சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Nov 2015

நாக்பூர் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா ஜெயிக்குமா? - நச்சுனு 4 விஷயங்கள்!

ந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாக்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று மட்டும் 20 விக்கெட்டுகள் வீழ்ந்தன.
11 ரன்களுடன் இன்றைய தினம் ஆட்டத்தை துவக்கிய தென்னாப்பிரிக்கா, வெறும் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இரண்டாம் இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணி 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 310 ரன்கள் எடுத்தால் இந்த டெஸ்ட் போட்டியை வெல்லலாம் என்ற நிலையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 14 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து, 32 ரன்கள் குவித்துள்ளது. நாளைய தினம் மேலும் 278 ரன்களை சேர்த்து தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறுமா அல்லது இந்திய அணி எட்டு விக்கெட்டுகளையும் விரைவில் கைப்பற்றி, தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்:
அஷ்வின் அபாரம்

இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்க்ஸில் ஐந்து விக்கெட்டுகளை அள்ளினார் அஷ்வின். இன்றைய தினம் ஆட்டத்தின் முதல் ஓவரையே அஷ்வின்தான் வீசினார். முதல் ஓவரின் ஐந்தாவது பந்திலேயே எல்கரை வீழ்த்தினார். அதன்பின்னர் அடுத்த ஓவரில் அம்லாவையும் அவுட் செய்தார். இந்த வருடம் மட்டும் ஐந்து முறை ஒரு இன்னிங்க்ஸில் ஐந்து விக்கெட் எடுத்து சாதனை படைத்திருக்கிறார் அஷ்வின். ஒட்டுமொத்தமாக ஒரு  இன்னிங்க்ஸில் ஐந்து விக்கெட் எடுப்பது அஷ்வினுக்கு இது 14 வது முறை ஆகும். இன்றைய தினம் முதல் இன்னிங்ஸில் சைமன் ஹார்மருக்கு நம்பவே முடியாத வகையில் ஒரு பந்தை வீச, அந்த பந்து சுழன்று கால்களுக்கு இடையே புகுந்து ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. இந்த ஆண்டின் அற்புதமான பந்து இது என ட்விட்டரில் அஷ்வினுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.
'சர்' ஜடேஜா

ரசிகர்களால் 'சர்' என செல்லமாக அழைக்கப்படும் ரவீந்திர ஜடேஜாதான் இன்றைய போட்டியின் நாயகர். டி வில்லியர்ஸ் மனநிலையுடன் ஆட்டம் காண்பித்தது ஒரு பந்தை வீச, முன்முடிவுடன் ஷாட் விளையாடி, பின்னர் ஒருவாறு சுதாரிக்க நினைத்து முடியாமல் போக, ஜடேஜாவிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பந்து மைதானத்தில் நன்றாக சுழன்று திரும்புகிறது. எனினும் வேகமாகவும், துல்லியமாகவும் பந்து வீசினார் ஜடேஜா. ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சில் டுபிளசிஸ் போல்ட் ஆனார்.
ஓட்ட நாயகன் 'தாகீர்'

இந்தியா இரண்டாவது இன்னிங்க்ஸ் விளையாடும்போது சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்திலும் இம்ரான் தாகீரை 24-வது ஓவர் வரை கேப்டன் அம்லா அழைக்கவில்லை. அப்போது இந்திய அணி 96 -2 என வலுவான நிலையில் இருந்தது. இம்ரான் தாகீர் பந்துவீச ஆரம்பித்ததும், இந்திய நடுவரிசை ஆட்டம்  கண்டது. தவான், விராட் கோலி, ரஹானே, சாஹா ஆகியோரை அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார் இம்ரான் தாகீர். இரண்டாவது இன்னிங்க்ஸில் தாகீர் ஐந்து விக்கெட்டுகளை அள்ளினார். இதனால் இந்திய அணி 173 ரன்களுக்கு சுருண்டது.

சேஸிங் கடினம்

இந்திய மண்ணில் ஆசியாவை தாண்டிய எந்தவொரு அணியும் நான்காவது இன்னிங்ஸில் 275 ரன்களையே சேஸ் செய்தது கிடையாது. மேலும், தற்போதைய சூழ்நிலையில் ஆடுகளம்  சுழற்பந்துக்கு சாதகமாவே உள்ளது. எனவே நாளைய தினம் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்கின்றனர் கிரிக்கெட் வல்லுனர்கள்.

கடந்த ஒன்பது வருடமாக எந்த ஒரு அயல் மண்ணிலும் டெஸ்ட் தொடரை இழக்காத அணி என்ற சிறப்பை பெற்றுள்ள தென்னாப்பிரிக்க அணி, நாளைய தினம் மோசமான தோல்வியை தழுவி சாதனைகளை முடிவுக்கு கொண்டு வருமா அல்லது சேஸிங் செய்து வரலாறு படைக்குமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நாளைய தினம் ரிசல்ட் உறுதி என்பதால் கிரிக்கெட் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


No comments:

Post a Comment