சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Nov 2015

2 மாதம் லீவில் செல்லும் ஃபேஸ்புக் அதிபர்!

பொதுவாக அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், தங்களுக்கு குழந்தை பிறக்கும்போது அந்த குழந்தையை பராமரிப்பதற்காக சிறிது காலம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம். ஆனால் பெரும்பாலான பணியாளர்கள்,  "எங்களுக்கு கடமையே கண்"  என சொல்லிட்டு, பணி உயர்விற்காக விடுப்பு எடுக்காமல் அலுவலகத்திலயே தீயா வேலை செய்வார்கள்.

இதே போன்ற நடைமுறை ஃபேஸ்புக் நிறுவனத்திலும் உண்டு. ஃபேஸ்புக் ஊழியர்களுக்கு குழந்தை பிறக்கும் போது  அவர்கள் நான்கு மாதம் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம். பெரும்பாலும் இந்தச் சலுகையை யாரும் பயன்படுத்தாத நிலையில், முதல்முறையாக அந்தச் சலுகையை பயன்படுத்தி விடுப்பில் செல்ல இருக்கிறார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்.
31 வயது நிரம்பிய மார்க்கிற்கு முதல் குழந்தை பிறக்கப் போகிறது. இதனால் "நல்ல அப்பாவா நான் இரண்டு மாசம் லீவ் எடுத்துட்டு வரேன்" என்று குறும்பாக ஸ்டேடஸ் தட்டியிருக்கிறார் மார்க். இதன் மூலம்  இனிமேல் தான் செய்யும் பணிகள் மேலும் சிறப்பாக அமையும், புதுப்புது ஐடியாக்கள் கிடைக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்களில் பணியாளர்களே விடுப்பு எடுக்காத நிலையில் ஃபேஸ்புக் போன்ற ஒரு பெரிய நிறுவனத்தின் நிறுவனர், இப்படி விடுப்பில் செல்வதாக கூறியிருப்பது இதுவே முதல்முறை. அவர் இரண்டு மாதம் விடுப்பில் செல்லும் நிலையில் ஃபேஸ்புக் நிர்வாகப் பணிகளை அதன் தலைமை செயல் அதிகாரி ஷெர்லின் சேண்ட்பர்க் கவனிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சக்கர்பெர்க். விடுப்பில் செல்வதாக கூறிய ஸ்டேட்டஸ் 50,000 மேல் லைக்குகளை பெற்றுள்ளது.  அதே சமயம் ஃபேஸ்புக் ஊழியர்கள் எல்லோரும் கிண்டலாக கமெண்ட் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆனந்த யாழை மீட்டுவதற்கு சென்றிருக்கும் மார்க்கை நாமும் வாழ்த்துவோம். முக்கியமாக ஒருவார மழை விடுமுறைக்கு ஓவர் டைம் பார்க்க சொல்லும் நிறுவனங்கள் எல்லாம் நோட் பண்ணுங்க பாஸ்..!

No comments:

Post a Comment