சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Nov 2015

'முதலைகள் பத்திரமாக இருக்கின்றன... வதந்தியை நம்ப வேண்டாம்!- முதலை பண்ணை நிர்வாகம்

'எங்கள் பண்ணையிலிருந்து எந்த முதலைகளும் தப்பிச் செல்லவில்லை. முதலை தப்பியதாக சொல்லப்படும் தகவல் யாரோ கிளப்பி விட்ட வதந்தி. அதை யாரும் நம்ப வேண்டாம்'' என்று சென்னை முதலை பண்ணை நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
வெள்ளத்தில் சிக்கி விழிப்பிதுங்கி நிற்கும் சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு, மேலும் ஒரு அதிர்ச்சியாக வந்தது அந்த வாட்ஸ்அப் தகவல். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முதலை பண்ணையிலிருந்து 20 முதலைகள் தப்பி விட்டது என்பதுதான் அந்த தகவல். இது வைரலாக பரவியது. தப்பிய முதலைகள் வேளச்சேரி, மேடவாக்கம், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர் பகுதிகளில் வர வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் இந்த பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். சில சேனல்களில் இதுதொடர்பாக செய்தியும் ஒளிபரப்பப்பட்டது.

ஆனால் இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளார் சென்னை முதலை பண்ணையின் இயக்குனர் நிகில்.
அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம். "எங்கள் பண்ணையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. அவைகளை பராமரிக்கவும், கண்காணிக்கவும் போதிய அளவில் ஊழியர்கள் உள்ளனர். இதனால் எங்கள் பண்ணையிலிருந்து எந்த முதலைகளும் தப்பிச் செல்லவில்லை. முதலை தப்பியதாக சொல்லப்படும் தகவல் யாரோ கிளப்பி விட்ட வதந்தி. அதை யாரும் நம்ப வேண்டாம். ஒவ்வொரு மழையின் போதும் இதுபோன்று வதந்திகளை பரப்பி விடுவது சிலருக்கு வாடிக்கையாக உள்ளது" என்றார்.
அதே நேரத்தில் அப்பகுதி மக்கள் கூறுகையில், "கிழக்கு கடற்கரை சாலையில்,  கோவளத்திலிருந்து 3 கி.மீட்டர் தூரத்தில் இந்த முதலை பண்ணை பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. முதலைகளை பார்க்க தினமும் சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. இந்த பண்ணையில் பாம்புகளும் உள்ளன. பண்ணையை சுற்றி நூற்றுக்கணக்கான குடியிருப்புகளும் இருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மழைவெள்ளத்தை தொடர்ந்து, சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குளத்தில் முதலை இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதன்பேரில் அந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர். இந்த முதலை எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. முதலையை கண்டு யாரும் பயப்பட வேண்டும். அது நமது முதலாளிகள் என்று பண்ணை தரப்பில் சொல்வதை நாங்கள் கேட்டு இருக்கிறோம்.
அவர்களுக்கு வேண்டும் என்றால் அது முதலாளி. ஆனால் முதலை ஊருக்குள் புகுந்ததால் எல்லோரும் பயம்தான். முதலைகள் வெளியேறாமலிருக்க தகுந்த பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி இருப்பதாக பண்ணை நிர்வாகம் தரப்பில் சொல்கிறார்கள். முதலை வெளியேறாமல் இருந்தால், எல்லோருக்கும் நிம்மதி. வாட்ஸ்அப்பில் முதலை வெளியேறியதாக ஓர் தகவல் உலாவுகிறது. அதை நம்பவும், நம்பாமலும் இருக்க முடியவில்லை. முதலை பண்ணையையொட்டி உள்ள பகுதி மக்கள் எல்லோரும் இந்த தகவலால் பீதியில் உறைந்து போய் இருக்கிறார்கள்" என்றனர்.

No comments:

Post a Comment