சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Nov 2015

'ஐ.எஸ். ஐ.எஸ். இயக்கத்தில் 150 தமிழக இளைஞர்கள்!'

உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் 150 தமிழக இளைஞர்கள் சேர்ந்துள்ளனர் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர்  மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " பாரீஸ் நகரில்  நடந்த தீவிரவாத தாக்குதலை இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகள் கண்டித்துள்ளன. பாகிஸ்தான் மற்றும் சில நாடுகள் ஆதரித்து வருகின்றன.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் தென் மாநிலங்களைச்  சேர்ந்த, குறிப்பாகத்  தமிழகத்தைச்  சேர்ந்த 150 இளைஞர்கள் சேர்ந்துள்ளார்கள். இவர்களை ஒழிக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப்  பணியை மேற்கொண்டால் வாக்கு வங்கி பாதிக்கும் என்று அலட்சியம் காட்டக்கூடாது. ஐ.எஸ். தீவிரவாதத்தை 150 இஸ்லாமிய அமைப்புகள் கண்டித்துள்ளதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

சென்னை பெருமளவு வெள்ளச்சேதத்தைச்  சந்தித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பணிகள் வேகமாகச்  சென்றடைய வேண்டும். நிவாரண பணிகளில் உதவி செய்ய ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா. ஜனதா தயாராக உள்ளன. மத்திய அரசின் நிதி விரைவில் கிடைக்க முயற்சி எடுப்போம்.

வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுக,திமுக அல்லாத அணியில் பா.ஜனதா இருக்கும் அந்த கூட்டணியில் பா.ஜனதா மையப்புள்ளியாக இருக்கும். மக்கள் நல கூட்டு இயக்கம் கற்பனையானது. தேர்தல் வரை தாக்குப்பிடிக்காது.

பாமக அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு அவர்கள் வேட்பாளர்களையும் அறிவிக்கலாம். ஆனால் தேர்தல் வரும் போது ஏதாவது ஒரு கூட்டணியில் பாமக சேர்ந்து விடும்" என்று கூறினார்.



No comments:

Post a Comment