சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Nov 2015

இந்திய பிட்ச்கள் மோசமானவையா? கொதிக்கும் ரசிகர்கள்!

ந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி,  நாக்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 215 ரன்களை சேர்த்தது. இந்த டெஸ்ட் தொடரில், ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவிக்கப்பட்டது நேற்றுதான். 215 ரன்கள் குவித்ததே சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா,  நேற்று இரண்டு விக்கெட்டுகளை இழந்து 11 ரன்களை எடுத்திருந்தது.
 
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரையே அஸ்வினிடம் கொடுத்தார் கேப்டன் விராட் கோலி. இன்று முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் எல்கர் ஆட்டமிழந்தார். இதையடுத்து  அடுத்தடுத்த ஓவர்களிலேயே ஆம்லாவும், டி வில்லியர்ஸும் அவுட்டாக,  வெறும் 12 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்ரிக்க அணி. டுமினி மட்டும் சிறிது நேரம் களத்தில் நின்றார். மற்றவர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வரிசையாக பெவிலியன் திரும்பிக்கொண்டே இருந்தனர். இறுதியில் இன்று உணவு இடைவேளைக்கு முன்னதாகவே 79 ரன்னுக்கு தென் ஆப்ரிக்கா ஆல் அவுட் ஆனது.

உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியான தென் ஆப்ரிக்கா,  இவ்வளவு மோசமாக விளையாடுவதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக  டி வில்லியர்ஸ்  தவறான கணிப்பில் இருமனதுடன் விளையாடி டக் அவுட் ஆனது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தென் ஆப்ரிக்கா தற்போது 136 ரன்கள் பின்தங்கி உள்ளது. அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளை அள்ளினார். இந்நிலையில் இந்திய பிட்ச்கள் மோசமானவை என்றும், கிரிக்கெட் விளையாடவே தகுதியற்ற பிட்ச் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்திய பிட்ச்கள் மோசமானவைதானா?

வழக்கத்துக்கு மாறாக முதல் நாளில் இருந்தே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில்தான் தற்போது பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுமே தங்களுக்கு ஏற்ற வகையில்தான் பிட்ச் அமைப்பார்கள். 2013-ம் ஆண்டு இந்திய அணி தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது தென் ஆப்ரிக்காவில், பிட்ச்கள் பவுன்சர் டிராக்காக சரியாக அமைக்கப்படவில்லை என  அந்நாட்டு வீரர்களே அதிருப்தி தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவில் பெர்த் ஆடுகளத்தை என்றுமே வேகபந்துக்கு சாதகமாகத்தான் அமைப்பார்கள். அங்கே நமது வீரர்கள் விளையாடும்போது பவுன்சராக வீசி அச்சுறுத்துவார்கள். 
நியூசிலாந்தில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும். ஆக்லாந்து போன்ற மைதானங்களில் பல அணிகள் 200 ரன்கள் கடப்பதற்கே திணறியுள்ளன. தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகள் தற்போது முற்றிலும் தங்களுக்கு சாதகமான பிட்ச்களை மட்டுமே அமைத்து வருகின்றன. அந்த மைதானங்களில் ஸ்பின் ஓரளவுக்குதான் எடுபடும். இந்த டெஸ்ட் போட்டியில்,  முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க வீரர் மோர்னே மோர்கல் அபாரமாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதை நாம் நினைவுக் கூற வேண்டும். ஏனெனில் இந்திய மைதானங்களில் எப்போதுமே  ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதில் திறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுப்பார்கள்.
ஆசிய கண்டத்தில் மைதானங்கள், சூரிய வெப்பம் காரணமாக பெரும்பாலும்  உலர்ந்து இருக்கும். இதனால் இலங்கை, இந்தியா போன்றவற்றிலும் ஸ்பின்னுக்கு சாதகமான பிட்ச் தயாரிக்கப்படுகிறது. இங்கே பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் பவுன்சர்களை ஒரு சாதாரண வேகப்பந்து வீச்சாளரால் வீச முடியாது. வலிமை வாய்ந்த தோனியின் படை ஆகட்டும், தென் ஆப்பிரிக்கா ஆகட்டும், பாகிஸ்தான் ஆகட்டும் மூன்று அணிகளுமே இந்த ஆண்டு வங்கதேச மண்ணில், அந்த அணியை சமாளிக்க முடியாமல் படுதோல்வி அடைந்தன.
இந்நிலையில்தான் தென் ஆப்ரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஒருதின போட்டிகளில் மும்பை மைதானத்தை தவிர,  மற்ற அனைத்து ஆடுகளங்களும்  சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவே வடிவமைக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக சென்னை  எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் டி வில்லியர்ஸ் தவிர , மற்ற அனைத்து தென் ஆப்ரிக்க வீரர்களும் பேட்டிங் செய்ய சிரமப்பட்டனர். மும்பையில் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு சாதகமாக ஆடுகளம் இருந்ததால்தான் தென் ஆப்ரிக்கா 400 ரன்களுக்கு மேல் குவித்தது.

இந்திய மண்ணில் ரஞ்சி போட்டிகள் முதலான உள்ளூர் போட்டிகளில் விளையாடியதால் இம்மைதானங்களில் இந்திய வீரர்கள ஓரளவு பேட்டிங் செய்கின்றனர். அதிலும் ஷிகர் தவான், விராட் கோலி, ரஹானே, ரோஹித் ஷர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் தடுமாறியே வந்துள்ளனர். ஏனெனில் இவ்வீரர்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்காக அயல் மண்ணில் தொடர்ந்து விளையாடி வந்துள்ளனர். உள்ளூர்  டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததால் எந்த பிட்சில் எப்படி பேட்டிங் செய்வது என தெரியாமல் திணறுகின்றனர். ரஞ்சியில் அமர்களப்படுத்திய ரவீந்திர ஜடேஜா மட்டுமே பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கி வருகிறார். முரளி விஜய், புஜாரா, அமித் மிஸ்ரா போன்றோரும் தென் ஆப்ரிக்க தொடருக்கு முன்னதாக இந்திய மண்ணில் நன்றாக விளையாடி பழகியதால் இத்தொடரில் சிறப்பாக விளையாடுகிறார்கள்.

இன்றைய தினம் பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததில் எந்தவித மாற்று கருத்தும் நமக்கு இருக்க முடியாது. அதே சமயம் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் சரியான லைனில் அபாரமாக பந்துவீசினர். தவறான ஷாட் விளையாடிதான் பெரும்பாலான தென் ஆப்ரிக்க வீரர்கள் அவுட் ஆயினர். டி வில்லியர்ஸ் உட்பட.  வேகப்பந்துக்கு மட்டுமே சாதகமாக பிட்ச் அமைக்கப்படும்போது, ஸ்பின்னுக்கு மட்டுமே சாதகமாக இருக்குமாறு பிட்ச் அமைப்பதில் என்ன தவறு? என கேட்கின்றனர் ரசிகர்கள். உலகின் நம்பர் ஒன் அணியான தென் ஆப்ரிக்கா, இந்திய அணிக்கு கடும் சவால் தரும் அளவுக்கு விளையாட வேண்டும் என்றுதான் இந்திய ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.


No comments:

Post a Comment