சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Nov 2015

சூப்பர் சீனியர்களுக்கு 'கல்தா': திமுக தலைமை அதிரடி திட்டம்!

ரும் 2016 சட்டசபைத் தேர்தலில், கட்சியின் சீனியர்கள் பலருக்கும் ‘ஸீட்’ இல்லை என்ற பேச்சு தி.மு.க.வில் ஓடிக்கொண்டிருக்கிறது. 2011 சட்டசபைத் தேர்தலிலேயே கோ.சி.மணி, ஆற்காடு வீராசாமி போன்ற சீனியர்களுக்கு ஸீட் தரப்படவில்லை. இந்த தேர்தலிலும் சூப்பர் சீனியர்களுக்கு 'கல்தா'தானாம். 

ஆனால், அந்த சீனியர்கள் லிஸ்டில் இருவருக்கு மட்டும் விதிவிலக்கு. ஒருவர் கருணாநிதி; இன்னொருவர் கட்சியின் நம்பர் 2 பேராசிரியர் அன்பழகன். கருணாநிதி எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது. ஆனால், அன்பழகனுக்கு இப்போதிருந்தே தொகுதியை தேடத் தொடங்கிவிட்டார்கள்.

கடந்த காலங்களில் துறைமுகம் தொகுதியில்தான் தொடர்ந்து போட்டியிட்டு வந்தார் அன்பழகன். 2011 சட்டசபைத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதிக்கு மாறினார். 1991-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது ராஜீவ்காந்தி படுகொலை சம்பவம் நடைபெற்றது. அந்த சமயத்தில் தி.மு.க. மொத்தமாக தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அப்போது துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி மட்டும்தான் கரையேற முடிந்தது. அந்த அளவுக்கு தி.மு.க.வுக்கு செல்வாக்கான தொகுதியாக இருந்தது துறைமுகம். 

அதன்பிறகு 1996 சட்டசபைத் தேர்தலில் இங்கே முதன்முறையாக போட்டியிட்ட பேராசிரியர் அன்பழகன் வெற்றி பெற்றார். ஆனால் 2001 சட்டசபைத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியனை வெறும் 336 ஓட்டுகள் வித்தியாசத்திலும், 2006 சட்டசபைத் தேர்தலில்  ம.தி.மு.க. வேட்பாளர் சீமா பஷீரை 409 ஓட்டுகள் வித்தியாசத்திலும் நூலிழையில் வெற்றி பெற்றார் அன்பழகன். அதுவும்போக, தொகுதி பக்கம் அவர் எட்டிப் பார்த்தது அரிதுதான்.
இரண்டே சூப்பர் சீனியர்களுக்குத்தான் தி.மு.கவில் சீட்!?

இதனாலேயே, மிகவும் நெருக்கடியான காலக்கட்டத்தில் கருணாநிதியை கரையேற்றிய தொகுதி, அவரின் உயிர் நண்பரான அன்பழகனை தொகுதியைவிட்டே விரட்டியடிக்க தயாராகி இருந்தது. 1977-ம் ஆண்டிலிருந்து துறைமுகம் தொகுதியில் 9 முறை வெற்றி பெற்றிருக்கிறது தி.மு.க. அப்படிப்பட்ட தொகுதியில் சீனியர் தோற்றார் என்கிற பேச்சு வந்துவிடக்கூடாது என்பதற்காக அன்பழகனை வேறு தொகுதியில் நிறுத்த முடிவு எடுத்தனர். 2011 சட்டசபைத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதிக்கு ‘ஜம்ப்’ ஆனார் அன்பழகன். 

வில்லிவாக்கம் தொகுதி 1977ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆசியாவின் மிகப் பெரிய சட்டசபை தொகுதியாக 2011-க்கு முன்பு வரை இருந்தது. தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின் தொகுதி சிறியதானது. 2001, 2006ல் தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதி. 1980-ல் அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற ஜே.சி.டி. பிரபாகரே 2011ல் மீண்டும் போட்டியிட்டதால், இருதரப்பிலும் போட்டி கடுமையாக இருந்தது. அன்பழகனை ஜே.சி.டி. பிரபாகர்,  10 ஆயிரத்து 782 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தி.மு.க.வின் நம்பர் 2 தோற்றது தேர்தலில் அதிர்வலைகளை உண்டாக்கியது.
ஆக, 2016 சட்டசபைத் தேர்தலில் பேராசிரியர் நிற்பாரா என்பது  இப்போதே கட்சிக்குள் பரபர விவாதமாக இருக்கிறது. அவருக்கு பாதுகாப்பான தொகுதியை தேடிக் கொண்டிருக்கிறார்கள். 100 சதவிகித  நிச்சய வெற்றி என்றால் மட்டுமே, அன்பழகனுக்கு சீட் நிச்சயம் என்கிறார்கள். 

டெயில் பீஸ்: அன்பழகன் எஸ்கேப் ஆன துறைமுகம் தொகுதியின் நிலவரம் என்ன?
பாதுகாப்பு இல்லாத தொகுதி என்பதால், அத்தொகுதியை 2011 தேர்தலில் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கியது தி.மு.க. துறைமுகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் பழ. கருப்பையா போட்டியிட்டார். தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக அல்தாப் ஹுசைன் போட்டியிட்டார். 20 ஆயிரத்து 317 வாக்குகள் வித்தியாசத்தில் பழ. கருப்பையா வென்றார். 

No comments:

Post a Comment