சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Nov 2015

ஐஎஸ்ஐஎஸ்-ன் இணையதளத்தை காலி செய்த வயாகரா..!

தொடர் தீவிரவாத தாக்குதல்களால் உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம்,  சின்ன வயாகரா விளம்பரம் ஒன்றை பார்த்து கலங்கிப் போயிருக்கிறது.

எதிர்பாராத வகையில் அடுக்கடுக்காக  தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவது, பிரபல நிறுவனங்களின் இணையப் பக்கங்களை முடக்குவது, அப்பாவி பிணைக் கைதிகளின் கழுத்தை அறுத்து அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றுவது என ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் செய்யும் ஒவ்வொரு செயலும் கொஞ்சம் கூட யாராலும் சகிக்கவும், கணிக்கவும் முடியாதது. ஆனால் இந்த முறை அந்த இயக்கத்தாலேயே கணிக்க முடியாத விஷயம் ஒன்று அதனுடைய இணையதளப் பக்கத்திற்கு நடந்தேறியிருக்கிறது.
ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் மிகவும் பழமைவாத கொள்கைகளை பின்பற்றினாலும், தங்களது கொள்கைகளை மக்களிடம்  கொண்டு செல்ல, முடிந்த அளவு எல்லா தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திவிடுகிறது. பணக்கார தீவிரவாத இயக்கம் எனப் பெயரெடுத்திருக்கும் இந்த இயக்கம், தொழில் நுட்பத்திலும் "நாங்கதான் டான் " என சொல்லும் அளவிற்கு அனைத்து தொழில்நுட்ப விஷயங்களிலும் தங்களது "கன்(gun)" தடத்தைப் பதித்துள்ளது. அப்படிபட்ட இந்த இயக்கத்தின் இணையதள பக்கத்தை பெயர்தெரியாத ஒரு சிறு கும்பல் முடக்கியுள்ளது.

நவம்பர் 24-ம் தேதி ஐஎஸ்ஐஎஸ்ன் இணையதளப் பக்கத்தை முடக்கிய அந்த பெயர் தெரியாத குழு,  அந்த இணையதள பக்கத்தில் வயாகரா மாத்திரைகளின் விளம்பரத்தை பதிவேற்றியுள்ளது. மேலும் அந்தப் பக்கத்தில் "ஐஎஸ்ஐஎஸ் இயக்கமே போதும். உங்களுடைய இயக்கத்தில் நிறைய தீவிரமான ஆட்கள் இருக்கிறார்கள். இப்போது இதை தீவிரமாக படித்துக் கொண்டிருப்பவர்கள் கீழே இருக்கும் விளம்பரத்தை அழுத்துங்கள் (வயாகரா விளம்பரம்), அமைதி அடையுங்கள்" என்று கேலியாக எழுதப்பட்டிருந்தது.
யாராலும் எளிதில் உள்நுழைய முடியாத வகையில் "டார்க் வெப் (dark web)" என்ற முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த இணையதளம், எந்த முறையைப் பயன்படுத்தியும் ஹேக் செய்ய முடியாது என்ற கூறப்பட்டு வந்தது. ஆனால் இது இரண்டு முறை (சென்ற வாரம் கோஸ்ட் செக்சன் என்ற குழுவால் ஹேக் செய்யப்பட்டது) ஹேக் செய்யப்பட்டதால், ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

இது ஐஎஸ்ஐஸ் இயக்கத்திற்கு எதிரான இணையப் போர் என கூறப்பட்டுள்ளது.மேலும் இது போன்ற செயலில் ஈடுபட இன்னும் பல குழுக்கள் களம் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜான் ஹேயஸ் இதுகுறித்து கூறும்போது "இது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. இணையப் போராளிகள் மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்" என்றார்.

நீங்கள் பயன்படுத்தும் ஆயுதம் எதுவானாலும் அது உங்களுக்கு எதிராக ஒருநாள் திரும்பும் என்பார்கள், ஆம்  ஐஎஸ்ஐஎஸ் பயன்படுத்திய தொழில்நுட்ப ஆயுதம் இப்பொழுது அவர்களுக்கு எதிராகவே திரும்பியுள்ளது...!


No comments:

Post a Comment