கிரிக்கெட் உலகில், கடந்த சில ஆண்டுகளாக உலகின் அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும் மரண பயத்தைக் கொடுத்து வருகிறார் தென்னாப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ். ஒரு காலத்தில் சச்சின் விக்கெட்டை வீழ்த்தும் பவுலரை உலகம் எப்படி கொண்டாடியதோ, அதுபோல தற்போது டி வில்லியர்ஸின் விக்கெட்டை வீழ்த்தும் நபருக்கு பாராட்டுகள் குவிகிறது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்கா தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றை தென்னாப்பிரிக்கா கைப்பற்ற, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு டி20, ஐந்து ஒருநாள் போட்டி, மூன்று டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகியவற்றில் விளையாடி, மூன்று சதம் மற்றும் இரண்டு அரை சதம் ஆகியவற்றின் உதவியோடு 592 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் டி வில்லியர்ஸ்.

இரண்டு டி-20, ஒரு ஒருதின போட்டி, மூன்று டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகியவற்றில் விளையாடி 17 விக்கெட்டுகளை கைப்பற்றி, பவுலர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பது நம்ம சென்னை பையன் அஷ்வின்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில், இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த தொடரில் சங்ககாரா இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாடி ஓய்வு பெற்றார். அத்தொடரில் நான்கு இன்னிங்ஸிலும் சங்ககாரா விக்கெட்டை அஸ்வின் சாய்க்க, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தின் கவனமும் அஷ்வின் பக்கம் திரும்பியது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி-20 தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும், டி வில்லியஸ் விக்கெட்டை அஷ்வின் சாய்க்க, புகழின் உச்சிக்கு சென்றார் அஷ்வின். டி வில்லியர்ஸ் அஷ்வினை சமாளிக்க தடுமாறுகிறார் என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், உண்மையில் டி வில்லியர்ஸ் அஷ்வினை சமாளிக்க திணறுகிறாரா? என்பதை புள்ளி விவரங்களோடு பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. எப்படி? இதுவரை ஒருமுறை கூட டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகளில் டி வில்லியர்ஸை அஷ்வின் வீழ்த்தியதே கிடையாது.
கடந்த டி-20 தொடரில் அஷ்வின் பந்து வீச்சை சமாளிப்பது கடினமாக இருந்தததா? இரண்டு முறை அவரது பந்தை தவறாக கணித்து போல்ட் முறையில் அவுட்டானது ஏன் என செய்தியாளர்கள் டி வில்லியர்ஸிடம் கேட்க, "அஷ்வின் உலகத்தரமான பந்து வீச்சாளார் என்பதில் எள்ளளவு கூட சந்தேகமே இல்லை. ஆனால், இரண்டு முறையும் நான் அஷ்வின் பந்தில் அவுட்டானது எனது தவறான கணிப்பால், நானாகவே வலியப்போய் அவுட் ஆகியிருக்கிறேன். மற்றபடி அந்த இரண்டு பந்துகளிலும் எந்தவித ஸ்பெஷலும் இல்லை’’ என்றார் புன்முறுவலோடு.

இந்த விமர்சனங்களுக்குப் பிறகு அடுத்தடுத்த போட்டிகளில் அஷ்வின் பந்தில் டி வில்லியர்ஸ் அவுட் ஆகவே இல்லை. எனினும் டி வில்லியர்ஸை கடுமையாக அஷ்வின் சோதித்தார். அஷ்வினை சமாளிக்க ஸ்டிரைக்கை மாற்றிக்கொண்டே இருக்கும் உத்தியை மட்டுமல்ல, அவ்வப்போது அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போதும் கூட, அசால்ட்டாக அட்டகாசமான டிரைவ் விளையாடி, பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பி, எந்த பந்து வீச்சாளரையும் சமாளிப்பேன் என்று பேட் மூலம் சொல்லியிருக்கிறார் டி வில்லியர்ஸ்.
இந்நிலையில்தான் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகள் சுழலுக்கு மிகவும் சாதகமான நாக்பூர் மற்றும் டெல்லி மைதானங்களில் அடுத்தடுத்து நடக்கவுள்ளது. அஷ்வினை தொடர்ந்து டி வில்லியர்ஸ் ஆதிக்கம் செலுத்துவாரா அல்லது டி வில்லியஸ்க்கு கடும் நெருக்கடி தந்து அவரது விக்கெட்டை, கூடிய விரைவில் அஷ்வின் கைப்பற்றி இந்தியாவின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்குவாரா என்பதே தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு!
புள்ளி விவரங்கள் என்ன சொல்கின்றன ?

டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில், மொகாலி டெஸ்ட் போட்டியில் மட்டும் அஷ்வின் பந்துகளை எதிர்கொள்ள முதல் இரண்டு ஓவர்கள் வரை மிகவும் சிரமப்பட்டார் டி வில்லியர்ஸ், அதை தவிர மற்ற போட்டிகளில் அஷ்வினை அருமையாக கையாண்டார் டி வில்லியர்ஸ்.
அஷ்வின் இதுவரை ஐந்து ஒருதின போட்டிகளில் டி வில்லியர்ஸுக்கு பந்து வீசியிருந்தாலும், ஒரு முறை கூட அவரை அவுட் ஆக்க முடியவில்லை. மேலும் அஷ்வின் வீசிய 74 பந்துகளில் மூன்று சிக்சர்கள் விளாசியிருக்கிறார் டி வில்லியர்ஸ்.
இந்தியா - தென்னாபிரிக்கா மோதிய டி20 போட்டிகளில் நான்கு போட்டிகளில் அஷ்வின் பந்து வீச்சை எதிர்கொண்டார் டி வில்லியர்ஸ். இதில் அஷ்வினுக்கே ஜெயம். நான்கு போட்டிகளில் மூன்றில் டி வில்லியர்ஸை அவுட் ஆக்கியுள்ளார் அஷ்வின். மேலும் அஷ்வின் வீசிய 23 பந்துகளில் ஒரு பந்தை மட்டுமே பவுண்டரிக்கு விளாசியிருக்கிறார் டி வில்லியர்ஸ். ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை, ஸ்ட்ரைக்ரேட்டும் வெறும் 91.30 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, இருபது ஓவர் போட்டிகளை பொருத்தவரை அஷ்வின்தான் கில்லி.

No comments:
Post a Comment