சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Nov 2014

அவசியம் தேவை... அவசரகால நிதி சேமிப்பு!


பொதுவாக நிதி ஆலோசனையை மேற்கொள்ளும்போது நிதி ஆலோசகர் சொல்லும் முதல் ஆலோசனை, அவசரகால நிதியை முதலில் சேமித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஆனால் இன்றைய நிலையில் குடும்பத்தின் செலவு மற்றும் சேமிப்பு விஷயங்களுக்காக திட்டம் போடுவதே குறைந்துவிட்டது என்கிற தகவல் வருந்தத்தக்கது. 

அஸோசெம் சொல்லும் உண்மை!
மக்களிடம் அவசரகால நிதி சேமிப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள, அஸோசெம் அமைப்பானது அகமதாபாத்தில் சர்வே ஒன்றை மேற்கொண்டது. இந்த சர்வேயில் தெரியவந்திருக்கும் உண்மை என்னவெனில்  90% மக்களிடம் அவசரகால நிதி சேமிப்பு இல்லாமல் இருப்பது தெரிய வந்திருக்கிறது. தேசிய அளவில் சர்வே புள்ளி விவரம் இல்லாவிட்டாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற விஷயம் இதிலும் நிச்சயம் பொருந்தும். அப்படி அவர்கள் மாநிலம் வாரியாக, நகரம் மற்றும் கிராமங்களில் ஊடுறுவி சர்வே மேற்கொண்டாலும் அந்த சர்வே விவரங்கள் இந்திய மக்களில் அதிகமானவர்கள் அவசர கால நிதி சேமிப்பில் பலமிழந்து இருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக தெரிவித்துவிடுவார்கள்


எதற்காக இந்த அவசரகால நிதி?
ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள், அந்த நிறுவனம் வழங்கும் சம்பளத்தை சார்ந்தே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இப்படியிருக்க திடீரென்று அந்த நிறுவனம் மூடப்பட்டாலோ அல்லது வேலையின்மை ஏற்பட்டாலோ அடுத்த வேலையை தேடி அதில் சேரும் காலம் வரை குடும்ப பொருளாதாரம் பாதிக்கப்பட்டுவிடும். அல்லது வங்கிக் கணக்கில் சம்பளம் சரியான நேரத்தில் கிரெடிட் ஆகாமல் பத்து நாள் கழித்து காலதாமதமாக வந்தாலோ, சம்பாதிக்கும் நபருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலோ குடும்பத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படும். இதுபோன்ற பாதிப்புகளை சந்திக்காமல் இருக்க வேண்டுமென்றால் அவசர கால நிதியானது அனைவருக்கும் அவசியமாகிறது. 

எவ்வளவு தேவை?
பொதுவாக ஒருவரின் குறைந்தபட்சம் மூன்று மாத சம்பளத்திலிருந்து அதிகபட்சம் ஆறுமாத சம்பளம் வரை அவசர கால நிதி சேமிப்பாக வைத்திருப்பது நல்லது. அப்போதுதான் மேலே குறிப்பிட்டுள்ள அவசரகால சமயங்களை சமாளிக்க முடியும்உதாரணத்திற்கு கமலாவின் மாதச் சம்பளம் 15,000 ரூபாயாக கொள்வோம். அவர் அவசரகால நிதியாக குறைந்தபட்சம் ரூ.45,000 (மூன்று மாத சம்பளம்), அதிகபட்சமாக ரூ.90,000 (ஆறு மாத் சம்பளம்) வைத்திருக்க வேண்டும். சம்பளம் உயரும்போது அவசரகால நிதி சேமிப்பும் அதிகரிக்க வேண்டியது அவசியம். 

எதில் சேமிப்பது?
அவசரகால நிதியானது தேவை என்கிற போது சேமிக்கும் திட்டத்திலிருந்து விரைந்து எடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதனால் இந்த சேமிப்புக்கு பரிசீலிக்க வேண்டிய திட்டங்களில் முதன்மையானது வங்கி சேமிப்புக் கணக்கு. இதில் இரண்டு மாத தொகையை சேமித்து விட்டு, மீதமுள்ள ஒரு மாத தொகையை லிக்விட் ஃபண்டுகளில் அல்லது கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்து வைக்கலாம். 

எனவே, நாம் எல்லோரும் அவசரகால நிதி சேமிப்பதில் அலட்சியம் காட்டாமல் இன்றிலிருந்தே இதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம்.




No comments:

Post a Comment