சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Nov 2014

வெள்ளியில் முதலீடு லாபம் தருமா?

ங்கத்துக்கு அடுத்தபடியாக விலை உயர்ந்த உலோகமாக இருப்பது வெள்ளிதான். கடந்த ஒரு மாதமாக வெள்ளியின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 

கிலோ ரூ. 60 ஆயிரத்துக்கு மேல் வெள்ளியின் விலை சென்றபோது அது இன்னும் உயரும் என முதலீடு செய்தவர்கள் பலர். அதன்படியே வெள்ளியின் விலை ரூபாய் 75 ஆயிரத்துக்கு மேல் சென்று லாபம் தந்தது. ஆனால் வெள்ளியின் விலை அதற்கு பின் உயரவில்லை. 



இதனால் முதலீடு நோக்கில் வெள்ளியை வாங்கியவர்கள் நஷ்டத்தில் இருக்கிறார்கள்இப்போது மீண்டும் வெள்ளியின் விலை கடுமையாக சரிய ஆரம்பித்துள்ளது. இதனால் புதிதாக சிலர் வெள்ளியை முதலீடு நோக்கில் வாங்கலாமா என குழப்பத்தில் உள்ளனர். 

வெள்ளியின் விலை இன்னும் எவ்வளவு சரியும் என்பது குறித்து கமாடிட்டி நிபுணர் ஞானசேகர்தியாகராஜனிடம் கேட்டோம்.
"வெள்ளியின் விலை இன்னும் சரியவே செய்யும். இந்த சரிவு 32 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். ஏனெனில் தங்கத்தை போல ஆபரண தேவைக்கு அதிகமாக வெள்ளியை பயன்படுத்துவது கிடையாது. பெரும்பாலும் தொழில்துறையில்தான் வெள்ளியின் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதாவது ஸ்மார்ட் போன் தயாரிப்பு, எல்இடி மானிட்டர் தயாரிப்பு என வெள்ளியின் பயன்பாடு அதிகமாக உள்ளது. 

சீனாவில் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதால் வெள்ளியின் தேவை குறைந்துள்ளது. ஆனால் இந்த நிலை இப்படியே இருக்காது. ஏனெனில் இன்றைய  நவநாகரீக வாழ்க்கை சூழலில் அனைவர் கையிலும் ஸ்மார்ட் போன் என்பது கட்டாயம் இருக்கிறது. இதனால் இந்த பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கவே செய்யும். இதனால் வெள்ளியின் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் வெள்ளியில் முதலீடு செய்யலாம்.
மத்தியில் அமைந்துள்ளதுள்ள நரேந்திர மோடி தலைமையிலான பா. ஆட்சி, தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே அடுத்து வரும் ஆண்டுகளில் தொழில் துறை எப்படியும் வளர்ச்சி அடையும். அதுவும் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதோடு தொழில்நுட்ப வளர்ச்சியினால் அது சார்ந்த பொருட்கள் தினம் ஒரு ரகம் என சந்தையை நோக்கி படையெடுக்கின்றனபொதுமக்களும் தங்கள் பொருளாதார வசதிக்கு ஏற்றவகையில் பொருட்களை வாங்குவதற்கு அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். இதனால் தொழிற்துறையின் வளர்ச்சி கட்டாயம் இருக்கும்.

எனவே முதலீடு நோக்கில் வெள்ளியை வாங்க நினைக்கிறவர்கள் வாங்கலாம். மேலும் 4 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி, இப்போது நஷ்டத்தில் காத்திருக்க முடியும் என்றால் அந்த முதலீட்டை அப்படியே வைத்திருக்கலாம். ஏனெனில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 32 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் இறங்கி மீண்டும் உயருவதற்கான வாய்ப்புதான் அதிகம் உள்ளது." என்றார்.


No comments:

Post a Comment