சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Nov 2015

75% கல்லீரல் செயலிழந்த நிலையில் அமிதாப்பச்சன்: அதிர்ச்சி தகவல்!

னக்கு 75% கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக அமிதாப்பச்சன் தெரிவித்துள்ள தகவலால் பாலிவுட் உலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

ஹெபடைடிஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார் அமிதாப்பச்சன்.
அதில் பேசிய அவர், "கூலி என்ற திரைப்படத்தில் நடித்தேன். அப்போது மோசமான விபத்து ஒன்று நேர்ந்தது. சுமார் 200 பேரிடம் இருந்து ரத்தம் பெறப்பட்டு, 60 பாட்டில்களுக்கும் அதிகமாக எனது உடலில் ரத்தம் ஏற்றப்பட்டது. இதனால் நான் உயிர் பிழைத்தேன்.

2004ல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட போது ஹெபடைடிஸ்-பி வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. எப்படி என மருத்துவர்கள் ஆராய்ந்தபோது, எனக்கு ஏற்கனவே ரத்தம் கொடுத்த இருநூறு பேரில் யாரோ ஒருவருக்கு ஹெபடைடிஸ்-பி வைரஸ் தாக்கியுள்ளது. அவரின் ரத்தம் எனக்கு ஏற்றப்பட்டதால் மெல்ல மெல்ல அந்த வைரஸ் எனது உடலிலும் வேலையை காட்டத்தொடங்கியுள்ளது. தற்போது 75% கல்லீரல் செயலிழந்து விட்டது. 

கடந்த பத்து வருடத்துக்கும் மேலாக எனக்கு உடலில் எந்த மாற்றமும் தெரியவில்லை என்பதால் எந்த பரிசோதனையும் செய்து கொள்ளவில்லை. ஆனால், 'ஆரம்பத்திலேயே மருத்துவ பரிசோதனை செய்திருந்தால் இவ்வளவு தூரம் கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது' என்றனர் டாக்டர்கள். 

ஹெபடைடிஸ்-பி வைரஸ் தாக்குதலால் பயப்படவேண்டாம்  என எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள். 'அயல் நாட்டில் உள்ள அத்தனை மருத்துவ வசதியும் தற்போது இந்தியாவிலேயே கிடைக்கிறது. இதனால் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும்' என டாக்டர்கள் எனக்கு சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். ஒரு மனிதனுக்கு 12% வரை கல்லீரல் வேலை செய்தாலே அவர் ஆரோக்கியமாக வாழ முடியுமாம். எனவே எல்லாரும் அவ்வப்போது கல்லீரலை பரிசோதித்து கொள்ளுங்கள். மஞ்சள் காமாலை வந்தால் அலட்சியபடுத்தாதீர்கள். முக்கியமாக மது அருந்துவதை அறவே தவிர்க்கவும்" என அட்வைஸ் கொடுத்திருக்கிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன். 

இதனால் அமிதாப் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், தான்  நன்றாக இருப்பதாகவும், தனக்கு தற்போதைய நிலையில் எந்த பிரச்னையும் இல்லை என்பதையும் தெரிவித்துள்ள அமிதாப்பச்சன், ஹெபடைடிஸ், கல்லீரல் சிர்ரோசிஸ் போன்ற நோய்கள் குறித்து அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

ஹெபடைடிஸ் பி என்றால் என்ன ? 

கல்லீரலை தாக்குவதற்கு ஹெபடைடிஸ் ஏ முதல் ஜி வரை பல வைரஸ்கள் இருக்கின்றன. இதில் மிகவும் அபாயகரமான வைரஸ் எதுவென்றால் ஹெபடைடிஸ் -பி மற்றும் ஹெபடைடிஸ் -சி ஆகிய வைரஸ்கள் தான். இந்த வைரஸ்கள் கல்லீரல் சுருக்க நோய், கல்லீரலில் புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவை. கல்லீரல் சுருக்க நோய் தீவிரமாக இருந்தால், எதை சாப்பிட்டாலும் செரிக்காது, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக அமையும்.

உடலில் ஹெபடைடிஸ் -பி வைரஸ் இருந்தால் என்ன அறிகுறி ? 

மஞ்சள்காமாலை 
உடல் சோர்வு 
காய்ச்சல் 
அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் 
அடிக்கடி வாந்தி ஏற்படுதல். 

ஹெபடைடிஸ் வைரஸை பொறுத்தவரையில் அவற்றை தடுக்க  இப்போது தடுப்பூசிகள் வந்துவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும், எந்த வயதிலும் போட்டுக்கொள்ளலாம். இதன் மூலம் ஹெபடைடிஸ் வைரஸ் காரணமாக கல்லீரல் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியும். 

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக கல்லீரல் செயலிழப்பு ஏற்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி விடுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் ஆல்கஹால். மது அருந்துவதால் கல்லீரல் சுருக்கம் ஏற்பட்டு நிறைய பேர் கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு, மரணமடைகின்றனர். கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்ட பின்னர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வது சாதாரண விஷயம் அல்ல. இதில் பல பக்க விளைவுகள் இருக்கின்றன. தவிர, 20 லட்சத்துக்கும் அதிகமாக செலவாகும். சிகிச்சைக்கு பிறகும் வாழ்நாள் முழுக்க மாத்திரை, மருந்துகள் எடுத்துகொள்ள வேண்டியிருக்கும். எனவே ஆல்கஹால் அருந்துவதை தவிர்ப்பதே சிறந்த தீர்வு என்கின்றனர் மருத்துவர்கள்.

No comments:

Post a Comment