சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Nov 2015

'என்னைப் பத்தி மீம்ஸ் பண்ணா சந்தோஷம்தானே..!’ - வானிலை அறிக்கை ரமணன் ஜாலி பேட்டி

தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரமணனுக்கு கோயில் கட்டிக் கொண்டாடத குறை. ஏதோ ரமணனே திட்டமிட்டு வடகிழக்கு பருவ மழையைத் தூண்டிவிட்டது போல, அவருக்கு நன்றி மேளா நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். இது சம்மந்தமாக அவரிடம் பேசலாம் என்று தொடர்பு கொண்டால், "சார், மழையை பத்தி மட்டும் பேசுங்க. பர்சனல் கேள்விகள் வேண்டாம்" என்கிறார். வாலண்டியராக மீம்ஸ், ஆபீஸ் என்று பேசியதிலிருந்து...
உங்களுக்கு மழைன்னாலே என்ன ஞாபகம் வரும்?

"வேலைதான் ஞாபகத்துக்கு வரும். இங்க மழை தினமும் ஏதாவது ஒரு இடத்துல பெய்ஞ்சுட்டுதான் இருக்கு. அது எங்க பெய்யும் என்பதை சயின்ட்ஃபிக்காக ஆராய்ந்து சொல்லுறேன். இதுதான் என் வேலை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வானிலை மாறும். அதை தினம் தினம் ஆராய்வது சுவாரஸ்யமானது, சவால்கள் நிறைந்தது. எல்லாருக்கும்போல மழை எனக்கும் பிடிக்கும்."

இதுவரை நீங்கள் சொன்ன வானிலை அறிக்கையிலேயே மறக்க முடியாத அறிக்கை எது?

"அப்படி எல்லாம் எதுவும் இல்லை சார். என் வேலை அது. அதைச் சரியா செய்யறேன். அது நம்ப நாட்டு மக்களுக்கும் உதவியாக இருக்கணும். அதுதான் என் எண்ணம்!"
சிட்டியே தண்ணியில மிதந்தபோது எல்லாரும் ஆபீஸ் போக கஷ்டப்பட்டாங்க. நீங்க எப்படி ஆபீஸ் போனீங்க?

"ஹா..ஹா... எங்க வீடு மேற்கு மாம்பலத்துல இருக்கு. அங்கேயும் மழையினால் முழுக்க தண்ணிதான். அதுனால ரூட் மாத்தி, சுரங்கப் பாதை வழி எல்லாத்தையும் தவிர்த்து வேற வழியிலதான் ஆபீஸ் வந்தேன். அட, மழை பேய்ஞ்சா எனக்கும் சிரமமாத்தான் இருக்கும்ங்க!’’
 
உங்களை பத்தி வரும் மீம்ஸ் எல்லாம் பார்த்தீங்களா?

சிரிக்கிறார். "ம்ம்ம்... நிறைய பேர் சொல்லிட்டு இருந்தாங்க. இப்ப அதை எல்லாம் பார்க்க எங்க சார் நேரம் இருக்கு? அதுல கவனம் செலுத்தினா வேலையை பார்க்க முடியாது. நாம நம்ம வேலையை பார்க்கிறோம். அவங்க ஏதோ மீம்ஸ் பண்ணி சந்தோஷப்படுறாங்க. அவங்களுக்கு சந்தோஷம்னா, நமக்கும் சந்தோஷம். அவ்வளவுதான்."
மாணவர்கள் எல்லாம் உங்களை கொண்டாடுகிறார்களே?

சிரிக்கிறார். "அது அவங்க இஷ்டம்சார்."
 
நீங்க மாணவரா இருந்தப்போ மழையினால் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு இருக்கிறார்களா?

''அது எல்லாம் இப்ப எதுக்கு சார். இந்த வடகிழக்கு பருவ மழையை பற்றி பேசுவோமே."
 
உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்பெஷால இருக்குனு யராவது சொல்லி இருக்காங்களா?

"நிறைய பேர் சொல்லி இருக்காங்க. அது இயற்கையிலயே தனித்துவமாக எனக்கு அமைந்தது. நீங்க அடிக்கடி கேட்ட குரல் என்பதால் உங்களுக்கும் ஸ்பெஷலாக தெரியலாம். மழை பத்தி ஏதாவது பேசலாமே!"
"இதுவரை சென்னை சிட்டியில பெய்த மழை அளவு என்ன?"

"சென்னையில மட்டும் 51 செ.மீட்டர் மழை பெய்து இருக்கிறது. இது வழக்கமாக பெய்யக் கூடிய வடகிழக்கு பருவ மழைதான். இதுக்கு முன்னாடி பல தடவை சென்னையில இவ்வளவு மழை பெய்திருக்கிறது. மற்ற மாவட்டத்தை பொறுத்தவரை காஞ்சிபுரத்தில் அதிக அளவு மழை பெய்திருக்கிறது. சரி, சார் இப்ப வானிலையை திரும்பவும் பார்க்கணும். தாங்க் யூ." 


No comments:

Post a Comment