவட்ட கேரளா எல்லைப்பகுதிகளில் கஞ்சா பயிரிட்டு வந்த சமூக விரோதிகள் காவல்துறையின் கெடுபிடிகளால்  இங்கு பயிரிடுவதை விட்டுவிட்டனர். கஞ்சா நடமாட்டம் குறைந்துவிட்டது என காவல்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டநிலையில் இந்த கஞ்சா விவசாயிகள், ஆந்திராவில் மையம் கொண்டுவிட்ட தகவல் இப்போது தெரியவந்திருக்கிறது
தமிழகத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வதுபோல ஆந்திராவில்  நிலங்களை குத்தகைக்கு எடுத்து கஞ்சா பயிரிட ஆரம்பித்து விட்டார்கள். நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதி என்பதால் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்து இவர்கள் போளீஈசால் எளிதாக  நெருங்க முடியாதபடி அவர்களின் பாதுகாப்பில் உள்ளனர் 

நில உரிமையாளர்களுக்கு  லாபத்தில் கணிசமான பணத்தை தந்துவிடுவதால் கஞ்சாவை அங்கு பயிர் செய்கின்றனர். அறுவடை செய்யப்படும் கஞ்சாவை காய்கறி லோடுகளில் கலந்து  தமிழ்நாட்டிற்கு அனுப்பி வருகிறார்கள். இங்குள்ள மீடியேட்டர்கள் யாருக்கும் சந்தேகம் எழாத வகையில் சுற்றுலாவாசி போல சென்று டிராலி சூட்கேசுகளில் அடைத்து ரயிலில் கஞ்சாவை கடத்துகிறார்கள்இதில் ஈடுபடுகிறவர்கள் பெரும்பாலும் மதுரை தேனி மாவட்டங்களை சேர்ந்த பழைய கஞ்சா வியாபாரிகள்தான். கோடிக்கணக்கில் வருமானம் கிடைப்பதால் போலீஸ் பிடித்தாலும் கவலைப்படுவதில்லை. ஒரே குடும்பத்தில் அப்பா உள்ளே வந்தால் மனைவி, மனைவி உள்ளே போனால் மகன் என்று தொழிலை விடாமல் செய்கிறார்கள். தொழில் போட்டியில் எங்களுக்கு ரகசிய தகவல் தருபவர்களாலும், எங்களுடைய சோர்ஸ்களாலும் கஞ்சா கடத்தலை தடுத்து வருகிறோம்’’ என்றார் 

அவரிடம், முன்பு சாராயம் காய்ச்சுபவர்களுக்கு சலுகைகள் வழங்கி அவர்களை அரசு திருத்தியதுபோல் இவர்களை திருத்த முடியாதா? என்றோம்.  ‘
"இவர்களை திருத்த முடியாது... இதில் புழங்கும் கோடிக்கணக்கான பணம், குறைந்த ரிஸ்குக்கு கிடைக்கும் அதிகமான லாபம், இத்தொழிலை கேவலமாக நினைக்காத மனப்போக்குதான் தொடர்ந்து இதில் அவர்களை ஈடுபட வைக்கிறது" என்றார். 

"
அப்படியெல்லாம் இல்லைஇந்த தொழிலில் திருந்தி வாழ நினைத்தாலும் சில போலீஸ்காரர்கள் அவர்களை விடுவதில்லை. அவர்கள் ஆதாயம் பெற்றுக்கொண்டு  அவர்களை தொடர்ந்து தொழில் செய்யும்படி வற்புறுத்துகிறார்கள். நீங்கள் முரண்டுபிடித்தால் பொய் வழக்கு போடுவார்கள், போலீஸ் அதிகாரிகள் சிலரின் வருமானத்துக்காகவே சிலர் இத்தொழிலை செய்து வருகிறார்கள்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவில் பணிக்கு பணியிடமாற்றம் பெற்று வர ஒவ்வொருவரும் செலவு செய்யும் தொகை எவ்வளவு என தெரிந்துகொண்டால் இது எந்த அளவு உண்மை என்பது விளங்கும்" என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் சிலர்.

எது எப்படியோ தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரம் ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பை காவல்துறை புறந்தள்ளிவிடக்கூடாது.



No comments:

Post a Comment