சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Nov 2014

ஊனத்தை உடைத்தெறிந்த ஐஸ்வர்யா!

காலில் சக்கரம் கட்டிக் கொண்டு, ஓடும் காலம் இது. ஆனால், கால்கள் இரண்டும் செயலிழந்து வீல் சேரில்விருட்என நகர்வதும், நாடி பிடித்து நலம் விசாரிப்பதும் என மருத்துவப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர் டாக்டர் ஐஸ்வர்யா ராவ்.

3
வயதில் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு, தன் இரண்டு கால்களை இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் தளர விடாமல் டாக்டருக்கு படித்து முடித்து, சென்னையில் மருத்துவச் சேவை செய்து வருகிறார்.


நான் பிறந்த ரெண்டாவது வாரத்துல என் அப்பா ..எஸ். எழுதி பாஸாயிட்டாரு. ‘நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரின்னு அப்பா கொஞ்சினாராம். ஆனா, அந்தச் சந்தோஷம், ரொம்ப நாள் நிலைக்கல. சின்ன வயசுலேயே, என் அக்காவுக்குப் போலியோ வந்து இறந்துட்டாங்க. பட்ட காலிலே படும் என்பது போல எனக்கும் மூணு வயசுல, போலியோ வந்து இரண்டு கால்களும் நடக்க முடியாமப் போச்சு. சின்ன வயசுல ஓடியாடி விளையாடற குழந்தைகளைப் பார்க்கும்போது மட்டுமே சின்னதா ஒரு சோகம் தொத்திக்கிடும். ஆனால், அது அடுத்த நிமிஷமே பறந்து போயிரும்.
அதுக்குக் காரணம் என் அப்பா தான். அவர், என்னைச் சக மனுஷியாத்தான் பார்த்தார். இது ஒன்றும் பெரிய குறை இல்லையே என்று சாதாரணமா சொல்லிக்கிற அளவுக்கு எனக்கு ஊக்கத்தைத் தந்து வளர்த்தாரு. அதே போல, பள்ளிக் கூடத்துலயும், ‘உன்னால எங்கள மாதிரி எல்லாத்தையும் செய்ய முடியும்னு என்கரேஜ் பண்ணினாங்க. ஆர்வமா படிச்சு, ப்ளஸ் டூ- நல்ல மார்க் எடுத்தேன்.

அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சிக்கிட்டு இருந்தப்ப, எங்கம்மா, ‘நீ டாக்டருக்கு படின்னாங்க. அதுவரைக்கும் எனக்கு டாக்டர் படிப்பு மேல ஆர்வம் இருந்ததில்லை. பொறியியல் படிக்கணுங்கிற ஆசையை அம்மாவுக்காக ஒத்தி வைச்சிட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பும், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில், குழந்தைகள் நல டிப்ளமோ படிப்பும் முடிச்சேன். எந்த விஷயத்தைத் தொடங்கினாலும் அதைச் சிறப்பா செய்யணும்னு தான் நினைப்பேன். ஆனா ஆரம்பத்துல, மருத்துவப் படிப்பு மேல ஆர்வமில்லாமப் போச்சு.

திடீர்னு ஒரு மாசம் கல்லூரிக்கு போகாம நின்னுட்டேன். ஒரு பேராசிரியர்கிட்டேர்ந்து உருக்க ஒரு கடிதம் வந்தது. அதில், “உன்னிடம் திறமை இருக்கிறது. அதை வீணாக்காதே’’னு எழுதியிருந்தது. அது என் மனத் தடையைத் தகர்த்து, மீண்டும் கல்லூரி போறதுக்கு, உறுதுணையா இருந்துச்சுஎன்கிற ஐஸ்வர்யா, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியம், ஆரம்பச் சுகாதார மருத்துவ மையம், .சி.டி.சி அதிகாரி எனப் பல்வேறு நிலைகளில் மருத்துவப் பணியாற்றியவர்.

‘‘
ஊனமுற்றவங்களோ அல்லது திருநங்கைகளோ இருக்காங்கன்னா... அவங்களுக்கு எப்போதும் பயன்படற விதத்தில் நிறைய நலத்திட்டங்களைக் கொண்டு வரணும் என்பதே என் விருப்பம்என்கிறார் மருத்துவர் ஐஸ்வர்யா ராவ்.

No comments:

Post a Comment