சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Nov 2014

உலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி!



ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கும் போது. இன்று இந்திய அணியின் துணைக்கேப்டனாக மாறி இருக்கும் விராட் கோஹ்லி, நாளைய இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தும் கேப்டனாக கணிக்கப்படுகிறார். இந்த வளர்ச்சிக்கு பின்னால் கோஹ்லி எனும் கிரிக்கெட் வீரனின் பயணம் வியக்கத்தக்கது.
நவம்பர் 5,1988ம் ஆண்டு டெல்லியில் பிறந்த விராட் கோஹ்லி,சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட வீரராக திகழ்ந்தார். மேற்கு டெல்லிக்கான கிரிக்கெட் அசோசியேஷன் ஆரம்பித்தபோது முதல் அணியிலேயே விராட் 15வயது சிறுவனாக இடம்பிடித்தார்.

2006ம் ஆண்டு ரஞ்சி போட்டியில் டெல்லி அணிகர்நாடக அணியுடனான ஆட்டத்தில் ஃபாலோ-ஆனை தவிர்க்க போராடிக் கொண்டிருந்தது. அப்போது அனைவரும் எதிர்பார்த்தது டெல்லி அணி தோற்றுவிடும் என்பதுதான். அப்போது களமிறங்கிய 18 வயது சிறுவன் வீராட் கோஹ்லி அடித்த 90 ரன்கள், டெல்லி அணியை ஃபாலோ-ஆனை தவிர்க்க வைத்திருந்தது. ஆனால் கோஹ்லியின் அந்த ஆட்டம் எந்த சூழலில் வந்தது என்பதை அறிந்து பலரும் கண்ணீர் விட்டனர். காரணம் அந்த ஆட்டத்திற்கு முதல் நாள் விராட்டின் தந்தை இறந்து போனார். அதே சோகத்தோடு வந்து விளையாடிய வீராட்டின் இன்னிங்ஸ் அணியை தோல்வியிலிருந்து தப்ப வைத்தது.



தன் தந்தையின் மரணத்தால் மனதளவில் பக்குவப்பட்டிருந்த கோஹ்லிக்கு, கிடைத்தது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு. அந்த உலககோப்பையில் எப்போதெல்லாம் இந்தியா தோல்வி பாதையில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் இந்திய அணியை வெற்றிக்கு மாற்றியது கேப்டன் இன்னிங்ஸ் எனும் விராட் ஆட்டம் தான்.
அப்போது விராட் இந்திய அணியில் எனக்கு சேவக்தான் ரோல்மாடல் அவரைப்போல் அதிரடி வீரராக வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் கோஹ்லியின் சதத்தால்  அணி கோப்பையை வென்றது.

அதேசமயத்தில்தான் இந்திய சீனியர் அணி முதல் டி20 உலககோப்பையை வென்றது. அதனால் இந்தியாவில் டி20 போட்டிகள் விஸ்வரூபம் எடுக்க துவங்கின. கோஹ்லியின் ஐபிஎல் ஆட்டம் அனைவருக்கும் பிடித்து போனது. சச்சின் மற்றும் சேவக் 2008ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக விலக கோஹ்லிக்கு கிடைத்தது இந்திய சீனியர் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புதுவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கோஹ்லி

அந்த தொடரில் இந்தியாவிற்காக 2வது ஆட்டத்தில் இக்க்கட்டான சூழலில் ரன் குவிக்க துவங்கினார்.
அப்போது இருந்து இந்திய அணியின் ரன் மிஷினாக மாறினார் கோஹ்லி. ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் இந்தியா கிட்டத்தட்ட வெளியேறியது என்ற சூழலில், 40 ஓவரில் 321 ரன்களை கடந்தால் வெற்றி எனும்போது, இந்தியா வெற்றி பெற அதிவேகமாக 133 ரன்களை குவித்து வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 2011 உல்கக்கோப்பையின் முதல் போட்டியில் சதம். இறுதி போட்டியில் கம்பீருடன் 83 ரன் பார்ட்னர்ஷிப் ஆகியவை கோஹ்லியின் முக்கிய ஆட்டங்கள் வரிசையில் இடம்பிடிக்க வைத்தன.

வருடாவருடம் கோஹ்லியின் ஆட்டம் மேம்பட்டு 3000 ரன்களை 75 ஆட்டத்திலும், 4000 ரன்களை 96 ஆட்டத்திலும், 5000 ரன்களை 114 அட்டத்தில் அடித்து, விவ் ரிச்சர்ஸின் அதிவேக 5000 சாதனையை சமன் செய்தார். தற்போது 134 ஆட்டங்கள் ஆடி 5901 ரன்களில் இருக்கும் கோஹ்லி இன்னும் 6 ஆட்டத்திற்குள் 99 ரன்களை குவித்தால் கோஹ்லிதான் உலகின் அதிவேக 6000 ரன் கடந்த வீரராவார்.

தற்போது டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் ஓய்வுக்கு பின் அந்த இடத்தில் ஆடிவரும் கோஹ்லியை அடுத்த சச்சின் என அனைவரும் பாராட்டும் வேளையில், தோனியின் ஓய்வின் போது கோஹ்லிக்கு கிடைக்கும் கேப்டன் வாய்ப்பில், 13 போட்டிகளில் 10 போட்டிகளை வென்று கேப்டன் தகுதியை நிரூபித்து, தோனிக்கு பின் இந்திய அணியை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையை அதிகமாகவே ஏற்படுத்தி உள்ளார். இவரது ஆட்டம் இப்படியே தொடர்ந்தால், 2020 ஆம் ஆண்டு உலககோப்பையை வெல்லும் இந்திய கேப்டன் கோஹ்லி என்பதில் அச்சமில்லை!

கிரிக்கெட்டில் ஒவ்வொரு ரன்னும் ஒரு சாதனைதான். அதிலும் குறுகிய வயதில் ஒரு சாதனை என்றால் அது வரவேற்கதக்கதே.

இந்திய அணியின் இளம் வீரரான விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இவர் இந்த சாதனையை 136 ஆட்டங்களில் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 141 ஆட்டங்களில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

இந்திய வீரர்களில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்த சாதனையை 147 ஆட்டங்களில் நிகழ்த்தினார். அதற்கு பின் அதிவேகமாக அந்த சாதனையை 14 ஆண்டுகள் கழித்து கோலி முறியடித்துள்ளார்.

ஆனால் ரிச்சர்ட்ஸ் இந்த சாதனையை நிகழ்த்தி 26 வருடங்கள் கழித்து கோலி முறியடித்திருக்கிறார். இந்த சாதனை நிகழ்த்தப்படும்போது கோலியின் வயது 2 மாதம் 2 நாள் தான். நேற்று இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 50 ரன் அடித்த போது இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு கேப்டன் கோலி என்பதும் குறிப்பிடத்தக்கது.

6000
ரன்களை கடந்த கோலியின் சாதனையை ஒருவரால் மட்டுமே தற்போதைய சூழலில் முறியடிக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்க வீரரான ஹசிம் ஆம்லா 95 ஆட்டங்களில் 4790 ரன்கள் குவித்துள்ளார். இன்னமும் 41 ஆட்டங்களில் அவர் 1210 ரன்களை குவிக்கும் பட்சத்தில் மட்டுமே கோலியின் சாதனை முறியடிக்கப்படும்.

இந்திய அணியின் ரன் மிஷினாக மாறியிருக்கும் விராட் கோலி, இந்த ஆண்டின் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இந்த ஆண்டில் மட்டும் 18 ஆட்டங்களில் ஆடியுள்ள கோலி 3 சதம், 4 அரை சதங்களுடன் 849 ரன்கள் குவித்துள்ளார். பகுதி நேர கேப்டனாக இருக்கும் கோலி அவர் தலைமை தாங்கிய 3 தொடர்களிலும் இந்தியா தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோலியை அடுத்த சச்சின் என அனைவரும் பாராட்டும் வேளையில், தோனியின் ஓய்வின் போது கோலிக்கு கிடைக்கும் கேப்டன் வாய்ப்பில், 15 போட்டிகளில் 12 போட்டிகளை வென்று கேப்டன் தகுதியை நிரூபித்து, தோனிக்கு பின் இந்திய அணியை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையை அதிகமாகவே ஏற்படுத்தி உள்ளார். இவரது ஆட்டம் இப்படியே தொடர்ந்தால், 2020 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும் இந்திய கேப்டன் கோலி என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 

உலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த வருங்கால இந்திய கேப்டனுக்கு வாழ்த்துக்களை பகிர்வோம்.


No comments:

Post a Comment