சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Nov 2015

'எனது கணவர்தான் பாலியல் தொழிலில் தள்ளினார்!' -'கிஸ் ஆப் லவ்' ரேஷ்மி வாக்குமூலம்

னது கணவர் ராகுல் பசுபாலன் வற்புறுத்தலின் பெயரிலேயே தான் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கேரள 'கிஸ் ஆப் லவ்' அமைப்பின் நிர்வாகியான ரேஷ்மி நாயர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கேரளாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 'கிஸ் ஆப் லவ் 'அமைப்பின் நிர்வாகிகள் ராகுல பசுபாலன் அவரது மனைவி ரேஷ்மி நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில தொடர்புடைய மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ரேஷ்மி நாயர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், ''எனது கணவர் ராகுல் பசுபாலன், எனது நிர்வாண புகைப்படங்களை  இணையங்களில் பதிவேற்றி  என்னை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தார். என்னை  வைத்து பணக்காரர்களை வளைப்பது அவரது திட்டமாக இருந்தது. எங்கள் இருவர் நடவடிக்கைகள் மீது ராகுலின் பெற்றோருக்கும் சந்தேகம் இருந்தது '' என கூறியுள்ளார். 
 
பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்காக  ரேஷ்மி மற்றும் ராகுல் பசுபாலன் ஆகியோர் தனியாக  ஃபேஸ்புக் பக்கத்தை தொடங்கியுள்ளனர். இதனை கேரள சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர். சிறுமிகளையும் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து ராகுல், ரேஷ்மி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

கோழிக்கோட்டில் உணவகம் ஒன்றில் முத்தமிட்டு கொண்டிருந்த காதல் ஜோடியை ஒரு கும்பல் தாக்கியது. இதையடுத்து நாடு முழுவதும் 'அன்பு முத்தம்' என்ற பெயரில் போராட்டம் நடைபெற்றது. கேரளத்தில் அன்பு முத்த போராட்டத்தை முன்னின்று நடத்திய 'கிஸ் ஆப் லவ்' அமைப்பின் நிர்வாகிகள்தான் ராகுல் -ரேஷ்மி ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment