சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Nov 2014

கச்சா எண்ணெய் விலை குறைவு: எந்தப் பங்குகளின் விலை அதிகரிக்கும்?.




"கச்சா எண்ணெய் விலை குறைவதால் உலகப் பொருளாதாரத்துக்குத்தான் அதிக நன்மைகள். அதாவது, கச்சா எண்ணெயின் விலை 10 சதவிகிதம் குறைந்தால் உலகப் பொருளாதாரம் 0.2 சதவிகிதம் வளர்ச்சி அடையும் என சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது. அதாவது, உலக ஜிடிபி  அதிகரிக்கும்.
கடந்த ஜூன் மாதத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 115 டாலராக இருந்தது. இது இப்போது  85 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. சுமார் 25 சதவிகிதத்துக்கு மேல் விலை குறைந்துள்ளது. தொடர்ந்து விலை சரிந்த நிலையிலேயே வர்த்தகமானால் உலகப் பொருளாதார வளர்ச்சி மேலும் 0.5 சதவிகிதம் அதிகரிக்கும்




இந்தியாவைப் பொறுத்தவரை கச்சா எண்ணெயின் தேவையில் 70 சதவிகிதத்துக்குமேல் இறக்குமதியை நம்பித்தான் உள்ளோம். மொத்த இறக்குமதியில் மூன்றில் ஒரு பகுதி கச்சா எண்ணெயாக உள்ளது.  தொடர்ந்து கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதால் செலவு குறைகிறது. இதனால் நடப்பு கணக்குப் பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும்



மேலும், எண்ணெய்க்காக கொடுக்க வேண்டிய மானியம் குறையும். இதனால் நிதிநிலை பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். இந்த நிலை தொடர்ந்து வந்தால் பணவீக்க விகிதம் குறைய வாய்ப்புள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். வட்டி விகிதம் குறைந்தால் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதனால் மற்ற செலவுகளுக்கு அதிகமாக பணம் ஒதுக்குவார்கள்.  தேவை அதிகரித்து உற்பத்தி பெருகுவதால்  இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அதிகரிக்கும்


கச்சா எண்ணெயை நேரடியாகப் பயன்படுத்தும் துறைகள் அதிக பயனடையும். அதேபோல கச்சா எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் துணை பொருள்களை உற்பத்திக்குப் பயன்படுத்தும் நிறுவனங்களும் பயன்பெறும். அதாவது, நேரடியாக அதிகம் பயன் அடைவது ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்கள். மேலும், எண்ணெய்யை விற்பனை செய்யும் நிலையங்களான பிபிசிஎல், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் லாபமும் அதிகரிக்கும்

மத்திய அரசு எரிவாயு விலையை உயர்த்தி நிர்ணயித்து இருப்பதும் வரவேற்கத்தக்கது. இதனால், ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது, எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் மானியங்களில் 85 சதவிகித மானியத்தை இந்த நிறுவனம்தான் வழங்குகிறது. மானியம் குறையும்போது லாபம் அதிகரிக்கும் . இங்கு லாபம் என்பது வட்டி செலவு குறைப்பைக் குறிக்கும். அதாவது, எண்ணெய் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் மானியத்தை ஈடு செய்வதற்கு வங்கியில் கடன் வாங்கும். இந்தக் கடனுக்கு குறிப்பிட்ட அளவு தொகையை வட்டியாகச் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, மானியச் செலவு குறையும்போது வட்டி செலவு குறையும். இதனால் இந்த நிறுவனத்தின் லாபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது

பிளாஸ்டிக் துறை:

இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும்போது பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவன பங்குகளின் விலை அதிகரிக்கும். அதாவது, நீல்கமல் பிளாஸ்டிக், சிண்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் பயன் அடையும்
இதேபோல, எந்தெந்த துறை சார்ந்த பங்குகளை வாங்கலாம் என்பது குறித்து பார்ப்போம்
பெயின்ட் துறை:
பெயின்ட் நிறுவனமான ஏசியன் பெயின்ட்ஸ். அதாவது இந்த நிறுவனத்தின் உற்பத்தித் தேவைக்கு பயன்படும் மூலப்பொருள்களின் விலை குறையும். இதனால் உற்பத்தி செலவு குறைந்து லாபம் அதிகரிக்கும். மேலும், ஹவுஸிங் துறைக்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதேபோல, ஸ்மார்ட் நகரங்கள் அதிகம் வர இருப்பதும் இந்தத் துறைக்கு சாதகமாக இருக்கும். மேலும், ஆட்டோ  துறை நல்ல வளர்ச்சியடைந்து வருவதன் காரணமாக, பெயின்ட் துறையின் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, ஏசியன் பெயின்ட்ஸ் பங்கை வாங்கலாம்
டயர் துறை:

அடுத்தது டயர் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள். இந்தத் துறைக்கு அதிகமாக இயற்கை ரப்பர் மற்றும் செயற்கை ரப்பர் அதிகமாகத் தேவைப்படும். கச்சா எண்ணெயின்  விலை குறையும்போது இந்தப் பொருள்களின் விலையும் குறையும்
ஜேகே டயர்ஸ், அப்போலோ டயர்ஸ் ஆகிய பங்குகளை வாங்கலாம்.

உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு:

குஜராத் ஸ்டேட் ஃபெர்ட்டிலைஸர் அண்ட் கெமிக்கல்
பிஐ இண்டஸ்ட்ரீஸ்

விவசாய துறை பங்குகள்:

கச்சா எண்ணெய் விலை குறையும்போது டீசல் விலையும் குறையும். இதனால் டீசலை பயன்படுத்தும் துறையான விவசாய துறைகளில் பங்குகளின் விலையும் அதிகரிக்கும். அதாவது, விவசாயத்துக்கு நீர் இறைக்க பயன்படுத்தும் மோட்டார்களில் அதிகம் டீசல் பயன்படுத்தபடுகிறது. இதனால் காவேரி சீட்ஸ், கொரமண்டல் இன்டர்நேஷனல் பங்குகளை வாங்கலாம்.



No comments:

Post a Comment