சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Nov 2015

ஷாருக் நீங்க நல்லவரா? கெட்டவரா?

முறையாக வருமான வரி செலுத்தும் நடிகர் , ஷாருக்கான் எடுக்கும் படங்களில் நடித்தால் செக் பேமென்ட் மட்டும்தான். கறுப்பு பணம் என்ற பேச்சுக்கே அவரது படத்தில் கிடையாது என்பதெல்லாம் ஷாருக்கானை பற்றி நாம் கேள்வி பட்ட விஷயங்கள்.
அண்மையில் வெளி வந்த ''சென்னை எக்ஸ்பிரஸ்'' படத்தில் நடித்த நடிகர் டெல்லி கணேஷ், ஷாருக் குறித்து இப்படி கூறுகிறார்,'' நான் மூன்று நான்கு படங்களில் நடித்து சம்பாதிக்கும் பணத்தை' சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் ஒரே பேமென்டில் செக்காக பெற்ற போது என்னால் நம்பவே முடியவில்லை. அத்தனையும் வெள்ளைப் பணம் , மனசுக்கு நிறைவாக இருந்தது என்றார்
இப்படி நேர்மையின் சிகரமாக அறியப்பட்ட இந்த 'பாலிவுட் பாட்ஷா ' மீது அண்மையில் புது குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.  தனக்கு சொந்தமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பங்குகளை அதன் சந்தை மதிப்புக்கு மிக குறைவாக காட்டி கை மாற்றி விட்டுள்ளார் என்பதுதான் அது.
கடந்த 2002ஆம் ஆண்டு ஷாருக்கான் தனது மனைவி கவுரியுடன் இணைந்து 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் ' நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனமே 15க்கும் மேற்பட்ட சினிமாக்களை தயாரித்துள்ளது. அத்துடன் 2008ஆம் ஆண்டு பிரபல நடிகை ஜுகி சாவ்லாவுடன் இணைந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 75 மில்லியன் டாலர்களுக்கு ஷாருக்கான் வாங்கினார்.
இதே ஆண்டில்,  ஷாருக் தன்னிடம் உள்ள, பங்குகளில் பெரும்பான்மையை ஜூஹி சாவ்லாவின் கணவர் ஜே மேத்தாவின் மொரீசியஸ் நாட்டு முதலீட்டு நிறுவனமான "சீ ஐலேண்ட்சு"க்கு விற்றிருக்கிறார். ஒரு பங்கின் மதிப்பு ரூ.70 முதல் ரூ. 86 வரை இருக்கையில், அதனை வெறும் 10 ரூபாய்க்கு மாற்றி விட்டுள்ளார் ஷாருக்.
இதில்தான் அந்நிய செலவாணி விதிமுறைகளை ஷாருக்கான் மீறியுள்ளதாக அமலாக்கத்துறையினர் ஷாருக்கிடம் இப்போது கிடுக்கிப்பிடி போட்டுள்ளனர். இது தொடர்பாக கடந்த வாரத்தில் அவரிடம் நேரடியாகவே விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. 

பல்வேறு சமூக நற்பணிகளில் ஈடுபடுட்டதற்காக ஷாருக்கான் 'யுனெஸ்கோ ' விருது பெற்றவர். அவரது  "தில் தோ பாகல் ஹே" திரைப்படம் வெளியான போது, தொலைக்காட்சி நேர்காணல்களுக்காக, தான் பெறும் பணம் முழுவதையும், தொண்டு நிறுவனங்களின் பெயரில் காசோலையாகப் பெற்று, நன்கொடையாக அளித்தவர்.  
பாலிவுட் நடிகர்களில் சமூக அக்கறையும் பொறுப்பு கொண்டவர் என்று அறியப்பட்ட ஷாருக் அந்நிய செலவாணி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 

ஷாருக்கான் சில சுவாரஷ்யங்கள்

 
ஷாருக் 15 வயதில் தந்தையையும், 25 வயதில் தாயையும் இழந்த ஷாருக், தன் கடும் உழைப்பினால், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஆனார். 

ஷாருக் கானின் முதல் சம்பளம் 50 ரூபாய். டில்லியில் நடந்த ஓர் கச்சேரியில், வாட்ச்மேன் வேலை பார்த்து அதனை ஈட்டினார். 
 
கடந்த 1994 ஆண்டு வெளியான "கபி ஹான் கபி நா" எனும் திரைப்படத்தில் அவர் நடித்ததற்காக பெற்ற சம்பளம் ரு. 25 ஆயிரம் மட்டுமே.இந்த திரைப்படம் வெளியான முதல் நாள், மும்பையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் . டிக்கட் கிழிக்கும் பணியிலும் ஈடுபட்டார். 
இவர் கதாநாயகனாக நடித்த திரைப்படங்களில், 26 திரைப்படங்கள் வெற்றி கண்டுள்ளன. இதில் பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளன. 19 திரைப்படங்கள் தோல்வி அடைந்தும், 9 திரைப்படங்கள் சுமாராக ஓடியும் உள்ளன. 

ஷாருக், தன் சொந்தப் பணத்தையே திரைப்படங்களில் முதலீடு செய்கிறார். வியாபார நோக்கத்திற்காகக் கூட கடன் பெறக்கூடாது என்பது ஷாருக்கின் கொள்கை.

ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், படத் தயாரிப்பைத் தவிர, விஷுவல் எஃபெக்ட்ஸிலும் ஈடுபடுகிறது. தயாரிப்பு மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் வாயிலாக, 70 சதவீத வருவாயை ஈட்டுகிறது.

கடந்த  2012 ஆம் ஆண்டு,மது அருந்திவிட்டு, வான்கடே மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர்களிடம், தகராறு செய்து, 5 ஆண்டுகள் மைதானத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார்.

ஷாருக் - கஜோல் நடிப்பில் வெளியான   "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" மும்பையில் ஒரே தியேட்டரில்  1009 வாரங்கள், ஓடி சாதனை படைத்துள்ளது. இந்த திரைப்படத்தின் சாதனையை இனிமேல் எந்த திரைப்படமும் முறியடிக்க வாய்ப்பில்லை.

No comments:

Post a Comment