சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Nov 2014

மெடிக்ளைம்: சந்தேகமும் தீர்வும்...



'நான் ஏன் மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்கணும்? தேவை இல்லாமல் இன்சூரன்ஸ் கம்பெனிக்காரனுக்கு ஏன் பணத்தைக் கொடுக்கணும்?' என்ற நண்பர் ஒருவர், அலுவலகத்தின் கட்டாயம் காரணமாக மெடிக்ளைம் பாலிசியை எடுத்தார். இன்சூரன்ஸ் எடுத்த ஒன்றரை மாதத்தில், விபத்தில் சிக்கி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிருக்கு ஆபத்து இல்லை. இருப்பினும், மிகப் பெரிய காயங்கள் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். மருத்துவக் காப்பீடு இருந்ததால், மருத்துவச் செலவின்றி அவர் வீடு திரும்பினார்.
'ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையும், அதனால் ஏற்படும் உடல்நலக்குறைவும் மருத்துவச் செலவுகளை அதிகரிக்கின்றன. இத்தகைய சூழலில், மருத்துவக் காப்பீடு என்பது தவிர்க்க முடியாதது. மருத்துவச் செலவு என்பது எல்லோராலும் ஈடுகட்ட முடியாத ஒன்று. அதனால்தான் மக்களும் ஏதேனும் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள்.' என்கிறார் ஃபார்ச்சூன் பிளானர் நிறுவனரும், நிதி ஆலோசகருமான பி.பத்மநாபன்.




ஏன் எடுக்க வேண்டும் காப்பீடு?
எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான் நம் விருப்பம். ஒருவேளை, எதிர்பாராத நேரத்தில் திடீர் விபத்துகள் ஏற்பட்டால், நோய்கள் தாக்கினால், அதை எப்படி எதிர்கொள்வது? அதற்குத் தீர்வாக இருப்பதுதான் மருத்துவக் காப்பீடு. எளிதாகச் சொல்லப்போனால், நமக்கு எதிர்காலத்தில் ஏதேனும் நோய்கள் வரலாம் அல்லது மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம் என்று நினைத்தால், குறைந்த அளவு பிரீமியத்தைக் காப்பீட்டு நிறுவனங்களுக்குச் செலுத்தி, அதனால் ஏற்படும் செலவுகளை, காப்பீட்டு நிறுவனம் மூலம் பெறக்கூடிய திட்டமே மருத்துவக் காப்பீடு.

தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் பாலிசி!
நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள், 'நான் ஏன் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்என்று நினைக்கலாம். ஆனால், ஃபேமிலி ஃப்ளோட்டர் என்ற பாலிசித் திட்டம் மூலம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பீட்டுப் பயன்பாட்டுக்குள் கொண்டுவரலாம். தனிநபர் பாலிசியும் உள்ளது. இது அவ்வளவு பிரபலம் இல்லை. ஒருவர் திருமணம் ஆவதற்கு முன்பு, தனிநபர் பாலிசி எடுக்கலாம். பின்பு திருமணம் ஆன பின்பு மனைவி மற்றும் குழந்தைகளையும் அதில் இணைத்துக்கொள்ள முடியும். தனித்தனியாக எடுப்பதைவிட, ஃப்ளோட்டர் பாலிசி பிரீமியம் குறைவு.

நம்மைப் பற்றிய விவரங்கள்!

க்ளைம் எளிதாக இருக்க வேண்டுமானால், நாம் நம்முடைய உடல் சம்பந்தப்பட்டவற்றை ஒன்றும் மறைக்காமல் சொல்ல வேண்டும். முகவரிடம் நம் சந்தேகங்கள் தீர்ந்த பிறகே பாலிசி போட சம்மதம் கொடுக்க வேண்டும். முக்கியமாக நம் வயது, ஏதாவது வியாதி இருக்கிறதா, இல்லையா என்று முன்கூட்டியே மருத்துவப் பரிசோதனை செய்து, அதனை விண்ணப்பத்துடன் இணைத்துப் பதிவுசெய்திருக்க வேண்டியது அவசியம்.

காப்பீட்டைக்  கண்டறிவோம்!
மிகப் பெரிய சவால்... 'எந்த பாலிசி எடுப்பது, எவ்வளவு எடுப்பது, மேலும் எந்த நிறுவனத்தில் எடுப்பது, நமக்கு எது தேவைஎன்பதை நாம் அறிய வேண்டும், பிறகு சில கேள்விகளை இரண்டு, மூன்று நிறுவனங்களில் கேட்பதன் மூலம் நமக்கு ஓரளவு தெளிவு கிடைக்கும். இன்று இணையதளங்களில் நாம் எதைக் கேட்டாலும் நமக்கு விடைகிடைக்கும். அதிலும் ஒருமுறை நாம் தேர்வுசெய்தது சரியாக உள்ளதா என்று பார்க்க முடியும். 'காசுக்கேத்த தோசைஎன்பார்கள், அதுபோல பிரீமியத்தை மட்டும் பார்க்காமல், அதில் என்னென்ன கவர் செய்கிறார்கள்... அதில் ஏதாவது கண்டிஷன் இருக்கிறதா... என்று பார்த்தால், நம்மால் நல்ல ஒரு காப்பீட்டைக் கண்டுபிடிக்க முடியும்.

பொதுவான தவறு!
இன்று நிறையப் பேர், 'எனக்கு அலுவலகத்தில் காப்பீடு உள்ளது... அதனால் எனக்கு தனியாகத் தேவைப்படாதுஎன எண்ணுகிறார்கள். அது மிகவும் தவறு. இன்று எல்லோரும் தனியார் நிறுவனங்களில் வேலைசெய்யும் சூழல். மேலும் வெகு காலம் யாரும் ஒரு நிறுவனத்தில் வேலைசெய்வதில்லை, அப்படி இருக்கும்போது, ஒரு வேலையைவிட்டு மறு வேலையில் சேரும்போதுகூட, நமக்கு ஏதாவது நோய் வரலாம். மேலும், பாலிசி எடுத்துச் சில ஆண்டுகள் கழித்துதான் சிலவகையான நோய்களுக்கு கவரேஜ் கிடைக்கும். அதனால் தனியாக எடுத்துக்கொள்வது நல்லது. இன்று புதிய வகையான பாலிசிகள் வந்துள்ளன. அவற்றில் ஒன்று நம்முடைய வரம்பு போக, உயிர்க்கொல்லி நோய்கள் எதுவும் கண்டெடுக்கப்பட்டால், நம்முடைய பாலிசி தொகைபோல இருமடங்கு கொடுக்கிறார்கள். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மருத்துவமனையில் அனுமதிக்கும்  முன்பும் பின்பும்!
சில நோய்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு சில டெஸ்ட் எடுக்க நேரிடும், சில மாத்திரைகள் சாப்பிடவும் செய்யலாம். இவை வழக்கமான மருத்துவ ஆலோசனைகளின் அடிப்படையிலும் தேவையின் அடிப்படையிலும் முடிவுசெய்யப்படும். 30 முதல் 60 நாட்களுக்கு முன்பு வரை ஆகும் செலவுகளில் ஒரு குறிப்பிட்ட அளவுத் தொகையே இதன் வரம்புக்குள் கொண்டுவரப்படும். அதேமாதிரி நாம் மருத்துவமனையைவிட்டு வந்தவுடன் நோய் உடனடியாகக் குணமாகாது. அதன்பிறகும் ஆகும் செலவுகளையும் இதில் சேர்க்க முடியும். சிகிச்சைத் திட்டம் பாலிசி எடுப்பதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட நோய்களும் இந்தத் திட்டத்தில் அடங்கும். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள், நீண்ட காலம் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோய்கள், அதிக மருத்துவச் செலவை ஏற்படுத்தும் நோய்கள் ஆகியவை இந்தத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

நிதிப் பற்றாக்குறை!
மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது, நாம் உடல்ரீதியாக மட்டும் பாதிப்புக்குள்ளாவது இல்லை. மாறாக நம்மால் வேலைக்குச் செல்ல முடியாது. அதனால் நம்முடைய சம்பளத்தில் துண்டு விழும். நிதிச் சுமைகளை யார் கவனிப்பது என்பதுபோன்ற கேள்விகள் மனதைப் பிசையும். நாம் எடுக்கும் பாலிசிக்கு ஏற்ப நமக்கும், நம்மைப் பார்த்துக்கொள்பவருக்கும், சில பாலிசிகளில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை தருகிறார்கள்.

மருத்துவப் பரிசோதனை செய்பவர்கள், காப்பீட்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவமனைகளும், மருத்துவர்களும்தான். எனவே, உங்கள் தரப்பு வாதம்தான் வெற்றிபெறும்.


No comments:

Post a Comment