சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Nov 2014

தடதட... டமடம... படபட!


''ட்டு பாஸ்போர்ட் முடிஞ்சிருச்சு. ஒன்பதாவது வாங்கணும். உலகத்தின் எல்லா மூலைக்கும் பறந்துட்டேன். இசை, விளையாட்டு, சினிமா துறையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பிரபலங்களைச் சந்திச்சிட்டேன். எல்லாம்  என் அப்பா, அம்மா பிரார்த்தனைகளால் நடந்த அதிசயம்!'' - தன் நெஞ்சில் கைவைத்து அமைதியாகச் சொல்கிறார் டிரம்ஸ் சிவமணி.




இன்ச் பை இன்ச் இளையராஷா!
''இளையராஜா இசையில்தான் என் சினிமா பயணமே ஆரம்பிச்சது. 1977-ல் 'காயத்ரிபடத்தில் டிரம்ஸ் வாசிக்கவெச்சு, என்னை அறிமுகப்படுத்தினார். கம்போஸிங்னு வந்துட்டா, இன்ச் பை இன்ச் பெர்ஃபெக்ஷன் இருக்கணும் ராஜா சாருக்கு. ரிக்கார்டிங் தியேட்டருக்குள் அவர் நுழைச்சிட்டா, மியூசிக் ட்ரூப், பாடகர்கள், இசைக்கருவிகள்னு எல்லாமே பக்கா டியூனிங்ல இருக்கணும். மியூசிக் பண்ண ஆரம்பிச்சுட்டா, இடையில எந்த அரட்டைக் கச்சேரிக்கும் நேரம் இருக்காது!''
டிரெண்டிங் டிமாண்ட் .ஆர்.ரஹ்மான்!

''ரஹ்மானோடு ஏகப்பட்ட படங்கள் வேலை பார்த்திருக்கேன். ஒவ்வொரு சந்திப்பிலும் முன்பைக்காட்டிலும் இன்னும் தன்மையா, மென்மையா மாறிட்டே இருக்கார். டியூன் பிளே பண்ணிட்டு, 'இதுக்கு எந்த மாதிரி டிரம்ஸ் பண்ண முடியும்?’னு கேட்பார். நான் நாலு விதமாக வாசிப்பேன். அதில் எது பெஸ்ட்டோ, அதை அவரே தேர்ந்தெடுப்பார். பல வெளிநாட்டு இசையமைப்பாளர்கள் ரஹ்மான் டியூன்களைத்தான், அவங்க கலாசாரத்துக்கு ஏத்த மாதிரி மாத்தி மியூசிக் பண்ணிட்டு இருக்காங்க. ஆனா, அதுக்கெல்லாம் முறைப்படி ரைட்ஸ் வாங்கிடுவாங்க. ஒரே டியூனுக்கு பல ரைட்ஸ் கொடுக்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு  நம்ம ஆள் டியூனுக்கு செம டிமாண்ட். கால்பந்து ஜாம்பவான் பீலேவோட வாழ்க்கை ஹாலிவுட்டில் சினிமாவாகுது. அதுக்கு ரஹ்மான்தான் இசை.  நானும் அந்தப் படத்தில் வேலைபார்க்கிறேன். ஒரு தடவை ஜெய்ப்பூரில் ரஹ்மான்கூட சேர்ந்து ஷோ பண்ணினேன். ஷோ முடிஞ்சதும் என்னைக் கூட்டிட்டு அஜ்மீர் தர்காவுக்குப் போனார். ரொம்ப சின்ன வயசில் இருந்தே ரஹ்மானை நான் பார்த்துட்டு வர்றேன். அவரோட ஆன்மிக ஈடுபாடு நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டே இருக்கு. அதுதான் அவரின் பலம்!''
பச்சப்புள்ள ஜாரூக்!

''தென்ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா இந்தியா வந்திருந்தப்போ, மும்பை தாஜ் ஹோட்டலில் என் இசை நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டார். அப்போதான் ஷாரூக் எனக்கு அறிமுகம் ஆனார். நான் வாசிக்கிறப்போ கைகளால் தாளம் போட்டு ரசிச்சிட்டு இருந்தவர், நிகழ்ச்சி முடிஞ்சதும் என் கையில் இருந்து ஸ்டிக்கைப் பறிச்சுட்டு டிரம்ஸ் அடிக்க ஆரம்பிச்சிட்டார். ரொம்ப எனர்ஜெட்டிக்கான மனுஷன். அவரை 'பாலிவுட் பாஷானு சொல்றாங்க. ஆனா, அவர் ஒரு பச்சப்புள்ள. தென் ஆப்பிரிக்க அதிபர்கிட்ட எப்படி நடந்துக்கிறாரோ, அதே மாதிரிதான் சாப்பாடு கொண்டுவர்ற பேரரிடம் நடந்துக்குவார்!''  
சகலகலா வல்லவன் அமீர் கான்!

'' 'ஒரு மனுஷன் எத்தனை துறையில்தான்  எக்ஸ்பெர்ட்டா இருக்க முடியும்!’னு என்னை ஆச்சர்யப்படுத்தியவர் அமீர் கான். சினிமாவில் 120 துறைகள் இருக்குனு வெச்சுக்கங்களேன், அத்தனையிலும் அவர் நிபுணர். 'லகான்கம்போஸிங் சமயம் ரஹ்மான் ஸ்டுடியோவில் அமீரை சந்திச்சேன். 'இந்த சீன்ல பின்னணி இசையில் தபலாவைப் பயன்படுத்தலாம்னு அவர் சொன்னா, கதையில் அதுக்கான தேவை இருக்கும். அந்த அளவுக்கு ஒரு சினிமா சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் யோசிச்சு ரசிச்சு சேர்ப்பார். 'சென்னையில் கிடைக்கும் தோசை என் தோஸ்த்னு சொல்றவர், சென்னை வர்றப்பலாம் தோசைதான் சாப்பிடுவார்!''  
எம்.எஃப்.உசேனுக்கு நான் அடிமை!

''எம்.எஃப்.உசேன் ஓவியங்களுக்கு நான் அடிமை. கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் நான் டிரம்ஸ் வாசிக்க, உசேன் சார் ஓவியம் வரையணும். நான் வாசிக்க வாசிக்க, அவர் விறுவிறுனு ஸ்கெட்ச் பண்ணிட்டே இருந்தார். நான் முடிக்கிறப்போ, அட்டகாசமா ஒரு குதிரை படம் வரைஞ்சிருந்தார். ஒரு நீளமான பாதையில் வேகமா ஓடிட்டு இருக்கும் குதிரை படம். அவ்வளவு தத்ரூபமா இருக்கும். அதை பத்திரமா வெச்சிருந்தேன். ஆனா, யாரோ எடுத்துட்டுப் போயிட்டாங்க. வாழ்க்கையில் நான் வருத்தப்படும் ஒரே விஷயம்னா, அந்த ஓவியத்தைத் தொலைச்சதுதான்!''  
சிக்ஸர் சிக்னல் தோனி!

''.பி.எல் போட்டிகள் நடக்கும்போது கிரவுண்டில் கிரிக்கெட்டுக்கு வாசிக்கிறது, பெரிய சவால். விளையாட்டின் மூடுக்கு ஏத்த மாதிரி டிராவல் பண்ணணும். நம்ம டீம் சிக்ஸ் அடிச்சா, ஓங்கிஅடிக்கணும்; டீம் விக்கெட் எடுத்தா, தடதடனு அடிச்சுத் தள்ளணும்;  அந்த மியூசிக் கேட்டாலே, ரசிகர்களுக்கு உற்சாகம் பொங்கணும். அதுவும் சென்னை கிரவுண்டில் தோனி என்ன பண்ணாலும் நாம மியூசிக்ல மாஸ் அப்ளாஸ் கொடுக்கணும். சமயங்களில் பேட்டிங் பண்றப்போ, பிட்ச்ல இருந்து தோனி சிக்னல் கொடுப்பார்... 'வாசி தலைவாங்கிற மாதிரி. நான் அதிரடியா வாசிப்பேன். பார்த்தா, அந்த பாலை சிக்ஸருக்கு விளாசியிருப்பார். சொல்லிவெச்சு சிக்ஸ் அடிக்கிற கில்லி அவர். ஒருமுறை கிரவுண்டுக்கு விஜய் வந்தப்போ, அதகளம் பண்ணிட்டார். நான் வாசிக்க, அவர் டான்ஸ் ஆட, தோனி கிளாப்ஸ் பண்ண... கிரவுண்ட்லயே செம பார்ட்டி. .பி.எல் தென் ஆப்பிரிக்காவில் நடந்தப்போ தோனி அண்ட் கோவோடு காட்டுக்குள்  டூர் போனோம். காட்டுக்கு நடுவில் இருக்கிற கண்ணாடி பங்களாவில் தங்கி, மிருகங்களைப் பார்க்கிற திகில் அனுபவம். நடுராத்திரி வரை எந்த மிருகமும் வரலைனு எல்லாரும் படுத்துட்டாங்க. நான் மட்டும் முழிச்சிட்டே இருந்தேன். ஏதோ சலசலப்பு கேக்குதேனு பார்த்தா.... சிங்கம். திகைச்சுப்போய் நிக்கிறேன். தோனியை எழுப்பிக் காட்டினேன். 'சத்தம் போடாதீங்க. நம்மளை டின்னர் ஆக்கிரும்னு சிரிச்சார். திக்திக்னு அந்த ராத்திரியைக் கடந்தோம். மறுநாள் காலையில் சிங்கக் குட்டிங்க வந்துச்சு. அதைத் தூக்கிக் கொஞ்சிட்டு வந்தோம்!''
ஜாம்பவான் ஜாகிர் உசேன்!

''நான் வெளியூரில் இசை நிகழ்ச்சி நடத்துறதுக்கு வாய்ப்பு கொடுத்தவர் ஜாகிர் உசேன் மாஸ்டர். சென்னைக்கு வந்திருந்தவரை நான் பார்க்கப் போனேன். 'நாளைக்கு வானு சொன்னார். 'நாளைக்கு எனக்கு சினிமா மியூசிக் வேலை இருக்கேனு சொன்னேன். 'எங்கே இருப்ப?’னு கேட்டார். 'பிரசாத் ஸ்டுடியோனு சொல்லிட்டு வந்துட்டேன். மறுநாள் நேரா ஸ்டுடியோவில் வந்து நிக்குறார். நான் டிரம்ஸ் வாசிக்கிறதை மெய்மறந்து  ரசிச்சார். அப்போ அவர் கொடுத்த வாய்ப்புதான்,  தால் உத்சவ். 1984-ல் மும்பையில் நடந்த சர்வதேச இசை நிகழ்ச்சி அது. அங்கே பார்வையாளரா உள்ளே நுழையிறதே கஷ்டம். ஆனா, என்னை அங்கே வாசிக்கவே வெச்சார். என் அப்பா ஆனந்தன் அன்னைக்கு இருந்திருந்தா, என் வளர்ச்சியைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்!''



No comments:

Post a Comment