நாமக்கல் அருகே சாலையோரம் உள்ள மரங்களை பட்டு போக செய்து அவற்றை சில கும்பல் கடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் சாலையோரங்களில் ஏராளமான புளிய மரங்கள் மற்றும் பனை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் நெடுஞ்சாலைத்துறையினர் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக எண்ணிட்டு அவற்றை கணக்கில் வைத்துள்ளனர். இந்த மரங்கள் திடீரென பட்டு போகின்றன. இவற்றில் புளிய மரங்களை விட, வறட்சியை தாங்கி வளரும் பனை மரங்கள்தான் அதிக அளவில் பட்டு போகின்றன.

இந்த மரங்கள் தானாக பட்டுப்போவதில்லை. பட்டுப்போக வைத்து, அதை கடத்தும் செயலில் சில கும்பல்கள் ஈடுபட்டு வருகிறது என தற்போது நாமக்கல் பகுதியில் புகார் எழுந்துள்ளது.
பனை மரங்களை கடத்துவதற்காக, பனை மரங்களின் உச்சியில் உள்ள குருத்தில் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் போன்றவற்றை ஊற்றி விடுகின்றனர். இதனால் மரங்களின் சருகுகள் முழுமையாக காய்ந்து விழுந்து விடுகின்றன. நாளடைவில் மரங்கள் பட்டுப் போய் விடுகின்றன. இந்த மரங்களை நெடுஞ்சாலை துறையினர் இயற்கையாகவே பட்டுப் போனதாக கருதி கணக்கில் இருந்து நீக்கி விடுகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில கும்பல், இரவு நேரங்களில் மரங்களை வெட்டி கடத்தி விடுகின்றனர்.

இயற்கையாகவே மரம் பட்டுப் போனதா அல்லது செயற்கையாக பட்டுப்போனதா என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத் துறையினர் அக்கறை காட்டாததே, இத்தகைய கடத்தலுக்கு காரணம் என புகார் கூறுகின்றனர் பொதுமக்கள்.
நெடுஞ்சாலைத் துறையினர் அக்கறை காட்டாததால் சாலையோரத்தில் வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அரசுக்கு போகவேண்டிய வருவாயை சில கும்பல் கொள்ளையடித்து வருகிறது என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுபோன்று செயற்கையாக மரங்களை பட்டுப் போக செய்து மரங்களை கடத்தும் கும்பலை, அரசு உடனடியாக தடுக்க நடவடிக்கை வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

No comments:
Post a Comment