இன்று மழையால் தமிழகம் எதிர்கொள்ளும் முதல் பிரச்னை, தண்ணீர் தேங்கியிருப்பது. நகர்ப்புறம் முழுக்க தண்ணீர் தேங்கி நிற்க, பரிசல் பயணம் தவிர, எதுவும் சாத்தியமில்லை என்ற நிலை வந்துவிட்டது. ஆனால், இதற்கு முறையான தீர்வு தருகிறது 'டார்மாக்'.
இங்கிலாந்தில் இருக்கும் கட்டுமான நிறுவனமான 'டார்மாக்'கின் பிரபல கண்டுபிடிப்புதான் 'டாப்மிக்ஸ் பெர்மிபில் கான்கிரீட்'. அதாவது நீர் ஊடுருவும் கான்கிரீட் அமைப்பு. தண்ணீர் உள்ளே செல்ல முடியாமல் சாலையில் வழிந்தோடும் கதையெல்லாம் இங்கு நடக்காது. இந்த முறையில் சாலைகளை அமைத்தால் நீர் நேரடியாக உறிஞ்சப்பட்டு, அந்த நீர் நாம் அமைத்திருக்கும் சேமிப்பு நிலையம் அல்லது வடிகால் வழியாக, நேரடியாக ஆறு, ஏரி, குளம், கடல் என சென்று சேர்ந்து விடும்.
தற்போதுள்ள நீர் மேலாண்மை முறையினால் முழு மழை நீரும் முறையான இடத்திற்கு சென்று சேர்வது கிடையாது. நகர் முழுக்க கழிவு நீராக மாறி, அது நீர்நிலைகளில் கலக்கிறது. நிலத்தடிக்கும் முழுமையாக செல்வதில்லை. இது அனைத்திற்கும் தீர்வு கண்டிருக்கும் முறைதான் இந்த டாப்மிக்ஸ் கான்கிரீட்.

எப்படி செயல்படுகிறது?
மூன்று முக்கிய அடுக்குகளாக இதை பிரிக்கலாம். முதல் அடுக்கு கூழாங்கற்கள் மற்றும் சிமெண்ட் கலந்த கலவை. இது தண்ணீரை முழுமையாக உள்ளே செலுத்தும். இரண்டாவது அடுக்கு தண்ணீரை முழுதாக உறிஞ்சாமல் மணல் போல குறிப்பிட்ட அளவு மட்டுமே உறிஞ்சும். மீதி நீர் நிலத்தின் கீழேயே ஓடி, ஒன்று சேர்ந்து வெளியேறி விடும். இதில் வெளியேறாத நீர் மற்றும் இரண்டாவது அடுக்கால் உறிஞ்சப்பட்ட நீர் நேரடியாக மூன்றாவது அடுக்கில், நிலத்தடியில் சென்று விடும். இது கூரை போன்ற மேற்பரப்புக்கு ஒத்துவராது. அதே போல மிகவும் பனிபொழியும் அல்லது குளிர்ந்த இடங்களுக்கும் பொருந்தாது. ஏனெனில் தண்ணீர் கீழே வழியாமல் உறைந்து விட்டால், சாலையில் வெடிப்புகள் விழுந்து விடும்.
எங்கெல்லாம் சாத்தியம்?
பார்க்கிங் செய்யும் இடங்களில் இதை செய்யலாம். விளையாட்டு மைதானங்களில் சோதனை முயற்சியாக இது பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல நகர்ப்புறங்களில் முழுமையாக செய்தால், வெள்ளம் போன்ற நேரங்களில் பெரும் விபத்துக்களையும், சேதங்களையும் தவிர்க்கலாம். முழுமையான மழைநீர் மேலாண்மை மூலம், தண்ணீரை சேமிக்க நினைத்தாலும் இதை செய்யலாம்.

மேலே உள்ள வீடியோவை பாருங்கள்... ஒரு நிமிடத்தில் 4000 லிட்டர் தண்ணீரை உறிஞ்சுகிறது.
No comments:
Post a Comment