சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Nov 2015

மார்க்கெட்டுக்கு புதுசு: மைக்ரோசாப்ட் ஸ்மார்ட்போன் லூமியா 950 எக்ஸ்.எல்!

லைச்சிறந்த நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம்,  தனது புத்தம் புதிய ஸ்மார்ட்போன் ஆன மைக்ரோசாப்ட் லூமியா 950 மற்றும் லூமியா 950 எக்ஸ்.எல் ஆகியவற்றை வரும் நவம்பர் 30, 2015 ல் சந்தையில் களமிறக்குகிறது.
மேம்பட்ட தொழில்நுட்பத்தில் உருவான இந்த ஸ்மார்ட்போன்,  பல பிரத்யேக வசதிகளை பயனாளர்களுக்கு அள்ளி வழங்குகிறது. அதுமட்டுமின்றி டிஸ்ப்ளே டாக் எனும் சாதனமும் களமிறங்குகிறது. இதை பயன்படுத்தி உபயோகிப்பாளர் கணினியின் மானிட்டர், கீபோர்டு, மவுஸ் ஆகியவற்றுடன் இந்த ஸ்மார்ட்போனை  இணைக்கலாம்.இதன் திரையானது கணினியின் திரை போன்ற தெள்ளத் தெளிவான காட்சிகளை தரக்கூடியது.
இதில்  ஸ்னாப்டிராகன் 808 எனும் சிறப்பு வகை பிராசசர் லூமியா 950 யிலும், ஸனாப்டிராகன் 810 எனும் பிராசசர் 950எக்ஸ்.எல் லிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

லூமியா 950 ஆனது 5.2 இன்ச் திரை அகலமும், 8.2 மி.மீ தடிமனும் கொண்டது. இதன் பேட்டரியானது 3000 mAh திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 150 கிராம் மட்டுமே.

லூமியா 950 எக்ஸ். எல் இன்னும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ளது. இதன் திரையானது கொரில்லா கிளாஸ்4 எனும் சிறப்பு வகை கிளாஸினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 5.7இன்ச்  பெரிய திரை அகலமும் 8.1 மி.மீ தடிமனும் கொண்டது. பேட்டரியானது 3340 mAh திறன் கொண்டது. இதன் எடை 165 கிராம் மட்டுமே. இதன் மெமரியானது 32ஜி.பி. 
இதன் கேமரா திறன் 20 மெகா பிக்ஸெல்லும், முன் பக்க கேமரா 5மெகா பிக்ஸெல்லும்  கொண்டது. 200ஜி்.பி எஸ்டி கார்டி வரை இதில் உபயோகித்துக் கொள்ளலாம். 15ஜி.பி ஆன்டிரைவ்  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது என்பது கூடுதல் தகவல். 

No comments:

Post a Comment