சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Nov 2015

பாரிஸ் தாக்குதலுக்கு பிரான்ஸ் ஆவேச பதிலடி: ஐ.எஸ். இலக்குகள் மீது சரமாரி குண்டு வீச்சு!

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் இலக்குகளை குறிவைத்து, பிரான்ஸ் நாட்டின் 12 போர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலைத் தொடங்கியுள்ளன. நேற்று இரவில் மட்டும் ஐ.எஸ். இலக்குகள் மீது 20 குண்டுகள் வீசப்பட்டுள்ளன. 

             
இதில் சிரியாவின் ராக்கா பகுதியில் உள்ள ஐ.எஸ். பயிற்சி முகாம், வெடி மருந்து கிட்டங்கிகள் அழிந்து போனதாக கூறப்படுகிறது. ஜோர்டான் மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் இருந்து புறப்பட்ட போர் விமானங்கள், அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இந்த தாக்குதலை நடத்தியுள்ளன. 

பாரிஸ் நகரில் 7 இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ள நிலையில் பிரான்ஸ், தீவிரவாதிகள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment