சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Nov 2015

ஆசிட்டிற்கு எதிரான சிறு புன்னகை!

ழு மாதங்களுக்கு முன்பு டெல்லி மருத்துவமனையில் ஒரு குழந்தை பிறந்தது. பிகு எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் பெண் குழந்தை, சாதாரண குழந்தை அல்ல; ஒரு பெரும் சமுதாய மாற்றத்திற்கான சிறு அடையாளம். அதை தெரிந்து கொள்வதற்கு முன் கொஞ்சம் வரலாற்றை திரும்பி பார்ப்போம்.
2005-ம் ஆண்டு டெல்லியில் 30 வயது நிரம்பிய ஆண் ஒருவர், தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளாததால் லட்சுமி அகர்வால் என்ற 16 வயது பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் ஊற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அந்தப் பெண் தன்னுடைய விடா முயற்சியால் உச்ச நீதிமன்றத்தில் போராடி, நாடு முழுவதும் ஆசிட் விற்பனைக்கு எதிரான தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

அதுமட்டுமல்லாமல், சென்ற வருடம் உலகின் துணிவான பெண்மணி என்ற விருதை, அமெரிக்க அதிபர் மாளிகையில் மிட்செல் ஒபாமா கையால் பெற்றார். மேலும், ஆசிட் வீச்சுக்கு எதிராக போராடியதன் மூலம் சிறந்த இந்திய குடிமகள் விருதையும் அவர் பெற்றிருக்கிறார்.
2014 ஜனவரியில் அலோக் தீக்சித் என்ற சமூக செயல்பாட்டாளர் மேல் காதல் கொண்ட லட்சுமி, திருமணம் செய்து கொள்ளாமல் கடந்த இரண்டு வருடமாக அவருடன் வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு பிறந்த குழந்தைதான் பிகு.

பிகு-வை பற்றி லட்சுமி கூறும்போது, ''நான் ரோட்டுல நடந்து போறப்ப எல்லோரும் என்னை வித்தியாசமா பாப்பாங்க. சிலர் என்னை ரொம்ப பரிதாபமாக பாப்பார்கள். சிலர் பயப்படுவாங்க. இதேபோல் என்னோட குழந்தையும் என்ன பார்த்து பயப்படுமோன்னு நினைத்திருந்தேன். ஆனா அவ, என்னை பார்த்து ரொம்ப அழகா சிரிப்பா. யாரும் என்ன பார்த்து அப்படி சிரிச்சதில்ல.
பிகு என்னை ஏற்றுக் கொள்வாளா என பார்த்துவிட்டு, குழந்தை பிறந்ததை பற்றி எல்லாருக்கும் தெரிவிக்கலாம் என்றிருந்தேன். பிகுவுக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு; அதான் இப்ப எல்லோருக்கும் சொன்னேன்" என்கிறார்.

கல்யாண வாழ்க்கை பற்றிய கேள்விக்கு, "கடைசி வரை கல்யாணம் செய்து கொள்ளாமலேயே அலோக் தீக்சித்துடன் வாழ வேண்டும்" என சந்தோசமா சிரிக்கிறார்.

உண்மைதான்... உலகில் ஒவ்வொரும் சந்தோமாக வாழ்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்தக் காரணத்தைக் கண்டுபிடிப்பது மட்டும்தான்!


No comments:

Post a Comment