தருமபுரியில் நடைபெற்ற அதிமுக ஆட்சியின் நான்கரை ஆண்டு கால சாதனை விளக்கப்பொதுக் கூட்டத்தில், குடி பற்றிய எதிர்கட்சிகளின் விமர்சனம் குறித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், பொதுமக்களை எகத்தாளமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பழனியப்பன், “ இனி அம்மாவைப் பற்றி எந்தக்குறையும் நீங்கள் சொல்ல முடியாது. தண்ணீர் இல்லை, கரண்ட் இல்லை என்று சொல்ல முடியாது. சொன்ன அத்தனை வாக்குறுதிகளையும் அம்மா நிறைவேத்திக்கொடுத்திருக்காங்க. கொஞ்சநாளைக்கு முன்பு வரை சாராயம் சாராயம்னு பேசிகிட்டு இருந்தாங்க. நாங்களா உங்களை கைய பிடிச்சு குடிக்க சொல்றோம்? அதான் பாட்டில் மேலயே எழுதி இருக்குல்ல. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப்போலத்தான் இதுவும்" என்றார்.
தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திய டாஸ்மாக் எதிர்ப்பு பிரச்சாரங்களை மதிக்காது, பொதுமக்களை திருடன் என்ற அர்த்தத்தில் அமைச்சர் குறிப்பிட்டுப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது விற்பனைக்கு வக்காலத்து வாங்கி பொதுமக்களை திட்டிய அமைச்சரின் பேச்சுக்கு, பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

No comments:
Post a Comment