சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Nov 2015

'டாஸ்மாக்கை மூடிட்டா நீங்கதான் அடுத்தமுறையும் தலைவர்...' ஐடியா கொடுக்கும் அன்புமணி!

உங்க ஊர்ல உள்ள டாஸ்மாக்கை மூடிட்டா அடுத்த முறையும் நீங்கதான் தலைவர் என்று பெண் பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார் அன்புமணி.

'முழக்கம்' கிராம பஞ்சாயத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் கூட்டமைப்பு இன்று தருமபுரியில் ஊராட்சி பெண் பிரதிநிதிகளை அதிகாரப்படுத்தும் மாநாட்டை நடத்தியது.

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள பெண் பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் என  200க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாநாட்டில் பா.ம.க இளைஞரணி தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் எம்.பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சிறப்பாக செயலாற்றிய பெண் பஞ்சாயத்து தலைவர்களை ஊக்குவிப்பதும், உள்ளாட்சி பிரதிநிதிகளாக இருக்கும் பெண்கள் அவர்களுக்கான அதிகாரத்தோடு தனித்து செயல்படவேண்டும் என்பதே மாநாட்டின் நோக்கம்.
முதலில் பெண் பிரதிநிதிகள் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள். முதலில் பேசிய கிருஷ்ணகிரி மாவட்டம், கொலமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட ஜக்கேரி பஞ்சாயத்து தலைவரான லக்‌ஷ்மி “நான் ஐந்தவாது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். எனக்கு பெருசா நாலேட்ஜே கிடையாது. நான் ரெண்டாவது முறையா பஞ்சாயத்து தலைவரா இருக்கேன். முதல்முறை பஞ்சாயத்து தலைவரான போது நான் வெளியவே வரமாட்டேன். எனக்கு என்ன வேலை பாக்கணும்னே தெரியாது. எல்லாத்தையும் என் ஹஸ்பண்டுதான் பாத்துகிட்டார்.

அதுக்குப்பிறகுதான் முழக்கம் அமைப்பு என்ன மாதிரி பெண் பஞ்சாயத்து தலைவர்களையெல்லாம் ஒன்றுதிரட்டி எங்களுக்கு என்ன வேலை, எங்களுக்கான அதிகாரம் என்ன இருக்கு, நாங்க எப்படி வேலை பாக்கணும்னு பயிற்சி அளிச்சாங்க. அப்புறமாதான் எனது உள்ள பவர் எனக்கு தெரிஞ்சது. ரெண்டாவது முறையும் பஞ்சாயத்து தலைவரா தேர்தெடுக்கப்பட்டேன். இப்போ என் ஹஸ்பண்டை வீட்டுக்குள்ள உட்காரவச்சிட்டு, நான்தான் எல்லா வேலைகளையும் பார்க்கிறேன்'' என்று சொல்லி நிறுத்த அன்புமணி கலகலவென சிரித்துவிட்டார்.

மேலும் தொடர்ந்த அவர், ''மக்களுக்கு நல்லது செஞ்சிகிட்டே இருக்கேன். 'நீங்க ஒண்ணும் கவலைப்பாடதீங்க. அடுத்த முறை நீங்க ஓட்டுக்கேக்க வரவே வேண்டாம். அடுத்தமுறையும் நீங்கதான் தலைவர்'னு மக்கள் சொல்றாங்க. நமக்கு உள்ள அதிகாரத்தை தெரிஞ்சுகிட்டு நாம தனிச்சு செயல்படணும்'' என்றார்.

அடுத்ததாக பேசிய கும்மனூர் பஞ்சாயத்தின் வார்டு உறுப்பினர் கலா “வார்டு உறுப்பினருக்கு எந்த அதிகாரமும் கிடையாதுனு நெனச்சிகிட்டு இருந்தேன். இந்த அமைப்பு வந்து பயிற்சி கொடுத்த பிறகுதான் பஞ்சாயத்து தலைவர்களை தட்டிக்கேட்கிற அளவுக்கு வார்டு உறுப்பினர்களுக்கு அதிகாரம் இருக்குனு தெரியும். மூன்று குழுக்கள் அமைச்சு பாலக்கோடு ஒன்றியத்துல ஏராளமான குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தியிருக்கோம். வார்டு உறுப்பினர்தானேனு இல்லாம, அதுக்குள்ள வேலைகளை சரியா செய்யணும். நமக்கான வேலைகளை தெரிஞ்சுக்கணும். அதிகாரத்தை பயன்படுத்தணும்'' என்றார்.
இறுதியாக பேசிய அன்புமணிராமதாஸ் “இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. பெருமையாக இருக்கிறது. ஒவ்வொரு பெண்கள் கழுத்திலும் அட்டை தொங்குகிறது (ஐ.டி.கார்டு). அது சாதாரண அட்டையல்ல. 100 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாது, 70 ஆண்டுகளுக்கு முன்பு படிக்க முடியாது, 50 ஆண்டுகளுக்கு முன்பு வாக்களிக்க முடியாது. 25 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு செல்லமுடியாது. ஆனால், இன்றைக்கு நிலைமை அப்படி இல்லை. ராக்கெட் ஓட்டுறாங்க, கப்பல் ஓட்டுறாங்க, விமானம் ஓட்டுறாங்க. ஜனாதிபதியா இருக்காங்க. எல்லாம் மாறிவிட்டது.

ஒரு பெண் கல்வி கற்றால், அந்த குடும்பமே கல்வி கற்றதுபோல என்று ஒரு பழமொழி இருக்கிறது. ஆண்கள் சுயநலவாதிகள். ஆனால், பெண்கள், காலையில் சீக்கிரம் எழுந்துருச்சி சமைப்பதில் ஆரம்பித்து, இரவு வரை சுயநலம் இல்லாமல் உழைக்கிறார்கள். பெண்கள் சம்பளம் இல்லாத வேலையாட்களைப்போலத்தான் இருக்கிறார்கள். இதற்கு மத்தியில் உங்களையெல்லாம் தலைவர்களாக பார்ப்பதற்கு பெருமையாக இருக்கிறது. பெண் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் முழுமையா போய் சேரவில்லை. எங்க கட்சியில கூட இவர்தான் குமார், பஞ்சாயத்து தலைவர்னு அறிமுகப்படுத்துவாங்க. ஆனா அவருடைய மனைவிதான் தலைவராக இருப்பார். அது எனக்குத் தெரியாது. அது மாற வேண்டும். பெண்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.

நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி என்று எல்லாவற்றிலும் 50 சதவீத ஒதுக்கீடு பெண்களுக்கு வரவேண்டும். எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களிடம் கெஞ்சிக்கொண்டு இல்லாமல், மத்திய அரசின் நிதியை நேராக உள்ளாட்சிகளுக்கு அனுப்ப வேண்டும். உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கிறது. சந்தர்ப்பம் கிடைத்தால் ஆண்களைவிட பெண்கள் சிறப்பாக செயல்படமுடியும். உங்களுக்கு அந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. யாரைப்பற்றியும் கவலைப்படாமல் வேலை செய்யுங்கள். உண்மையாக உழைத்தால் எந்த வழியிலாவது அந்த பயன் உங்களை வந்தடையும். அந்து எப்படி வரும் என்று தெரியாது. உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் என்று நீங்கள் முன்னேற வேண்டும். உங்கள் அதிகாரத்தை நிலைநாட்டவேண்டும்'' என்றவர்,

''தருமபுரியில் மிக முக்கியமான பாதிப்பு என்றால் எதை சொவீர்கள்'' என்று கேட்டார். ''அதற்கு எல்லோரும் ஒயின்ஷாப்'' என்று கோரஸாக சொல்ல, ''ம்...ம் தமிழகத்திலயே அதிகம் மதுவை குடிக்கிறது தருமபுரிதான். அதை ஒழிக்க பாடுபடுங்க, தீர்மானம் நிறைவேற்றுங்க, உங்க பேர்ல கோர்ட்ல கேஸ் போடுங்க, உங்க ஊர்ல உள்ள டாஸ்மாக்க மூடிட்டா நீங்கதான் அடுத்த முறையும் தலைவர். சாராயம் ஒழியப்போகுது, அடுத்த வருஷம் ஒழிஞ்சுரும்'' என்று முடித்தார்.!


No comments:

Post a Comment