சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Nov 2015

சச்சின் மட்டும்தான் சாதனையாளரா? :சேவாக் நிச்சயம் கவுரவப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்!

ந்திய கிரிக்கெட்டின் அடையாளங்களுல் ஒருவர் சேவாக். சுமார் 13 ஆண்டுகாலம் இந்தியர்களின் மனம் கவர்ந்த கிரிக்கெட் விளையாட்டை நேசித்து விளையாடியவர். இந்திய அணிக்காக 23 டெஸ்ட் சதங்களும் 15 ஒருநாள் சதங்களும் அடித்தவர். தனது பார்மின் உச்சக்கட்டத்தில் இருந்த போது, எந்த பந்துவீச்சாளர்கள் எப்படி பந்துவீசினாலும் சொல்லி வைத்து அடிக்கும் கில்லி. அப்படிப்பட்ட ஒரு  வீரரை இன்று 'எனக்காக ஒரு பிரிவு உபச்சார போட்டி நடத்துங்களேன்' என்று கெஞ்சும் நிலைக்குத் பி.சி.சி.ஐ. தள்ளியுள்ளது.
இது குறித்து சேவாக்கே தெரிவித்த கருத்து : '' என்னிடம் இந்திய அணியின் தேர்வாளர்கள், உங்களை அணியில் இனி சேர்த்துக் கொள்ளப்போவததில்லை என்றார்கள். ஒரு பிரிவு உபச்சார போட்டியில் டெல்லியில் விளையாட வேண்டுமென்பது எனது ஆசை என்றேன். ஆனால் அதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. விளையாடிக் கொண்டிருக்கும் போதே ஓய்வு அறிவிக்க வேண்டுமென்பதுதான் எனது நீங்காத ஆசையாக இருந்தது. ஆனால் அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்தான், ஓய்வு குறித்த சிந்நதனை எழுகிறது. 

முதலில் டெல்லியில் டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கவிருந்த இந்திய - தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியின் போது என்னை கவுரவிக்கவுள்ளதாக கூறினார்கள். அப்படி செய்திருந்தால் நான் மிகவும் மகிழ்ந்திருப்பேன். ஆனால் பி.சி.சி.ஐ. ஏனோ அதற்கு விரும்பவில்லை. குறைந்த பட்சம் டெல்லி கிரிக்கெட் சங்கமாவது எனக்காக ஒரு பிரிவு உபச்சார போட்டி நடத்தும் என்று நினைக்கிறேன். ஒரு விளையாட்டு வீரனாக ஒவ்வொருவக்கும் இந்த ஆசை இருக்கும் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது  '' இப்படி ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் மனம் வெதும்பி கூறியிருக்கிறார் சேவாக். 

13 ஆண்டுகளாக கிரிக்கெட் ரசிகர்களை தனது அதிரடியால் மகிழ்வித்தவர். பொதுவாகவே சேவாக்கின் அதிரடி  இந்திய அணியின் வெற்றியுடன் பொருந்தியிருக்கின்றன. முக்கிய ஆட்டங்களில் மற்ற வீரர்கள் சொதப்பினாலும் சேவாக் அசராமல் ஆடி வெற்றிக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக சேவாக் பட்டையை கிளப்புபவர். 

இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 8 ஆயிரத்து 586 ரன்களை குவித்துள்ளார்.  இன்னும் இரண்டு டெஸ்ட் தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிரக விளையாடும் வாய்ப்பு கிடைத்திருந்தால் டெஸ்ட் வாழ்க்கையில் 10 ஆயிரம் ரன்களை எட்டியிருப்பேன் என்கிறார் சேவாக். பாகிஸ்தானுக்கு எதிராக சேவாக்கின் டெஸ்ட் சராசரி 90 முதல் 100 ரன்கள் வரை இருந்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கது. 

இந்திய கிரிக்கெட்டர்களை பொறுத்தவரை, பெரும்பாலானவர்க்கு  கவுரவமாக அந்த விளையாட்டில் இருந்து விடைபெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணியின் 'சுவர் ' என்று வருணிக்கப்பட்ட  ராகுல் டிராவிட்டுக்கும் கூட இதே நிலைதான். இப்போது சேவாக்கிற்கு ஏற்பட்ட நிலைதான் அப்போது ராகுல் டிராவிட்டுக்கும் ஏற்பட்டது. 

சச்சின் அளவுக்கு சேவாக் சாதனை படைக்கவில்லை என்றாலும் அணிக்கான தனது நேர்மையான உழைப்பையும் பங்களிப்பையும் வழங்கியவர். சேவாக்கின் சாதனைகளும் அலட்சியப்படுத்தக் கூடியவை அல்ல.  சேவாக் கேட்காமலேயே பி.சி.சி.ஐ. அவரை  கவுரவப்படுத்தியிருக்க வேண்டும். அதனை செய்யவில்லை. இப்போது மனம் பொறுக்காமல் அவரே கேட்டு விட்டார். இப்போதும் பி.சி.சி.ஐ. அமைதி காப்பது ஏன்? 

 பி.சி.சி.ஐ.க்கு சச்சின் மட்டும்தான் சாதனையாளராகத் தெரிகிறாரோ? 


No comments:

Post a Comment